Verse 4
உகாரமென்ற நாதமடா சத்திகாப்பு
உறுதியுள்ள அகாரமடா சிவமே காப்பு
சிகாரமென்ற சோதியடா வாலை காப்பு
சிவசிவா மகாரமென்ற மவுனங் காப்பு
வகாரமென்ற பஞ்ச கண தீக்ஷை காப்பு
மகத்தான சடாதார ஆதிகாப்பு
நகாரமுடன் அகாரவரை ஓங்காரத்தில்
நாடிநின்ற சூட்சமடா ஆதி காப்பே
Translation:
The Sakthi,
the nadha, the ukaara, for protection
The firm, Sivam,
the akaaram, for protection
The
effulgence, the vaalai(kundalini), the sikaara, for protection
Siva sivaa,
the makaara, the silence, for protection
The deeksha of
the five elements, the vakaara, for protection
The magnificent
origin of the six aadhaara (cakra), for protection
From the nakaara
to the akaara of the omkara
The subtlety
that stood seeking (in the nadi), for protection.
Commentary:
This verse
describes the bheeja akshara or the important seed letters in the siddha
marga.
The akaara
represents Siva.
Ukaara is
sakthi.
The sikaara is
vaalai
Makaara is the
silence, the terminus of all manifestations caused by maya
Vakaara represents
the pancha gana deeksha or victory over the five elements
The origin of
the six cakra is consciousness, the divine.
By the expression “from nakaara to the akaara of the omkara” means from
the panchakshara namacivaya to the a u ma of the omkara, to the state to the
singularity. “naadi ninra sootcham”
means the subtlety or the subtle consciousness that stood seeking the supreme
state or the subtlety that remained within the energy channels, nadi, the
divine.
இப்பாடல் சித்தமார்கத்தில் முக்கியமான பீஜாட்சரங்களை
விளக்குகிறது.
அகாரம்- சிவன், உகாரம்- சக்தி, சிகாரம்- வாலை அல்லது குண்டலினி,
மகாரம்- மௌனம் அல்லது மாயை தோற்றுவித்த வெளிப்பாடு நிலையின் முடிவு, வகாரம்- பஞ்ச
கண தீக்ஷை அல்லது ஐம்பூதங்களின் வெற்றி.
ஆறு ஆதாரங்களின் ஆதி என்பது ஆறு சக்கரங்களின் அதிபதியான
இறைவன் அல்லது விழிப்புணர்வு. நகாரம்
முதல் அகாரம் வரை ஓங்காரத்தில் என்பது நமசிவாய என்ற பஞ்சாட்சரம், அ உ ம என்னும்
மூன்று நிலையான ஓம்காரம் முதல் அதன் ஒருமை நிலை, அதாவது எல்லா வெளிப்பாடுகளையும்
உட்கொண்ட ஓம்காரம். நாடி நின்ற சூட்சம்
என்பது பரவுணர்வை நாடி நின்ற ஆத்மா அல்லது ஆத்மாவை நாடி நின்ற இறைவன் அல்லது
நாடியில் இருக்கும் இறைவன் என்ற சூட்சுமம் என்றும் பொருள்படும்.
No comments:
Post a Comment