Verse 6
தானான சதுரகிரி மூலங் கண்டு
தவமான சிவயோகத் திருக்கும்போது
கோனான வேதியரை அடுத்து நானும்
குறியான பூரணத்துக்கு உறுதி கேட்டேன்
ஊனான சத்தி சிவம் என்று பின்னும்
உண்மையுள்ள அகஸ்தியனே வாவாவென்றார்
தேனான வடமொழியைக் கையில் ஈந்து
திருவான பூரணத்தின் திறஞ் சொன்னாரே
Translation:
Seeing the
self, the origin, the chaturagiri
While
remaining in the austerity, Sivayogam
Approaching
the Vedhiyar, I
Asked
assurance for the fully complete (poornam) the depiction
The body, the
Sakthi and Siva
He bid, “The
truthful Agasthya, come, come”
Giving the
honey-like Sanskrit, on hand
He explained
the nature of the auspicious poornam.
Commentary:
Agatthiyar is
telling us about how this composition began.
He tells us that while he was in the supreme state of Self, with
awareness about Chaturagiri the origin, he approached the Sakthi and then Siva
and asked about the details regarding the poornam or fully complete. Chaturagiri represents a square that is
depicted at the muladhara. It represents
the four directions. The soul remains in
the state of turiyatheetha at the muladhara being associated with Siva. Agatthiyar is describing this state
here. In that state he asked Siva about
the poornam. This term refers to Sakthi. Usually Siva is called kaaranam or cause and
sakthi is called poornam. It may also
refer to the soul in the supreme state before it reaches the state of
distinction-less supreme. Sakthi is said
to constitute the body that is animated by Sivam. Hence, Agatthiyar is saying “oonaana satthi
sivam enru pinnum”. This Sakthi Siva bid
Agatthiyar to come near and handed him the book in Sanskrit and explained to
him about the poornam.
அகத்தியர் தான் இந்த நூலை எவ்வாறு தொடங்கினேன் என்று
இப்பாடலில் கூறுகிறார். அவர் சதுரகிரி
எனப்படும் மூலாதாரத்தில் ஆத்ம நிலையில் சிவத்துடன் சேர்ந்த யோக நிலையில்
இருக்கும்போது சிவ சக்தியை நெருங்கி பூரணத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டியதாகவும்
அப்போது அவர்கள் தன்னை அருகில் வா என்று அழைத்து வடமொழியில் இருந்த ஒரு நூலைக்
கையில் கொடுத்து பூரணத்தைப் பற்றிக் கூறினார் என்கிறார். சதுரகிரி என்பது நாற்கோணத்தைக் கொண்ட மூலாதாரத்தைக்
குறிக்கும். நாற்கோணம் நான்கு திசைகளைக்
குறிக்கும். மூலாதாரத்தில் ஆத்மா துரியாதீத
நிலையில் சிவனுடன் சேர்ந்து இருக்கும்.
இந்த நிலையை அகத்தியர் குறிப்பிடுகிறார்.
பூரணம் என்பது பொதுவாக சக்தியைக் குறிக்கும். சிவனைக் காரணம் என்றும் சக்தியைப் பூரணம்
என்றும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
பூரணம் என்பது ஆத்மா சிவநிலையை அடைவதற்கு முந்தைய நிலையையும்
குறிக்கலாம். ஊனான சத்தி சிவம் என்று
பின்னும் என்ற தொடர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறது. நமது உடல் சக்தி அதில் உயிர்ப்பை அளிப்பது
சிவம். இதைத்தான் அகத்தியர் இங்கு
கூறுகிறார். இப்பாடலின் மூலம் சிவன்
தனக்கு அளித்த ஒரு வடமொழி நூலின் தமிழ் வடிவமே இந்த சௌமிய சாகரம் என்பது
புரிகிறது.
No comments:
Post a Comment