Saturday, 5 December 2015

259. Yama according to Vedanthin

Verse 259
கேளடா கைகடந்தைம் பொறிவழியில் நின்று
கிருபையுடன் அகண்டம்என்ற பூரணத்தை மைந்தா
வாழடா அறிந்து பர சித்தனாகி
வகையான ஆதிவர்ணாச் சிரமத்தாலே
கோளடா விகற்பமெல்லாங் கண்டு தள்ளி
கூர்மையுடன் மாறாமல் அங்கிசையாய்ச் சார்ந்து
ஆளடா அல்லிநின்ற நீரைப் போலே
அமர்ந்திருந்த அங்கிசைதான் என்பாரப்பா
மாளடா மயங்கிநின்ற பொய்யை விட்டால்
மகத்தான சத்தியந்தான் என்பார்தானே

Translation:
Listen son, remaining in the path beyond the five senses
With mercy, son, the expansive fully complete
know it and live as a Para Siddhan.
By the original varna ashrama
See all the distinctions and push them away, 
live with clear perception, associating with ahimsa.
Like water on lily leaf
They will say, "remaining so is ahimsa"
If the fallacy that causes delusion is left
It is the magnificent truth (satyam) they will say.

Commentary:
Agatthiyar says that a Vedantin would explain yama as follows: going beyond the effects of the senses, remaining associated with the Divine who is unlimited and fully complete, living as one whose thoughts or chittam is eternally associated with Param, living according to one’s original varna or family and ashrama- position according to one’s time in life, dismissing all the distinctions, living like water that remains on a lily leave which remains associated with the leaf but does not merge with it or get influenced by it and leading a life where all the delusions are gone away is yama.

ஒரு வேதாந்தி யமத்தை எவ்வாறு விளக்குவான் என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார். இயமம் என்றால் என்னவென்றால்: புலன்களின் தாக்கத்தைக் கடந்து அகண்ட பரிபூரணமான இறைவனைச் சார்ந்து, எப்போதும் பரத்தையே சித்தத்தில் கொண்டவனாய் தான் பிறந்த வர்ணம் அல்லது குலம், ஆஸ்ரமம் அல்லது வாழ்க்கையில் தான் இருக்கும் பிரம்மச்சாரி, சம்சாரி, போன்ற நிலைக்கு ஏற்றவாறு வாழ்ந்து, எவ்வித வேறுபாடுகளையும் ஏற்றுக்கொள்ளாமல் தனது நிலை மாறாமல், அல்லி இலையின் மீது அதன்மேல் இருந்தாலும் ஒட்டாமல் இருக்கும் நீரைப் போல சம்சாரத்தில் இருந்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் வாழ்ந்து பொய்யையும் மயக்கத்தையும் ஏற்படுத்துபவற்றை முற்றும் தள்ளி பெரும் உண்மையுடன் வாழ்வதே இயமம்.

இதுவே இயமத்தைப் பற்றி வேத்தந்தி கொண்டிருக்கும் கருத்து என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment