Thursday, 15 September 2016

487. Silver brass alchemy

Verse 487
காணவே கட்டி நின்ற உப்போடொக்க
கருவான சாதிலிங்கக் கட்டுங் கூட்டி
ஊணவே கமலரசந் தன்னாலாட்டு
உத்தமனே வகையறிந்து புடமே செய்தால்
தோணவே லிங்கமுடன் உப்புஞ் சேர்த்து
சுத்தமுடன் கட்டியது சித்தியாகும்
பேணவே சித்தியுடன் கட்டும் லிங்கம்
பெரிதான வெள்ளி செம்பில் வேதையாச்சே

Translation:
Equal measures as the salt
Tying together the jati lingam
Grind it with the juice of the lotus
The Supreme one! If you heat process it, knowing the method
The lingam and salt with merge together
Will solidify and siddhi perfectly
Tying together of the lingam with siddhi
Is the great alchemy of silver copper.

Commentary:
This verse seems to be explaining the bringing together of nadha and bindhu.  Nadha is the salt or uppu, the ukara.  The jati lingam is the bindhu which gives a specific form.  These two are merged together with the amrit from the lalata.  This mixture is heated with the fire of kundalini.  Agathiyar says if this is done it will grant great siddhi.  It is the alchemy of silver and brass.  Here silver refers to suklam or semen. Brass refers to the fire element.  Thus, this method is the way to reclaim the energy locked up in the semen.


இப்பாடல் நாத பிந்துக்களைக் கூட்டுவதைப்போலத் தோன்றுகிறது.  உப்பு என்பது உகாரம் அல்லது சக்தி, நாதம்.  சாதிலிங்கம் என்பது பிந்து.  மனிதன், விலங்கு என்பது போன்ற சாதியைக் குறிப்பது அவற்றின் உருவமே.  இவ்வாறு நாத பிந்துக்களை கமலரசம் எனப்படும் அமிர்தத்துடன் சேர்த்து குண்டலினி அக்னியால் புடம் போதத்தால் பெரும் சித்தி கிட்டும் என்றும் அதுவே வெள்ளி செம்பு வேதை அதாவது வெள்ளி எனப்படும் சுக்கிலத்தை செம்பு எனப்படும் அக்னி தத்துவத்தால் கட்டும் ரசவாதம் என்கிறார். இவ்வாறு சுக்கிலத்தில் சேகரிக்கப்பட்டுள்ள பிராண சக்தி மீட்கப்படுகிறது.

No comments:

Post a Comment