Thursday, 29 September 2016

494. Jayaneer

Verse 494
செயநீர்
பாரப்பா வெறியெடுத்த உதாரச் செந்தீ
பாய்ந்தேறிப் பத்தி மன மலையாமல்தான்
காரப்பா அதற்குமொரு கருவைக் கேளு
கருவான துரிசுசவ்வீரங் கூட்டி
பாரப்பா பச்சைஎன்ற கற்பூரத்தோடு
தனித்த பச்சைப் புழுகுடனே நாலுங் கூட்டி
காரப்பா அரைத்துப் பீங் கானில் வைக்க
நேசமாக ஊருமடா செயநீர் தானே

Translation:
Water of victory (jayaneer)
The ruddy fire of blood which attained vigor
Climbing up, with the mind unwavering
Seek it,  Listen to the essence of it.
Adding the thurusu(air principle) and savveeram (the prana) together
Along with the menthol
The green civet- adding all the four
Grinding them and placing them in the porcelain
The water of victory (jayaneer) will secrete/

Commentary:
Jayaneer or water of victory is the fluid that secretes from lalata.  The blood becomes hot.  The mind remains unwavering.  The thurusu and savveeram are the breath and the prana that rides on it.  The menthol corresponds to consciousness, civet to muladhara.  These are brought together and placed at the vishuddhi.  Then jayaneer secretes.


செயநீர் என்பது லலாடத்திலிருந்து சுரக்கும் நீர்.  அதைச் சுரக்கச் செய்ய ரத்தம் சூடாகி மேலே பாய வேண்டும்.  மனத்தை அசையாமல் நிற்கச் செய்யவேண்டும்.  துருசு எனப்படும் காற்றான மூச்சையும் சவ்வீரம் எனப்படும் பிராணனையும் ஒன்றாகக் கூட்ட வேண்டும்/  அவற்றுடன் பச்சைக் கற்பூரத்தைப் போல கரையும் ஆத்மாவையும் புனுகு எனப்படும் நிலத்தத்துவத்தைக் குறிக்கும் மூலாதாரத்தையும் சேர்க்கவேண்டும்.  இவற்றை ஒன்றாகக் கூட்டி பீங்கான் எனப்படும் விசுத்தியில் வைத்தால் லலாடத்திலிருந்து அமிர்தம் சுரக்கும். இதுவே செயநீர்.  

No comments:

Post a Comment