Verse 483
லிங்கக்கட்டு
உண்மையுள்ள தங்காதி மாது தன்னை
உறுதியுடன் காணுதற்கு வகையைக் கேளு
தண்மைஎன்ற நாகரசம் ஒன்றாய்க் கூட்டி
சரியாக பொரிக்காரம் கெந்தி சேர்த்து
நன்மையுடன் கலசப்பால் தன்னாலாட்டி
நாதாந்த லிங்கமதுக் கங்கிபூட்டி
செம்மையுடன் ரவிதனிலே காயவைத்து
சிவசிவா சுண்ணாம்பு முப்புங் கூட்டே
Translation:
Linga solidification
The truthful golden Lady, the origin,
Listen, to the way to see her firmly,
Joining the cool, nagarasam
Adding porikkaaram and gendhi
Grinding it with the milk from the kalasa
Adding fire to the nadhantha lingam
Drying it in the ravi,
Siva sivaa! Add slaked lime and muppu.
Commentary:
This verse can be explained in physical as well as philosophical terms. Physically, it means add the nagarasa, porikaaram, gendhi or Sulphur and grind them together with milk from a pot. Add the fire to this nadhantha lingam, dry it in sun before adding slaked lime and the salt, muppu.
Philosophically it explains the process of bringing the world created by the five elements, the asuddha maya to a state of abidance.
Element
|
Metals
|
Salts
|
Poison/pashanam
|
Uparasam
|
|
Earth
|
Gold
|
Induppu/kal uppu
|
thotti singhi. Kaarmukhi,coral ten
|
Abhiragam gaandham, silajith, bhu nadham
|
|
Water
|
Lead
|
Siva saaram/sakti saaram
|
Gowri silver, horse teeth, sozhi gendhi,
|
Kilinji, conh, guru andam, snail, crab
|
|
Thejas
|
Brass/sembu
|
Vedi uppu savuttu uppu
|
Gendhi, manosilai
|
Nimilai,pooram, asti, elephant, tortoise
|
|
Vayu
|
Iron
|
Thurusu ven kaaram
|
aridhaaram
|
Anna bhedhi romam, kalvamadham, chaandra bedhi
|
|
Akasa
|
Naagarasam
|
Vazhalai pooram
|
soodham
|
Thuttham, ayakkaandham,
|
|
From the above table we see that the akasha or the ajna should merged with svadhistana and manipurakam. The amrit from lalata should be added to them and mixed well. The nadhantha lingam is the Divine which is beyond the state of nadha, the fire is that of kundalini (mind, consciousness, breath with prana) and it is dried by ravi or the surya mandala, the space between navel and throat chakra. Then the sunnam or the void that separates the surya mandala and chandra mandala should be crossed and the triple salt of appu, uppu, mappu or akara, ukara, Makara or the omkara, the ajna should be joined with this. Thus this procedure describes how to reach the ajna from the lower chakras.
மேலே உள்ள பாடலை இருவிதங்களில் விளக்கலாம். நாகரசம், பொரிகாரம், கெந்தி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கலசத்தில் உள்ள பாலால் ஆட்டி இந்த நாதாந்த லிங்கத்துக்கு தீ எழுப்பி அதை வெய்யிலில் காயவைக்க வேண்டும் அதன் பின் அதனுடன் சுண்ணாம்புடன் முப்புவைக் கூட்டவேண்டும் என்று இதற்குப் பொருள் கூறினால் அது ரசவாதத்தில் ஒரு முறையாகிறது.
இதற்கு தத்துவ ரீதியாகப் பொருள் கூற வேண்டுமென்றால் கீழ்க்காணும் பட்டியலைப் பார்க்கவும்.
பூதம்
|
உலோகம்
|
உப்பு
|
பாஷாணம்
|
உபரசம்
|
பூமி
|
தங்கம்
|
இந்துப்பு கல்லுப்பு
|
தொட்டி சிங்கி, கார்முகி, பவழம் பத்து
|
அபிரகம் காந்தம், சிலாஜித், பூநாதம்
|
நீர்
|
ஈயம்
|
சிவசாரம், சக்தி சாரம்
|
கவுரி வெள்ளி, குதிரைப் பல். சோழி கெந்தி
|
கிழிஞ்சி சங்கும் குரு அண்டம், நத்தை, நண்டு
|
நெருப்பு
|
செம்பு
|
வெடி உப்பு, சவுட்டு உப்பு
|
கெந்தி, மனோசிலை
|
நிமிளை, பூரம், அஸ்தி, யானை, ஆமை
|
காற்று
|
இரும்பு
|
துருசு, வெண்காரம்
|
அரிதாரம்
|
அன்ன பேதி ரோமம், கல்வமதம், சந்திர பேதி
|
ஆகாயம்
|
நாகரசம்
|
வழலை, பூரம்
|
சூதம்
|
துத்தம், அயக்காந்தம்
|
இங்கு நாகரசம் என்பது ஆகாயம் அல்லது ஆக்ஞை. அதை பொரிகாரம் கேந்தி எனப்படும் சுவாதிஷ்டானம், மணிபூரகத்துடன் சேர்த்து அதனுடன் லலாடத்திலிருந்து கீழே இறங்கும் பாலை விட்டு ஆட்டி, நாதாந்த லிங்கமான இதற்கு குண்டலினி அக்னியை (மனம். உணர்வு, பிராணனுடன் சேர்ந்த மூச்சு) இட்டு அதை ரவி எனப்படும் சூரிய மண்டலத்தில் உலரச் செய்ய வேண்டும். அதன் பின் சுன்னம் எனப்படும் பாழைக் கடந்து முப்புவான அகார உகார மகாரமான ஓங்காரத்தை சேர்க்கவேண்டும், ஆக்ஞையை அடையவேண்டும் என்று பொருள்கூறலாம்.