Verse 8
தானான சௌமிய சாகரத்தை நன்றாய்த்
தன்மையுடன் ஆதியந்தந் தயவாய்ப் பார்த்து
தேனான வடமொழியைத் தமிழ்தான் செய்த
திரமான கருவிபரம் நன்றாய்ச் சொன்னீர்
ஊனான உலகமதில் உலகத்தோர்கள்
உறுதியுள்ள கைலாயம் இடங் கொள்ளாது
மாணாக் கேள் சௌமிய சாகரத்தை நீயும்
மார்க்கமுடன் அந்தி சந்தி மகிழ்ந்து பாரே
Translation:
The Saumya
Sagaram which was the self
The origin and
terminus checking it well with mercy
The honey like
Sanskrit was translated into Tamil well
You have described
the instruments and Param, well
The people of
the world, those with corporeal existence
The Kailaya
will be enough to hold them
My
student! Listen, you enjoy
The Saumya
Sagaram in the evening and twilight
Commentary:
Agatthiyar
tells us that the Supreme Divine saw his composition and lauded it saying that
if everyone in this material world learns it there will not be enough place in
Kailaya to hold them. Agatthiyar was also
praised that he had converted the Sanskrit text into Tamil well and that he had
explained about the instruments- the modifications of the mind, the senses, the
limiting factors that serve as instruments for going beyond them or get mired
in their effects and about the Supreme, the Param well.
The Divine
also bid him to enjoy the composition during evening and twilight. “andhi” besides meaning evening also means
terminus. Similarly “sandhi” means both twilight
as well as a junction. Thus andhi means
termini of different states and principles and sandhi means the junction or
points of transition-like the cakra. In
pranayama andhi and sandhi mean when one type of breath ends and meets another,
for example, the meeting point of prana and apana.
இறைவன் அகத்தியர் இயற்றிய சௌமிய சாகரத்தை நன்றாக தயவுடன்
பார்த்து அவர் வடமொழி நூலில் உள்ளவற்றை நன்றாகத் தமிழ்ப்படுத்தியுள்ளார் என்றும்
அதை உலகோர் படித்தால் அவர்களைத் தாங்க கைலாயத்தாலும் இயலாது என்றும் கூறியதாகவும்
அகத்தியர் கருவிகள் பரம் ஆகியவற்றைப் பற்றி நன்றாக விளக்கியுள்ளார் என்றும் கூறியதாகவும்
அகத்தியர் நமக்குச் சொல்கிறார். மனம்,
புத்தி, சித்தம், புலன்கள் பொறிகள், நம்மை எல்லைக்குட்படுத்துவையாகிய அனைத்துத்
தத்துவங்களும் கருவிகள் எனப்படுகின்றன. இவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட்ட நிலையே பர
நிலை.
இறைவன் அகத்தியரை இந்த நூலை அந்தி சந்தியில் பார்த்து
மகிழுமாறும் கூறினார். அந்தி என்பது
பொதுவாக மலை என்று பொருள்பட்டாலும் அது ஒரு தத்துவத்தின் முடிவையும் குறிக்கும். அதேபோல் சந்தி என்பது இரு காலங்கள் சந்திக்கும்
நேரம் என்றாலும் அது இரு தத்துவங்கள் சந்திக்கும் இடத்தையும் குறிக்கும். உதாரணமாக நமது உடலில் உள்ள சக்கரங்கள்
தத்துவங்கள் சந்திக்கும் இடம். பிராணனும்
அபானனும் சந்திக்கும் இடமும் சந்தி எனப்படுகிறது.
No comments:
Post a Comment