Thursday, 31 December 2015

266. Mithaakaaram and saucham

Verse 266
அகிலமெல்லாந் தானாகி அசைவுமற்று
அகண்டபரி பூரணமா இருந்தோம் நாம்தான்
தகிலமேல்லாம் உண்டசலம் போலே நின்று
தன்னைப் போல் ஊரைப் பார்க்கில் மிதா சாரந்தான்
பகிலமென்றப் பிரதிகையும் நிறந்தன்னாலே
பரவிநின்ற பாசத்தைப் பருவமாக
ரகில மென்ற காமமொடு குரோதந்தன்னை
உட்சவுசம் புறச் சவுச மென்பார் காணே

Translation:
With the whole world becoming Self, without stirring
We remained as the all pervading fully complete (akanda paripuranam)
Remaining as the water/movement that consumed all the universes
Treating others as oneself- they say it is midhaacharam
The world, the replica, is due to color (by the self)
The attachment that remains spread as stages
The desire (kama) and hatred (krodha) the qualities
They would say inner and outer purification.

Commentary:
Agatthiyar is continuing to talk about control of food or mithakaaram.  The entity that is eating is the waters of pralaya.  He says that mithakaaram is remaining in the state of Brahman, without stirring, seeing everything as self, in the state of akanda paripurna, as if all the universes have been swallowed by the waters of pralaya is the state of Brahman.  This is mithaakaaram. 

Kashmir Saivam describes two stages while approaching the ultimate state.  They are (1) seeing everything as self (sadvidya), (2) seeing self as everything (sadasiva principle) and ultimate becoming everything.  Agatthiyar is describing the last state here.

Next, Agatthiyar describes saucham.  It means purification of dirt. Desire or kama is inner dirt and hatred or krodham is outer saucham.


மிதாகாரத்தைப் பற்றி இப்பாடலிலும் தொடருகிறார் அகத்தியர். இங்கு உண்பது பிரளய நீர்.  மிதாகாரம் எனபது பிரம்ம நிலையை, அசைவற்று, அனைத்தையும் தானாக, அகண்ட பரிபூரண நிலையில் எல்லாவற்றையும் உண்ட பிரளய நீரைப் போல இருப்பதே மிதகாரம் என்கிறார் அகத்தியர்.

காஷ்மீர சைவத்தில் உச்ச நிலையை அடையும் படிகளாக இரு நிலைகள் விளக்கப்படுகின்றன.  அவை அனைத்தையும் தானாகக் காண்பது, தானே அனைத்தும் என்பதைக் காண்பது மற்றும் உச்ச நிலையான தானே அனைத்தாகவும் ஆவது என்பவை.  இதில் முதல் நிலை சத்வித்யா என்று இரண்டாம் நிலை சதாசிவநிலை என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பாடலில் அகத்தியர் இந்த இரண்டும் நிலைகளையும் கடந்த உச்ச நிலையைக் குறிக்கிறார்.  இதனை அடுத்து அவர் சௌசம் என்பதை விளக்குகிறார்.  சௌசம் என்பது அழுக்கைத் தூய்மைப்படுத்துவது என்று பொருள்.  காமம் என்பது உள் சௌசம் குரோதம் என்பது வெளி சௌசம் என்று அவர் கூறுகிறார். 

1 comment:

  1. The first line of guru patanjali's verse, sounds like this "yogaha, சித்த விருத்தி நிரோதaha"

    also check "seeing everying as self,"

    ReplyDelete