Verse 465
ஏகமென்ற தேசியடா ஏகாதேசி
இன்பமுடன் துவாதேசி ரெண்டுமாகி
தேகமென்ற வாசியடா திரையோதேசி
செம்மையுடன் சதுர்த்தெசி சேர்ந்து ஒன்றாய்
ஆகமென்ற ஆகமங்கள் அறிவேதானாம்
அடங்கிநின்ற வாசியம்மா வாசியாச்சு
பாகமுடன் வாசிநின்ற அம்மாவாசி
பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்ப் பாரே
Translation:
The
singularity, the desi is ekadesi
With
bliss dvadesi, the two.
The
body, the vaasi, thrayodesi
Adding
the chaturdesi to it
It
became the knowledge- Agama,
The
vaasi that stood in abidance became the ammaavaasi
The
vaasi that stood so with distinctions
See
it as the locus of the Self.
Commentary:
Agatthiyar
is continuing the numbers beyond ten in this verse. He calls the state of singularity as Eka desi
or the Ekadasi. When bliss or Ananda emerges
in this singularity it became two, the dvadesi.
This singularity and duality remain in the body as Sivam and Sakti. When prana or vaasi is added to it in the
body it became thrayodesi or the three entities, jiva, Sivam and Sakthi. The knowledge that emerged in this process
are the Agama and this is the state of four or chaturdesi. The fifteenth day after chaturdasi is
amavasa. Agatthiyar calls the state
where the vasi remains in kumbaka, the supreme state as amavasi or the maha
vaasi. This vaasi or the prana in the
body is the locus of the self.
Agatthiyar
answers the question, Where does the jiva reside in the body. It is not remaining in the heart or the
muladhara or any such specific location.
It is present as the universal force or prana that pervades the
body.
பத்துக்கு மேற்பட்ட எண்களை இப்பாடலில்
தொடருகிறார் அகத்தியர். ஒருமை நிலை அல்லது
தானாக இருக்கும் நிலையே ஏகாதேசி அல்லது ஏகாதசி.
இந்த ஒருமை நிலையில் இன்பம் தோன்றும்போது இரண்டாக இருக்கும் நிலை
தோன்றுகிறது. இதுவே துவாதசி. இந்த இரண்டுமே சிவம் சக்தி என்று உடலில்
இருக்கின்றன. இதில் வாசி அல்லது பிராணன்
சேர்ந்து ஒரு தேகமாக மாறும்போது அது த்ரயோதசி.
இதுவே ஜீவன், சிவம் சக்தி என்ற மூன்றாகும். இவற்றில் அறிவு தோன்றும்போது சதுர்த்தசி
ஏற்படுகிறது. இந்த அறிவே ஆகமமாகிறது. இந்த சதுர்த்தசிக்கு அடுத்த நாள்
அமாவாசை. வாசி எனப்படும் உயிர்ச்சக்தி கும்பகத்தில்
நிற்கும்போது அது அம்மாவாசி என்கிறார் அகத்தியர்.
இந்த பிராணனே உடலில் ஆத்மாவின் இருப்பிடம் என்கிறார் அவர்.
உடலில் பிராணன் எங்கிருக்கிறது என்ற கேள்விக்குப்
பதிலளிக்கிறார் அகத்தியர். சிலர் ஆத்மா
இதயத்தில் இருக்கிறது, மூலாதாரத்தில் இருக்கிறது என்பர். ஆத்மா பிராணனாக உடல்முழுவது விரவியிருக்கிறது
என்று அகத்தியர் இப்பாடலின்மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
No comments:
Post a Comment