Verse 476
கேளப்பா பானையிலே பசும்பால்விட்டு
கிருபையுடன் தலைவாழைக் குருத்து வாங்கி
வாளப்பா குருத்தினால் வேடுகட்டி
மைந்தனே அதின்மேலே கெந்திபோட்டு
ஆளப்பா அடுப்பேற்றி எரிக்கும்போது
ஆதியென்ற கெந்தியது தைலமாகும்
கேளப்பா இல்லாத தைலந்தன்னை
கூர்மையுடன் பீங்கானில் வாங்கிக் கேளே
Translation:
Listen son,
adding the cow’s milk to the pot
With mercy,
receiving the young stalk of plaintain tree
Covering the
top with the stalk
Son, adding
the gendhi over it
When burnt by
kindling the stove
The origin,
the gendhi will become a medicated oil
Listen son,
the medicated oil that is not present
Collect it
carefully in porcelain.
Commentary:
This verse can
be interpreted in two ways, the alchemical way and the philosophical way. “pasum paal” generally means cow’s milk, Here it means the essence, the prana. Siddhas recommend a method called “madai
maattral” or changing the course. This
generally means the semen that is flowing down is turned upwards and made
beneficial. This can be understood as
follows:
The energy
from the food we consume is used to provide the impetus for various physical
process. A part of it is turned into the
saptha dhatu or seven essential raw materials. They are rasa or plasma, raktha-
blood, mamsa- muscle, meda- fat, asthi-bone, majja- bone marrow and sukla-
reproductive fluid. Starting from rasa
one leads to the next and the energy so transformed is stored in the body in
the semen or reproductive fluid. This energy
is generally wasted by humans. Siddhas
prescribe a method by which this energy can be reclaimed and used for spiritual
ascendence. Thus the cow’s milk
mentioned in this verse may mean the reproductive fluid also. This fluid, through this process loses its
watery state and become thicker in consistence.
Agatthiyar may be referring to this as thailam.
. “thalai
vaazhai kurutthu” generally means the stalk of the young plaintain tree. Here it means the sushumna nadi. The gendhi, as usual, means the muladhara. Thus he principle represented by the muladhara
will become thailam or medicated oil. In
the next line Agatthiyar gives a clue so that we do not make wrong
assumptions. He says “the medicated oil
that is not present”. Thus, it is not
that the muladhara will melt and become a liquid. We should remember that the muladhara chakra
is in the subtle body. It is not a
physical entity. Turning it into a
thailam means turning the principles represented by muladhara into beneficial
entities. Collecting them in the porcelain
means collecting them at the vishuddhi.
இப்பாடலுக்கு ரசவாத நோக்கிலும் தத்துவ நோக்கிலும் பொருள்
கூறலாம். பசும்பால் என்றால் பசுவின் பால்
என்றும் ரசம் என்றும் பொருள்படும். ஒன்றன்
பாலை எடுப்பது என்பது அதைப் பிழிந்து அதன் ரசத்தை எடுப்பது என்று
பொருள்தரும். இங்கு பால் என்பது வேறொரு
தத்துவத்தையும் குறிக்கலாம்.
சித்த யோகத்தில் மடை மாற்றல் என்ற ஒரு வழிமுறை உள்ளது. நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சக்தி
உடலில் நடைபெறும் வேலைகளின் செயல்பாட்டுக்கு உதவுகிறது. அந்த சக்தியின் ஒரு பகுதி உடலில் சப்த
தாதுக்கள் எனப்படும் ஏழு பகுதிகளாக மாற்றபடுகிறது. அந்த தாதுக்கள் ரசம், ரத்தம்,
மாமிசம், மேத்ஸ் அல்லது கொழுப்பு, அஸ்தி அல்லது எலும்பு, மஜ்ஜை மற்றும்
சுக்கிலமாகும். இந்த தாதுக்கள்
ஒன்றிலிருந்து ஒன்று தோன்றுகிறது.
உதாரணமாக மாமிசம் நுண்மையடைந்தால் கொழுப்பாகிறது. இவ்வாறு சக்தி முடிவில் சுக்கிலம் அல்லது
சுரோணிதம் எனப்படும் பிறப்பை ஏற்படுத்தும் நீரில் சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த சக்தியை இதிலிருந்து பெற்று ஆன்மீகப்
பயணத்துக்குப் பயன்படுத்தும் முறையே மடைமாற்றல்.
இவ்வாறு இப்பாடலில் பசும்பால் என்பது இந்த திரவத்தையும் குறிக்கலாம்.
தலைவாழைக்குருத்து என்பது வாழை மரத்தின் நடுவில் இருக்கும்
இளம் தண்டைக் குறிக்கும். இங்கே அது
சுழுமுனை நாடியைக் குறிக்கிறது. இந்த
குருத்தினால் பசும்பாலை வேடு கட்டி, அதனுடன் கெந்தி எனப்படும் மூலாதார சக்கரம்
குறிக்கும் தத்துவங்களைச் சேர்த்து குண்டலினி என்னும் அடுப்பை ஏற்றி எரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது தைலமாகும் என்கிறார்
அகத்தியர். இந்த தைலம் என்பதை நாம் தவறாக
எண்ணக்கூடாது என்பது அவர் “இல்லாத தைலமத்தை” என்கிறார். இதனால் உண்மையில் இங்கு தைலம் ஏதும்
தோன்றுவதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தத்துவங்கள் இவ்வாறு பயனுள்ள வஸ்துவாக
மாற்றப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது.
இந்த தைலத்தை பீங்கானில் கவனமாக வாங்க வேண்டும் என்கிறார். பீங்கான் என்பது
பொதுவாக விசுத்தி சக்கரத்தைக் குறிக்கும்.
No comments:
Post a Comment