Saturday 24 September 2016

491. Pati, pasu, pasa

Verse 491
பதியான பதியதுதான் பரசொரூபம்
பசுவான வாசியடா காலுமாச்சு
விதியான பாகமாடா வீடதாச்சு
வீடரிந்து கால் நிறுத்தி யோகஞ் செய்தால்
கெதியான முச்சுடரும் ஒன்றாய் நின்று
கேசரத்தில் ஆடுகின்ற கெதியைப் பார்த்தால்
மதியான மதிமயக்கந் தானே தீர்ந்து
மாசற்ற சோதியென வாழலாமே

Translation:
The locus, the Lord, is the Para svaroopa
The pasu, the vaasi is the leg/air
The part that was fate became the house
Knowing the house, if yoga is performed, stopping the breath/establishing the leg
The triple flames remain as one
If the state of their dance is seen in kecharam
The delusion, the madhi will be exhausted
Can live as the faultless effulgence.

Commentary:
The three entities pati, pasu and paasa form the central theme of saiva philosophy.  Pati refers to the Lord, pasu the soul and paasa the attachment.  This attachment can be towards the Pati when it grants liberation, and when it is towards worldly things it binds the pasu to the world.  The mahavakhya tat tvam asi represents this.  Tat or that means the Pati, tvam or thou means the soul and asi is the means through which the pasu becomes pati.  Here Agatthiyar says that the pati is the para svaroopa or the Divine.  It is the prapancha prana sakthi.  The pasu or the limited soul is the prana sakthi in the body.  This is the vaasi or air principle in the body which is used by the prana as its vehicle.  The pasa is the fate which is the locus where the prana remains.  This refers to both the body and the supreme space or vetta veli.  One show know this and performs kumbaka or cessation of breath.  Then the prana will remain within without going in and out.  It will remain in perfect harmony with the prapancha prana sakthi.  Then the three flames of sun, moon and fire will remain together and dance in kecharam.  One of the meanings for charam is frontier.  Kecharam is ka+e+ charam which means the extreme of ka or space and e is sakthi.  Thus it refers to the supreme space as well as the pinda akasa or the body.  The frontier of limited existence as the body is the ajna chakra.  The frontier of supreme space is the peru veli or supreme space.  Then all the delusions of limitedness disappear and the yogin lives as the faultless effulgence.

Agatthiyar describes the difference between jyothi or effulgence and sudar or flame in his work, nadhantha saram.  He says that jyothi is Siva while the flame is sakti.  Jyothi refers to effulgence, the great light.  Sudar or flame refers to fire in its form.  Thus jyothi refers to the formless state of the Divine while flame refers to its state with a form.  When he says that one can remain as faultless effulgence Agatthiyar is referring to the formless state or the origin. 

சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற மூன்றும் அடிப்படைக் கோட்பாடுகளாகும்.  அவற்றில் பதி என்பது பரம்பொருளைக் குறிக்கும், பசு என்பது ஜீவனையும் பாசம் என்பது பந்தத்தையும் குறிக்கும்.  இந்த பந்தம் பரம்பொருளிடத்தில் இருந்தால் அது முடிவில் முக்தியைத் தரும்.  அதே பந்தம் உலகப் பொருள்களிடத்தில் இருந்தால் அது சம்சாரத்தில் மூழ்கச் செய்யும்.  தத் த்வம் அசி என்ற மகாவாக்கியம் பதிக்கும் பசுவுக்கும் இடையே உள்ள உறவைக் குறிக்கும்.  அசி என்பது பசு பதியை அடையும் வழி என்று திருமூலர் கூறுகிறார்.
இப்பாடலில் பதி என்பது பர சொரூபம் அதாவது பிரபஞ்ச பிராண சக்தி என்றும் பசு என்பது உடலில் உள்ள பிராண சக்தியான வாசியான கால் அல்லது காற்றுத் தத்துவம் என்றும் அகத்தியர் குறிப்பிடுகிறார். மூச்சு அல்லது சுவாசத்தை வாகனமாகக் கொண்டு பிரபஞ்ச பிராணன் உடலினுள் வருகிறது.  இந்த உண்மையை அறிந்து கால் நிறுத்தி இருக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதுவே கும்பக நிலை எனப்படுகிறது.  பாசம் என்பது வீடு என்றும் அவர் மேலும் கூறுகிறார்.  இங்கு வீடு என்பது ஜீவனுக்கு உடல், பிரபஞ்ச பிராணனுக்கு வெட்ட வெளி.  இவ்வாறு அறிந்து யோகத்தைச் செய்தால் முச்சுடர்கள் எனப்படும் சூரியன் சந்திரன் அக்னி என்ற மூன்றும் ஒன்றாக கேசரத்தில் நின்று ஆடும் என்கிறார் அவர்.  கேசரம் என்ற சொல்லை க+ ஏ+சரம் என்று பிரித்தால் க-வெளி, சரம்- எல்லை, இ- சங்கல்ப சக்தி என்று பொருள் தருகிறது.  நமது உடலில் எல்லை என்பது ஆக்ஞை, வெளியில் எல்லை என்பது வெட்டவெளி.  இவ்வாறு கேசரத்தில் நின்று ஆடும் என்பது ஆக்ஞையில் முச்சுடர் தரிசனத்தைக் குறிக்கிறது. இந்த நிலையில் மதியில் உள்ள மயக்க விலக ஒருவர் மாசற்ற சோதியாக இருக்கலாம் என்கிறார் அகத்தியர்.


இங்கு சோதிக்கும் சுடருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்கலாம்.  தனது நாதாந்த சாரம் என்ற நூலில் அகத்தியர் சோதி என்பது சிவன், சுடர் என்பது சக்தி என்கிறார். சோதி என்றால் ஒளி அதன் உருவநிலை சுடர். இவ்வாறு மாசற்ற சோதி என்பது ஆதிநிலையைக் குறிக்கிறது. 

No comments:

Post a Comment