Verse 504
நாகக்கட்டு
சேர்த்துமிகத் தானுருக்க நாகந்தானும்
தீர்க்கமுடன் தானிருந்து கண் விட்டாடும்
பார்த்துமிக அந்நேரந் தங்கஞ் சேறு
பதிவான வீரமது கூடச் சேறு
காரத்து நன்றாய்ச் சேர்த்ததை நீஎடுத்துப்பாரு
கனகமயமானதொரு களங்கதாகும்
ஆற்றுமற்றுக்காசான் களங்குதன்னை
அன்புவைத்து வெள்ளி செம்பி லணைத்துப் பாரே
Translation:
Adding all and melting it, the snake
Will dance at its locus
Watching for that time add the gold
Add the veeram along with it.
And the kaaram. Check it and see,
You will see a “kalangu” which is golden
The kalangu which is the teacher for the atma
Embrace it in silver and copper, with love.
Commentary:
Kalangu is preparations of metals with mercury and made into a pill. The naagam means thutthanaagam or zinc. It also means the kundalini sakthi. Add the gold means waking it at muladhara. To that is added breath and consciousness. Agatthiyar calls this combination as the “kalangu”. He says this will be golden and calls this as the teacher of the atma as it confers divine consciousness. This combination is raised to the upper chakras that Agathiyar call as silver and copper.
நாகம் என்றால் துத்தநாகம் மற்றும் குண்டலினி சக்தி என்று பொருள். அது தனது இடமான மூலாதாரத்தில் எழுந்து தீர்க்கமாக ஆடும். அதை மூலாதாரம் குறிக்கும் தத்துவங்களுடனும் வீரம் காரம் எனப்படும் பிராணன் மற்றும் உணர்வுடன் சேர்த்தால் அது பொன்மயமான களங்காகும். களங்கு என்பது உலோகங்களை பாதரசத்துடன் சேர்த்து செய்யும் ஒரு கலவை. இதை ஆத்மாவுக்கு ஆசான் என்று அகத்தியர் அழைக்கிறார். ஏனெனில் அதுவே ஆத்மாவுக்கு பரவுணர்வைத் தருகிறது. அதை வெள்ளி செம்புடன் சேர்க்குமாறு அவர் கூறுகிறார். அதாவது உயர் சக்கரங்களுடன் சேர்க்கவேண்டும்.
Nalla vilakkam... Mikka nandri
ReplyDeletenanri aiya
ReplyDeleteNagpash se mukti ka mantra bataye
ReplyDeletePray to the Siddhas they will show you the way. The snake here is kundalini.
ReplyDeletePlease visit www.siddharyogam.com to get more details.
ReplyDeleteAnd get agathiyargnanam ebook also