Verse 488
ஆச்சப்பா இன்னமொரு வேதை மார்க்கம்
அருமையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
தோச்ச்சப்பா அரிதாரம் சாதிலிங்கம்
சுகமான பொரிக்காரஞ் சவ்வீரந்தான்
பாச்சப்பா வகைக்கிமஞ்சி சாடி பூட்டி
பதிவாக கமலரசந் தன்னாலாட்டி
நீச்சப்பா தங்கமொரு பலத்தகட்டில்
நீ மகனே கவசம்து நன்றாய்ச் செய்யே
Translation:
Yes son, another alchemical method
My beloved Pulatthiya! Listen to this
The aridhaaram and jati lingam
The pleasurable pori kaaram savveeram
Direct it son, to the five types, locking it
Grinding it carefully with the essence of the lotus
On a golden plate
Make an armor, son.
Commentary:
This method is similar to the previous verses except the fact that Agatthiyar tells Pulathiyar to make a coating on the golden plate. As we saw before, the golden plate coreresponds to the muladhara chakra. The aridhaaram, jati lingam, pori kaaram, savveeram and kamalarasam are as mentioned before.
ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிர முந்தைய பாடலில் கூறியதைப்போலவே உள்ளது இப்பாடல். பொரிகாரம் சவ்வீரம், ஜாதி லிங்கம், அரிதாரம் கமலரசம் என்பவற்றை முன்னமே பார்த்தோம். இவ்வற்றை தங்கத் தகட்டில் பூசுமாறு கூறுகிறார் அகத்தியர். தங்கம் என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.
No comments:
Post a Comment