Sunday 11 September 2016

484. Rasavadha

Verse 484
கூட்டி மிகச் சம்பளத்தால் நன்றாயாட்டி
கூர்மையுடன் மேல் கவசஞ் சீலை செய்து
வாட்டி மிகப் புடம் போட்டு எடுத்துப் பார்த்தால்
மகத்தான சாதிலிங்கம் கட்டிப் போகும்
தாஷ்டிகமாய்ச் சவ்வீரம் அப்படியே கட்டுஞ்
சார்வறிந்து கட்டுமுறை திட்டம் பார்த்தால்
நாட்டியதோர் ரசவாதங் கைக்குள்ளாகும்
நாதாந்த புலத்தியனே இன்னங் கேளே

Translation:
Mixing them together, grinding them
Cover the top with an shield of cloth
Toast it and with a low flame. Then
The glorious jatilingam will be solidified
The savveeram will become solidified
When the correct consistence is collected
The alchemy will be attained
Nadhantha Pulathiya! Lisen somemore.

Commentary:
The “seelai” mentioned here seems to be manosilai the pashana for the fire element.  Thus all the things mentioned in the previous verse are covered with the fire of kundalini and toasted.  The jathi lingam may mean the sign for the jati.  According to the Siddhas there are only two jati, man and woman.  So jati lingam means the sign for a man or a woman, the fluids that are characteristic for them.  It will solidify.  The savveeram may be the prana as he has mentioned it as veeram in a pervious verse.  It will terminate in kumbaka.  When all these occur, it is then the correct consistence.  This is the pinnacle of alchemy or rasavadha.  Agatthiyar calls Pulathiya as nadhantha Pulathiya.  This process will take the yogin to the nadhantha state.


இங்கு சீலை எனப்படுவது மனோசிலை. அது தீ தத்துவத்தைக் குறிக்கும்.  அவ்வாறு முன் பாடலில் கூறிய வஸ்துக்களை குண்டலினி அக்னியினால் புடம் போடுதலைக் குறிக்கிறார் அகத்தியர்.  அப்போது சாதிலிங்கம் கட்டும் என்கிறார்.  சாதி லிங்கம் என்பது இது என்று குறிக்கும் குறியீடு.  ஆத்மாவின் குறி பரவுணர்வு,  அது உறுதிப் படுவதை அகத்தியர் சாதிலிங்கம் கட்டும் என்கிறார்.  சவ்வீரம் என்பது பிராணனைக் குறிக்கும்.  முன் பாடல் ஒன்றில் வீரம் என்பது வாசி என்று அகத்தியர் குறிப்பிட்டுள்ளார்.  இவற்றை சரியான பதத்தில் சேகரித்தால் ரசவாதம் சித்தியாகும் என்கிறார் அவர்.  இவற்றை அவர் நாதாந்த புலத்தியா என்று புலத்தியரை விளித்துக் கூறுகிறார்.  இவ்வாறு செய்தால் புலத்தியர் நாதாந்த நிலையை அடைவார் என்று அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment