Sunday 11 September 2016

485. Solidifying the rock salt

Verse 485
கல்லுப்பு கட்டு
கேளடா சவுக்காரம் அன்ன பேதி
கெடியான அப்பிரகம் முட்டையோடு
வாளடா பொன்னுருக்கும் பொரிக்காரந்தான்
மகத்தான சந்குடனே ஆறுங்கூட்டி
சூளடா மேனிச்சார் தன்னால் ஆட்டிச்
சுகமான கல்லுப்புக் கங்கி பூட்டி
மாளடா ரவிதனிலே காயவைத்து
மார்க்கமுடன் இன்னமொரு வரிசை கேளே

Translation:
Solidification of rock salt

Listen about savukkaaram (kundalini Sakti) anna bedhi (earth principle)
Along with appirakam and the egg/egg shell
The porikaaram that melts the gold
And the conch- mix the six
Grind it with the juice of kuppai meni
Starting the fire for the rock salt
Dry in the sun and die,
Listen about another method.

Commentary:
Agatthiyar called savukkaaram as anda maadhu or the lady of the universe in a previous verse.  We say that savukkaaram is sa+ukaaram.  Sa means glorious or famous, Ukaaram is Sakthi.  Anna bedhi, we saw before to correspond to the semen which is a transmutation of the energy from the food.  Annam- food, bedhi or bedhitthal means “changes into”.  The dhatu or rasa are the created by the energy from food.  Egg or eggshell corresponds to muladhara.  It is also called hiranya garbha or the golden egg, the potential of principles that expand as the universe.  The pori kaaram means the essence of senses, the mind.  This melts the gold, the muladhara chakra, the principles it represents. To this added the conch, which represents the nadha principle All these are ground together with “meni saaru”.  This means the juice in the body, amrit or the energy from the semen.  Meni or kuppai meni is a popular greens that grows in the wild.  It got its name as it turns the body which is like kuppai or garbage into clean body.  It is used as a laxative and a wound healer. It melts the kapha or the internal impurities and brings them out.  Then the rock salt or the vaalai will become firm.  It is heated slowly with the fire of kundalini and dried in the surya mandala.

Even though these verses seem like repeats of the same principle they are useful as medicinal preparations also.  Agatthiyar has presented the physical and philosophical effects of these procedures in this work which is a complete representation of the medical and philosophical knowledge that he is imparting on us.

சவுக்காரம் என்பது அண்டமாது அதாவது பிரபஞ்ச சக்தி என்று அகத்தியர் முந்தைய பாடல் ஒன்றில் கூறியுள்ளார்.  ச+உகாரம்= சவுக்காரம்.  மங்களமான உகாரமே சக்தி.  இந்த சுக்காரத்துடன் அன்ன பேதியைச் சேர்க்க வேண்டும்.  அன்னம் பேதித்து ரசம் அல்லது தாதுக்களாகிறது.  அதாவது அன்னத்தில் உள்ள சக்தியே தாதுக்களில் சேகரிக்கப்படுகிறது.  இவ்வாறு அன்ன பேதி என்பது சுக்கிலத்தில் சேகரிக்கப்பட்ட பிண்ட பிராணன்.  இத்துடன் அப்பிரகம் மற்றும் முட்டையை சேர்க்க வேண்டும் என்கிறார் அகத்தியர், இது முட்டையோடாகவும் இருக்கலாம்.  இங்கு முட்டை எனப்படுவது ஹிரண்ய கற்பம் எனப்படும் பிரபஞ்ச முட்டை.  உலகமாக விரியும் தத்துவங்கள்.  அவற்றுடன் சங்கைச் சேர்க்கவேண்டும். சங்கு என்பது நாத தத்துவத்தைக் குறிக்கும். இவற்றுடன் பொன்னை உருக்கும் பொரிகாரத்தைச் சேர்க்க வேண்டும்.  பொறிகளின் காரம் என்பது மனம்.  அதுவே பொறிகள் கொண்டுவரும் அறிவைப் பெறுகிறது.  இங்கு உருக்கப்படும் பொன் மூலாதாரம் குறிக்கும் தத்துவங்கள், இவ்வாறு உருக்கும்போது உடலில் உள்ள மலங்கள் உருக்கப்படுகின்றன  அவற்றை மேனிச்சாரால் ஆட்ட வேண்டும்.  மேனிச்சாறு என்பது குப்பைமேனியின் சாறு.  இந்தத் தாவரம் காடுகளிலும் மேடுகளிலும் வளருவது.  குப்பை போன்ற உடலைத் தூய்மைப்படுத்துவதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.  பொதுவாக இது மலமிளக்கியாகவும் உடலில் கோழையை உருக்கி வெளியில் கொண்டுவருவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.  இங்கு மேனிச்சாறு என்பது உடலில் உள்ள அமிர்தத்தைக் குறிக்கும்.  அது மூலாதாரத்துக்கு வந்து அங்குள்ள மலங்களை உருக்கி வெளிக்கொணருகிறது.  இவ்வாறு உள்ள கல்லுப்புக்கு, மூலாதாரத்துக்கு, அங்கி பூட்ட வேண்டும்.  அதை ரவி அல்லது சூரிய மண்டலத்தில் காயவைக்க வேண்டும்  என்று கூறுகிறார் அகத்தியர்.


இந்தப் பாடல்கள் அனைத்தும் ஒரே வழிமுறையைக் கூறுவதைப் போலத் தோன்றுகின்றன.  அதற்குக் காரணம் அகத்தியர் இப்பாடல்களை உடல் ரீதியாகவும் தத்துவரீதியாகவும் பாடியிருப்பதுதான்.  இங்கு கொடுக்கப்பட்டுள்ள வஸ்துக்கள் உட்லுக்கு மருந்தாக செயல்படுகின்றன.  அகத்தியரே கூறியுள்ளதைப் போல இந்த நூல் அவரது தத்துவம் மற்றும் மருத்துவ அறிவின் பூரணத் தொகுப்பாக உள்ளது.

No comments:

Post a Comment