Verse 3
தாயான சிவயோக மூலங்காப்பு
சகலகலைக் கியானமணிபீடங்காப்பு
மாயாத வாசிமலர் அந்தங் காப்பு
மணி மந்திர நாதவொலி கீதங் காப்பு
சாயாத அடிமுடியும் நடுவுங் காப்பு
சௌமியமாம் தேவாதி ரிஷிகள் காப்பு
தேயாத வாசியடா மவுனங் காப்பு
சிவசிவா அகாரமுடன் உகாரங் காப்பே
Translation:
The mother,
the origin of the sivayogam, for protection
The sakalakala
jnana mani peedam, for protection
The unending
vaasi and the terminus of the flower, for protection
Mani, mantra,
nadha, the sound and the music, for protection
The upright top,
bottom and middle, for protection
The beneficial,
pleasant devas and rishis, for protection
The undiminishing
vasi’s silence, for protection
Siva sivaa, akaara
along with ukaara, for protection.
Commentary: Mother Sakti, is the origin, the driving
force that makes sivayogam or joining with siva, fruitful. Malar antham or terminus of the flower means
the end of the cakra, the state beyond distinctions, the supreme space. Agatthiyar says nadha oli geetham. This stands for the three states of sound,
the unexpressed nadha, the initial states of sound and the music that is the
product of these sounds. The upright,
top, bottom and middle are the three spots in the body sahasrara, muladhara and
the ajna. The silence is the supreme state
that the siddhas refer to as “sol kadantha veli” It is the state of sakthi or paraa that
precedes all the sounds. Akaara and ukaara
are siva and sivaa or Siva and Sakthi.
Short vowels represent Siva and long vowels represent Sakthi. Thus a represents Siva while aa represents
Sakthi.
தாயான சக்தியே சிவயோகம் எனப்படும் சிவனுடன் சேர்த்தலை
நிகழ்த்துகிறாள். மலர் அந்தம் என்பது
பூக்களாக குறிக்கப்படும் சக்கரங்களின் முடிவு, பரவெளியைக் குறிக்கும். அகத்தியர் நாதம் ஒலி கீதம் என்று
குறிப்பிடுகிறார். நாதம் என்பது ஒலி
தோன்றுவதற்கு முற்பட்ட நிலை. இதிலிருந்து ஒலிதோன்றி அதுவே பாடலாக கீதமாக
மாறுகிறது. சாயாத அடி முடி நடு என்பது
சகஸ்ராரம் அல்லது துவாதசாந்தம், மூலாதாரம் மற்றும் ஆக்னையைக் குறிக்கும். வாசியின் மவுனம் என்பது சித்தர்கள் சொல் கடந்த
வெளி என்று குறிப்பிடும் சத்தத்தின் முதல் நிலையாகிய பரா நிலையைக்
குறிக்கும். அகாரம் உகாரம் என்பது சிவ
மற்றும் சிவாவை அதாவது சிவனையும் சக்தியையும் குறிக்கின்றன. குறில் சிவனையும் நெடில் சக்தியையும் குறிக்கிறது
அதாவது அ என்பது சிவன் ஆ என்பது சக்தி.
No comments:
Post a Comment