Verse 489
தங்க ஈயம்
செய்யப்பா மண் சீலை வலுவாய்ச் செய்து
சிவசிவா புடந்தனில் வைத்துப் பார்த்தால்
மையப்பா மையமென்ற தங்க ஈயம்
மார்க்கமுடன் செம்புதனில் பத்துக்கொன்று
வையப்பா வைத்து மிகப்பார்த்தேனென்று
வன்மையுடன் சொன்னார் என் ஆசான் தானும்
கையப்பா தானிருந்து உருக்கிக் கொண்டு
கனமாக நாலிலொன்று வெள்ளி சேரே
Translation:
The golden lead
Make the “man seelai” firmly
Siva sivaa! If you place it in the heat and examine it
The center, the golden lead
One for ten- brass,
Place it and see it
My guru told me very well,
Holding the hand (kai) so, melting it
Add the four for one of silver.
Commentary:
Agatthiyar has titled the verses as golden lead. Gold corresponds to muladhara, lead corresponds to svadhistana. Thus, the verse talks about processing the principles represented by these two chakras. He says the golden lead is centered. This means the principles are located to the middle nadi, sushumna. It also means the centering in pranayama, the madhya state. The fire, again, is the kundalini. Brass corresponds to the fire. He uses the term “patthukkonru” which generally translates to one tenth proportion. Here it means “killing the ten” here the ten may be the ten types of vital breaths, the ten senses- 5 karmendriya, 5 jnanendriya, that is killing the dependence on the senses for knowledge, or 5 elements and 5 of their subtle qualities which cause the limitation. These are killed by the fire of kundalini.
Agatthiyar is referring to his guru Murugan or Siva in this verse. Kai which means hand in Tamil has two meanings. It may refer to pranayama and mudras. “ai” refers to the state of holding everything with and having the primal energy, the prana sakthi. Four to one silver- silver corresponds to the moon and thus this expression means adding the mind or manas which is one of the four- manas, buddhi, chittham and ahamkaram.
அகத்தியர் இப்பாடலை தங்க ஈயம் என்று அழைக்கிறார். தங்கம் என்பது மூலாதாரத்தையும் ஈயம் சுவாதிஷ்டானத்தையும் குறிக்கின்றன. இவ்வாறு தங்க ஈயம் என்பது மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் குறிக்கும் தத்துவங்களாகும். மையமாக்குவது என்பது பிராணனை சுழுமுனை நாடியில் செலுத்துவது. இவ்வாறு செய்து பத்துக்கொன்று செம்பு சேர்த்து என்பது ஒரு விகிதாசாரத்தைப் போலத் தோன்றினாலும் அதற்குப் பத்தைக் கொன்று என்று பொருள் கூறினால் அது பத்தான இந்திரியங்கள், பத்தான பூதங்களும் அவற்றின் தன்மாத்திரங்களும் மற்றும் பத்துவித வாயுக்கள் என்று பலவற்றைக் குறிக்கிறது. இவற்றைக் கொல்வது என்பது இந்திரியங்களைக் கடப்பது, பூதங்கள் ஏற்படுத்தும் அறிவைக் கடப்பது மற்றும் கும்பகத்தில் இருப்பது என்று பொருள் தருகிறது.
இப்பாடலில் அகத்தியர் தனது ஆசானைக் குறிப்பிடுகிறார். அவர் முருகப் பெருமானாகவோ சிவபெருமானாகவோ இருக்கலாம். அடுத்து அவர் கை அப்பா தானிருந்து உருக்கிக்கொண்டு என்கிறார். இங்கு கை என்பது முத்திரையைக் குறிக்கலாம். கை என்பதை க்+ஐ என்று பிரித்தால் ஐ என்பது அனைத்தையும் உள்ளடக்கி ஆதி சக்தியைத் தன்னுள் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது. இவ்வாறும் இத்தொடர் கும்பக நிலையைக் குறிக்கிறது. நாலில் ஒன்று வெள்ளியைச் சேர் என்பதில் வெள்ளி என்பது சந்திரனையும் மனத்தையும் குறிக்கிறது. இவ்வாறு நாலு என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நாலில் ஒன்றான மனத்தைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment