Wednesday, 16 December 2015

262. Aakshepam

Verse 262
பாரப்பா சித்தாந்தி சொல்லுவாரும்
பதிவான சமுசாரம் ஆகாதென்பார்
நேரப்பா தன்னுடம்பில் வருத்தம் விட்டு
நிசமாக சுகவருத்த லிதயந்தன்னில்
சாரப்பாத் தன்னனந்தம் வந்தாலுந்தான்
சாதகமாய் சத்துருவுக் கிதமே செய்யில்
பேரப்பா ஆக்ஷேப மிதைஎன்பார்கள்
பேய் மக்களிதுவல்ல சொல்லக் கேளே

Translation:
See son, the Siddhanthi will say
Worldly life is not to be desired.
Leaving the attachment to one’s body
Having sincere happiness and sorrow in the heart
Even if problems occur for one 
Do good to even one's enemies
They call this aakshepam
The ghostly people, this is not the truth, listen to me.

Commentary:

Agatthiyar seems to be describing another component, aakshepam, of iyama.  Aakshepam means objection.  However, none of the other works talk about this as a part of iyama.  He says that aakshepam is not refusing interest in one's body but seeking pleasure of the heart. It is not doing good to others even if that brings not so good consequences to one. He says these are not aakshepam and goes ahead to explain it in the next verse.

இப்பாடலில் அகத்தியர் ஆக்ஷேபம் என்ற விஷயத்தை விளக்குகிறார். ஆட்சேபம் என்றால் மறுப்பு.  இந்த சொல்லின் பொருள் ஒருவர் தனது உடல் வருத்தத்தை விட்டு இதய சுகத்தை நாடுவதல்ல, தனக்குத் துன்பம் வந்தாலும் பிறருக்கு, எதிரியாக இருந்தாலும்சரி, நன்மை செய்யவேண்டும் என்பதல்ல என்று கூறும் அகத்தியர் இந்த சொல்லை அடுத்த பாடலில் விளக்குகிறார்.
அகத்தியரைத் தவிர வேறு ஒருவரும் ஆக்ஷேபத்தை இயமத்தின் ஒரு பகுதியாகக் குறிப்பிடவில்லை. 

2 comments: