Verse 482
தானென்ற மாய்கைவிளை யாட்டில்லாவிட்டால்
சங்கற்ப விகற்பம் என்ற சார்பங்கேது
கோனென்ற குருவருளால் எண்ணிப்பார்க்கில்
கொண்டபடி நின்றதுவே பரசொரூபம்
தேனென்ற அரூபமதற்காக வேண்டி
செய்ததொரு பலதொழிலால் குத்தமில்லை
ஊனென்ற பலதொழிலுக் குருதியான
உறுதியுள்ள தங்கமடா உண்மைதானே
Translation:
Without the play of '"I" the maya
Where is sankalpa and vikalpa?
When thought out it, by the grace of Guru, the king
That which remains so is Para svaroopa
For the sake of the honey-like aroopa
There is no fault in the several actions for its sake
For the several actions performed by the body
The gold of firm guru dhyana is the truth.
Commentary:
Agatthiyar says that everything is the play of ahamkara or the I-sense and this is none other than maya. Sankalpa and vikalpa are a particular thought which precedes an action or termination of an action. They are mental constructs that arise due to the sense of "I". This sense of "I" causes limitation. Among the innate impurities or mala, the ahamkara is the last to be given up. Without the sense of I a lifeform does not have limited existence. It becomes all-pervading.
This I sense of the Supreme Reality, its bodham was the cause for the manifested world. Hence, Agatthiyar says that every action or lack of it is due to the I sense of the Param. They are forms of Param. Thus, the manifested universe with all the actions, are forms of the Divine.
This I sense causes the Param or Pati to exist as pasu or the Jiva. When the Jiva realizes this and performs all the actions for the sake of the Divine, without the feeling of "I" am doing it, "I" am enjoying its fruits then the actions become faultless as it is the I sense of the Divine performing the actions and not the I sense of Jiva. Thus, the Jiva is freed of the karma due to those actions. Hence, the Jiva should perform the actions, contemplating on the Ultimate Truth, the Divine, the Guru, the one who removes the darkness of ignorance, the entity that remains as everything.
This method of performing an action for the sake of the Divine with the Divine as the beneficiary is called satvika tyagam, the sacrifice of doership and the beneficiary status.

எல்லாமே "தான்" என்னும் மாயையின் விளையாட்டு என்று கூறுகிறார் அகத்தியர். தான் என்னும் உணர்வே அகங்காரம் எனப்படுகிறது. அகம்-தான், காரம்- உணர்வு. இந்த உணர்வு மாயையால் ஏற்படுகிறது. இங்கு மாயை என்பது இறைவனின் படைப்புச் சக்தி. இதை சுத்த மாயை என்பர். இந்த தான் என்னும் உணர்வு ஒரு செயலைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்ற சங்கல்ப விகல்பங்களை ஏற்படுத்துகிறது.
இந்த உலகம் இறைவனின் தான் என்னும் உணர்வால், போதத்தால் தோன்றியது என்று சித்தர்கள் கூறுகின்றனர். இந்த உணர்வால் இறைவன் தன்மேல் காலம், தேசம் என்ற கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு ஜீவனாகக் காட்சியளிக்கிறான். ஜீவனும் தனது "தான்" என்னும் உணர்வால் செயல்களைப் புரிகிறது. இவ்வாறு எல்லா செயல்களும் இறைவனின் மாயையால், சுத்த மாயையால் ஏற்படுகின்றன என்கிறார் அகத்தியர். இந்த உணர்வே ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற சங்கல்பத்தையும் செய்ய வேண்டாம் என்ற விகல்பத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த செயலினால் ஏற்படும் பலனைத் "தான்" அனுபவிப்பதாக ஜீவனை உணரச் செய்கிறது. இதனால் ஒரு செயலை பரம்பொருளுக்காகச் செய்கிறோம் என்று உணர்ந்து ஒரு ஜீவன் செய்தால் அந்தச் செயல் பரம்பொருளின் தான் என்னும் உணர்வால் நடைபெறுவதாகிறது. அது, விருப்பு வெறுப்புக்களினால் செய்யப்படாமல் இருப்பதால், குற்றமற்றதாகிறது. இதனால் ஒரு செயலை குருதியானத்துடன், உண்மை எனப்படும் இறைவனைக் கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும் என்கிறார் அகத்தியர். குரு என்ற சொல்லுக்கு பிரம்மம், இருட்டை விலக்குவது என்ற இரு பொருள்கள் உள்ளன.

No comments:
Post a Comment