Verse 495
தானான செயநீரில் மைந்தா கேளு
தகடான அரிதாரந் தோய்த்து தோய்த்து
வானான ரவிதனிலே வைத்துப் பார்க்க
மாசத்து நீருமடா துருசு நீறுங்
கோனான சவ்வீரங் கூட நீறும்
கூர்மையுடன் மூன்று நீர் ஒன்றாய்க் கூட்டி
தேனான வெள்ளியொரு பலத் தகட்டில்
மூர்க்கமுடன் தான் பூசிப் புடத்தைப் போடே
Translation:
In the self, the jayaneer, listen son,
Dipping the plate, aridhaaram, repeatedly
Placing it in the sky, the ravi
The supreme sath will liquefy, the thurusu will also liquefy
The king, the savveerram will also liquefy
Adding these three together, carefully,
On a plate with one measure of silver
Smearing it forcefully, process with slow heat.
Commentary:
This verse talks about the process after the descent of the nectar from lalata. The aridharam may refer to the air principle and thus the breath. Thus this may refer to the nectar being raised through the chakra with the help of the breath. They are placed in ravi may mean pindala nadi or the surya mandala, more the latter. Then the supreme sath or maa satthu, which may be the prana sakthi in the body indicated by the essence, the semen, the thurusu or breath and savveeram, which may be mind or consciousness will come together. They are merged and brought to silver plate which refers to sukra or the heart chakra, the anahata. The yogi holds them at the heart chakra.
லலாடத்திலிருந்து சுரக்கும் அமிர்தத்தை கீழ்ச் சக்கரங்களில் இறக்கி அவற்றை மேலே இதயத்தில் ஒரு யோகி ஏற்றுகிறார். அதை இப்பாடல் குறிப்பிடுகிறது. அரிதாரம் என்பது சக்கரங்கள். அவற்றை செயநீர் எனப்படும் அமிர்தத்தில் தோய்த்து ரவி எனப்படும் சூரிய மண்டலம் அல்லது பிங்கள நாடியில் இடவேண்டும். அப்போது மாசத்து அல்லது மகா சத்து எனப்படும் பிராண சக்தி, துருசு எனப்படும் மூச்சு மற்றும் சவ்வீரம் எனப்படும் மனம் அல்லது உணர்வு மூன்றும் நீறாகும். அவற்றை ஒன்றாக்கி வெள்ளி தகடு எனப்படும் அனாகத்தில் மூர்க்கமாகத் தடவி புடம் போடவேண்டும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment