Verse 493
தானான அண்டபிண்ட மண்விண்ணாச்சு
சகல சராசரங்களெல்லாம் அதுதானாச்சு
வானென்ற வடிவுதன்னைக் காணாரெல்லாம்
வாசா கோசரமாகப் பேசலாச்சு
ஊனென்ற உடலுயிரை உண்மையாக
உண்மையென்ற ஞான நெறி காணாரெல்லாம்
வீணென்ற வேடமதைத் தரித்துக்கொண்டு
வெறியெடுத்த நாய்போலே திரிவான் பாரே
Translation:
The anda pinda
became the earth and sky
It became all
the mobile and immobile
Those who did
not see the form of the sky
They started
talking about it
The body soul
complex- as the truth
Those who do
not see the truth, the wisdom path
Adorn various
garbs
And roam
around like a mad dog.
Commentary:
The andapinda
or the supreme form, the supreme body described in the previous verse appears
as the earth, the sky and as all the living and nonliving entities. Thus, everything is the supreme in its state
with a form. Those who do not know this
soul body complex, the soul being the Divine and the body being the manifested
universe or the soul and body complex of the divine, the andapinda form talk
about it variously. They adorn various
garbs like saints, philosophers and ritualists and roam around like a mad dog,
mouthing empty talks.
பரம்பொருளின் வேதாந்த பிண்ட உருவே, அண்டபிண்ட நிலையே
உலகமாகவும் பல உயிர்களாகவும் உள்ளன. இவ்வாறு
உடலும் உயிருமாக, அண்டத்தை உடலாகக் கொண்டு பரம்பொருள் இருப்பதை அறியாதவர்கள்
பலவிதமாகப் பேசுகின்றனர். குருக்கள், ஞானிகள்,
மதவாதிகள் என்ற வேடங்களைத் தரித்துக்கொண்டு அவர்கள் வெறி பிடித்த நாயைப் போலத்
திரிகின்றனர் என்று அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment