Sunday, 25 January 2015

2. Kaappu-2

Verse 2
மணியான ரவிமதியுஞ் சுழினைக் காப்பு
மகத்தான வேதியர் தன் பாதங்காப்பு
கணியான நால்வேத அந்தங் காப்பு
கருணைவளர் சாஸ்திரமோர் ஆறுங்காப்பு
அணியான ஆதார சொரூபங் காப்பு
அருளான அமிர்தரச போதங் காப்பு
தனியான பராபரமாஞ் சோதி காப்பு
சதாநந்தப் பூரணமாந் தாய்காப்பாமே

Translation:
The special sun moon and sushumna, for protection
The sacred feet of the expert of Veda, for protection
The chiefs, the terminus of the four Veda, for protection
The six sastra that nurture mercy, for protection
The wisdom, the nectar of grace, for protection
The luminosity, the singular, Paraparam, for protection
The eternally blissfull, fullycomplete mother, for protection.

Commentary:  After the lords of the cakras Agatthiyar is praying to the essence that work through the cakras.  He prays to the sun, moon and sushumna or the pingala, ida and sushumna nadi the three main energy channels for spiritual progress.  Next he is praying to the “vediyar” for protection.  While this term generally mean Brahmanas, who are experts of the Veda it actually means God who is the essence, the embodiment of Veda, the knowledge that should be known.  “kani” or “gani” is the chief of gana or a group.  The chief of knowledge systems are the Vedanta.  Hence, Agatthiyar is praying to them for protection.  The Siddha philosophy is Siddhantha Vedantha that has Vedanta as its base but without erroneous misconceptions. The same is true for sastra also.  Besides these, Agatthiyar seeks protection from the “aadhaara svaroopa”. Aadhara are the six cakras the loci for the states of consciousness. Svaroopa is the form of the soul, its nature of being consciousness.  Amritha rasam is the divine nectar that confers deathlessness.  Bodham is supreme wisdom.  The form of divine as effulgence is called paraparam.  It is the singularity. This state is attainable only through Sakthi.  It is paraparai who takes the soul the ultimate state of paraparam.  Hence, Agatthiyar concludes the verse by praying to mother Sakthi who is the fully complete bliss.
In Kashmir Saivism Siva is called the sat, sakthi is the chith or awareness, Siva and Sakthi being together is the aanandam or bliss.  This Sat chith anandam is existence, awareness and the bliss that is born from this awareness.

சக்கரங்களின் அதிபதிகளை வேண்டிய பிறகு அகத்தியர் அடுத்து சக்கரங்களின் மூலம் செயல்படும் சக்திகளைக் காப்பாக வேண்டுகிறார்.  சூரியன் சந்திரன் சுழினை என்னும் மூன்று நாடிகள்  ஆன்மீகத்தில் முக்கியமானவை.  இவற்றை அடுத்து அவர் வேதியரை வேண்டுகிறார்.  பொதுவாக இந்த சொல் பிராமணரைக் குறிப்பிட்டாலும் அதன் உட்பொருள் வேதம் அல்லது அறியப்பட வேண்டிய அறிவின் உட்பொருளான இறைவனை, வேதத்தைத் தனது அங்கமாக உள்ளவனைக் குறிக்கும்.  கணி என்பது
கணத்தின் தலைவன் என்று பொருட்படும்.  அறிவு தரும் விஷயங்கள் என்னும் கணத்தில், கூட்டத்தில் தலையாய இடத்தை வகிப்பது வேதாந்தம்.  இதனை அடுத்து அகத்தியர் ஆதார சொரூபத்தை காப்பாக  இருக்க வேண்டுகிறார்.  ஆதாரம் என்பது சக்கரங்களைக் குறிக்கும்.  அதில் ஜீவன் உணர்வுநிலையில் இருக்கும்.  இந்த உணர்வு நிலையே, அறிவு நிலையே ஜீவனின் சொரூபமாகும்.  அதனால் அகத்தியர் உணர்வு நிலைகளை இங்கு விளிக்கிறார் என்று கொள்ளலாம்.  ஆதார சொரூபம் என்பது அனைத்துக்கும்  ஆதாரமாக இருக்கும் இறைவனை, பரவுணர்வைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  அமிர்த ரச போதம் என்பது லலாட சக்கரத்திலிருந்து ஊறும் அமிர்தபானம் மற்றும் அது அளிக்கும் உச்ச ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும்.

இறைவனின் ஒளி உருவம் பராபரம். அதை அடையச் செய்வது சக்தி அல்லது பராபரை.  அவளே பரமபோதம்.  அதனால் அகத்தியர் சக்தித் தாயை சதானந்த பூரணத்தைக் கடைசியாக, காப்பாக வணங்குகிறார் .  

No comments:

Post a Comment