Agatthiyar
Saumya Sagaram/
Vadha saumyam 1200
Vadha saumyam 1200
Kaappu
சோதி எனும் மனோன்மணியைத் தியானஞ் செய்து
சுகமான சௌமிய சாகரத்தைப் பாட
ஆதிஎனுங் கணபதியும் வல்லபையுங்காப்பு
அரசான பிரம்மனொடு சரஸ்வதியுங்காப்பு
நீதியெனும் மாலுடனே லட்சுமியுங் காப்பு
நின்றிலங்கும் ருத்திரனும் உருத்திரியுங்காப்பு
ஓதியதோர் மயேஸ்பரனும் மயேஸ்பரியுங்காப்பு
உறுதியுள்ள சதாசிவனும் மனோன்மணியுங் காப்பே
Translation:
Contemplating
on Manonmani, the effulgence
To sing the
pleasurable Saumya Sagaram
The origin,
Ganapathy and Valabhai, for protection
The king,
Brahma and Sarasvathi, for protection
The rule, Maal
and Lakshmi, for protection
The glorious
Rudra and Rudri, for protection
The recited
Maheswara and Maheswari, for protection
The firm
Sadasiva and Manonmani, for protection.
Commentary: Saumayam means cool, auspicious,
pleasan. Before embarking on the great
endeavor of composing a 1200 verse work, The ocean of auspiciousness, saumya
sagaram, Agatthiyar is praying to the deities for protection. The deities he is invoking are the athipathi
or keepers of the five cakra, muladhara, svadhistana, manipuraka, anahatha and
vishuddhi. Ganesha and his consort
Vallabhai are the keepers of muladhara. The other deities invoked in this verse
are the athipathi of svadhistana, manipuraka, anahata and vishuddhi cakra
respectively. Thus Agatthiyar gives us a
clue about the topic in saumya sagaram.
It is about about the cakra and ascent of consciousness.
சௌமியம் என்றால் ரம்மியமான, குளுமையானது,
மனதுக்குகந்தது என்று பொருள். ஆயிரத்து இருநூறு
பாடல்களைக் கொண்ட சௌமிய சாகரம் என்ற நூலைத் தொடங்கும்முன் அகத்தியர்
காப்புச் செய்யுளில் பல தெய்வங்களை வணங்குகிறார்.
அவர் வணங்கும் தெய்வங்கள் நம் உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்களின் அதிதேவதைகள். மூலாதரத்தின் அதிபதி கணபதியும் அவரது சக்தியான
வல்லபையும். அதே போல் இப்பாடலில் உள்ள பிற
தெய்வங்களும் முறையே சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் விசுத்தி ஆகிய சக்கரங்களின்
அதிதேவதைகள் ஆவர்.
நன்றி நன்றி நன்றி என்று வணங்குகிறேன் அம்மா
ReplyDeleteஎல்லாம் வல்ல அகத்தியரின் செயல். ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteJust came into it mother ; thank you for this gift
ReplyDeleteThanks to Agatthiyar and the Siddhas
Deleteதியானம் சிறப்பாக செயல்பட இந்த பதிவுகள் மிகச்சிறந்த உதவி செய்கிறது.
ReplyDeleteஎல்லாம் ஈசன் செயல்..
ReplyDelete