Verse 7
திரஞ்சொன்ன மகிமையை நான் பெற்றுக்கொண்டு
திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்து
பரஞ் சேர்ந்த பூரணமாம் அறிவிலேறி
பாடினேன் சௌமிய சாகரத்தை மைந்தா
சாரமான வாசியில்நான் உறுதி கொண்டு
சந்தோஷமாக ஈராறு நூறும்
வரஞ் சேர்ந்த தவமதனால் பாடி நானும்
மகத்தான வேதியர்முன் வைத்தேன் தானே
Translation:
The greatness
that was utter efficiently, I received it
Examined the
Sanskrit carefully
Climbing to
the consciousness which is the fully complete associated with the Param
Son, I sang
the Saumya Sagaram
Holding the
breath, the vaasi, firmly
Happily, the
two six hundreds
I sang it
through the austerity linked with the boon
I placed it
before the magnificient Vedhiyan.
Commentary:
Agatthiyar
says that he received the upadesa or teaching from Siva directly. Siva also gave him the book in Sanskrit. Agatthiyar examined the book critically,
remained in the awareness which is the state of sakthi, the poornam, associated
with Param, held the vaasi and remained in tapas that was granted to him through
a boon and sang this composition of 1200 verses. He then offered it to Siva, the Vedhiyan, the
embodiment of knowledge, Veda.
Sakthi is called
poornam while Siva is the kaaranam or cause.
The sakti associated with Param is parai. Manifestation starts with Parai the
embodiment of nadha.
சிவனிடமிருந்து உபதேசம் பெற்ற அகத்தியர் அவரிடமிருந்து
வடமொழியில் ஒரு நூலையும் பெற்றார். அந்த
நூலை ஊன்றிப் பார்த்து, பரத்துடன் சேர்ந்த பூரணமாம் பரையான அறிவுநிலையில் நின்று,
வாசியை உறுதியாகப் பற்றியபடி வரத்தினால் தான் பெற்ற தவநிலையில் இருந்தபடி ஆயிரத்து
இருநூறு பாடல்களைக் கொண்ட இந்த நூலைத் தான் இயற்றினேன் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு
இயற்றிய நூலை வேதியனான அறிவுருவாக இருக்கும் இறைவனின் முன் அவர் சமர்ப்பித்தார்.
No comments:
Post a Comment