Thursday 10 November 2016

497. The navalokham will become gold

Verse 497
கூட்டி நன்றாய்ப் பழச்சாற்றில் நன்றாயாட்டி
கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து
நாட்டி நன்றாய் எருவடிக்கி புடத்தைப் போட்டால்
நாதாந்தத் தங்கமது நீறிப்போகும்
தாட்டிகமாய் நீறிநின்ற தங்கம் நீறும்
தானெடுத்துப்பதனமதாய் வைத்துகொண்டு
பூட்டி நன்றாய் நவலோகந் தன்னில்
பொல்லாத லோகமெல்லாம் தங்கந்தானே

Translation:
Bringing them together and grinding with the fruit juice
Closing it on the top
Arranging the cowdung cake and baking it
The gold of nadhantha will become liquid
The liquid gold that remains so
Collecting it at the right composition
Locking it in the ninemetals (nine worlds)
All the evil metals/worlds
will become gold.

Commentary:
Agatthiyar is playing with the world navalokham here.  This term generally refers to an alloy of nine metals- gold, silver, copper, lead, graphite, tin , zinc, brass, bronze and iron. These metals are used frequently in Siddha medical preparations.  For details about each of these please visit
navalokham also means nine worlds.  These correspond to the various states of consciousness.   Siddhas worship Sakthi.  Konkanavar was said to have been a Devi upasaka.  Agattthiyar describes Devi Chakkaram which is Sri Yantra.  The chakra has nine enclosures called nava avarana.  They correspond to various principles starting with the ashta siddhis, anima, mahima, etc.  These are various principles that the yogin has to pass through to reach the bindhu in the middle which represents the union of Siva and Sakthi.  Saying that the navalokham will become golden may mean this too.


நவலோகம் என்ற சொல் தங்கம், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம், நாகம், பித்தளை, வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஒன்பது உலோகங்களால் ஆன கலவையைக் குறிக்கிறது.  இந்த உலோகங்கள் சித்த மருத்துவத்தில் பல தயாரிப்புக்களில் பயன்படுத்தப்படுகின்றன.  இவற்றைப் பற்றிய விவரங்களை மேற்கூறிய தளத்தில் காண்க.
நவலோகம் என்பது ஒன்பது உலகங்கள் என்றும் பொருள்படும்.  இவை ஒன்பது உணர்வு நிலைகளைக் குறிக்கிறது.  இந்த ஒன்பது உலகங்கள் என்பது தந்திரத்திலும் முக்கியமான ஒன்று.  சித்தர்கள் சக்தியைப் பற்றி பல இடங்களில் பேசுகின்றனர்.  அகத்தியர் தேவி சக்கரம் என்று ஒரு பாடல் தொகுப்பை எழுதியுள்ளார்.  அதில் அவர் ஸ்ரீயந்திரத்தைப் பற்றிப் பாடியுள்ளார்.  இந்த ஸ்ரீசக்கரத்தில் ஒன்பது ஆவரணங்கள் உள்ளன.  இந்த ஆவரணங்கள் ஒன்பது தத்துவ நிலைகளைக் குறிக்கின்றன.  இவற்றை ஒரு யோகி கடந்து மத்தியில் உள்ள பிந்துவை அடைகிறார்.  இவ்வாறு இவற்றைக் கடந்தால் அந்த யோகி தங்க நிலையை அடைகிறார்.  இதை அகத்தியர் குறிக்கிறார் என்றும் இப்பாடலுக்குப் பொருள் கூறலாம்.


2 comments:

  1. Guru ji
    I suffer rahu and ketu dosha
    pls advise how can relief from this dosha.kindly help me

    ReplyDelete
  2. Guru ji
    I suffer rahu and ketu dosha
    pls advise how can relief from this dosha.kindly help me

    ReplyDelete