Monday, 18 July 2016

447. Draw the Bhuvanai's aksharam in the golden foil

Verse 447
தானென்ற மூலமடா ஏக மூலம்
தயவான கும்பநவ மூலமெல்லாம்
வானென்ற புருவமடா சொர்ணபுஷ்பம்
வகையுடனே திசைகளெட்டு கும்பஞ் சேர்த்து
கோனென்ற கும்பம் நடுக் கும்பந்தன்னில்
குருவான தங்கமது களஞ்சி வாங்கி
பூனென்ற தகடதுவே புவனை மாது
பூரணியாள் அட்சரத்தைப் பொருத்தி நாட்டே

Translation:
The self, the origin, the singular causality
The merciful nine pots, all the origins
The sky, the brow middle is the golden flower (svarna pushpam)
Adding all the eight directions to the kumba
The royal kumba, in the middle kumba
The guru, the gold,  take a measure of it
In the metal foil, the lady, bhuvanai
The poorani, establish her aksharam.

Commentary:
Agatthiyar is describing a ritual which, as usual, can be interpreted literally and philosophically.  The origin he speaks about here is the ajna.  He calls it as Self.  He says it is the singular causality.  Eka moolam also means the origin where everything remains abiding, as singularity. 

Svarnapusham means golden flowers.  Traditional golden flowers are offered to the Lord during worship ritual.  Agatthiyar mentions eight kumbha or pots for directions and the middle kumbha is king or guru.  This means a ritual as well as the kumbhaka with the middle kumbaka representing the sushumna nadi.  Gold represents sun.  Literally the line means add gold to the middle pot, as a foil on which the letters of Bhuvanai are inscribed.  Philosophically it means stabilize the energy in the body through the surya nadi or pingala nadi with the akshara of Shakti, Bhuvanai.


எப்போதும் போல இப்பாடலும் வெளிப்பொருள் உட்பொருள் என்று இரு பொருள்களை அளிக்கிறது.  இப்பாடலில் அகத்தியர் ஆக்ஞையை “தான்” என்கிறார்.  எட்டு திசைகளுக்கும் கும்பங்களை சேர்த்து மத்தியில் கோன் என்ற கும்பத்தை வைத்து அதில் தங்கத் தகட்டில் புவனையின் அட்சரத்தைச் சேர்க்கவேண்டும் என்று வெளிப்பொருள் கூறுகிறது.  உட்பொருளை நோக்கினோமானால் எட்டு திசைகளையும் கும்பத்தில் சேர்த்து, அதாவது திசைகளை மறையச் செய்யும் கும்பக நிலையை மேற்கொண்டு, மத்திய கும்பமான சுழுமுனை நாடியில் கும்பக நிலையில் இருந்து தங்கம் அல்லது சூரிய நாடியின் மூலம் உடலில் சக்தியை புவனையின் மந்திரத்தால் நிலைபெறச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

Saturday, 16 July 2016

446. Puja of Bhuvana

Verse 446
புவனை பூசை
சித்தித்த பூசையடா தேவி பூசை
திக்கெட்டும் வெத்தியடா இந்த பூசை
பத்தித்த பூசையடா தப்போ இல்லை
பதியறிந்த மந்திரவாள் தன்னை நீயும்
புத்திக்குள் இதையறிந்து பூசை பண்ணு
பூமி முதல் ஆகாசமட்டும் பெற்ற தாயி
முத்திகேள் முத்தியடா அறிவைப் பாரு
முன்னவள்தான் கண்ணிறைந்த மூலந்தானே

Translation:
Worship of Bhuvana
The Devi puja that became fruitful,
Victory in all the eight directions.  This puja
Is with devotion.  There are no mistakes.
Knowing the locus, the magical sword
You worship within the intellect- knowing the locus
The mother who birthed, from the earth to the sky
Listen about mukthi, the liberation.  See the awareness
She, the origin, is the origin who fills the eye.
Commentary:
Bhuvana is Sakti who manifests as the universe.  This verse talks about her worship.  In SriVidya Devi is worshipped as Bala first, then as Bhuvana and then as Tripura.  This represents increasing order of energy.  Agatthiyar says that Bhuvana is worshipped with buddhi or intellect. She is the mother who gave rise to the manifested world.


புவனை என்பவள் உலகமாகப் பரிமளிக்கும் சக்தி.  அவளது பூஜையை இப்பாடல் விளக்குகிறது.  ஸ்ரீவித்யா மார்க்கத்தில் தேவி முதலில் பாலையாகவும் அடுத்து புவனையாகவும் முடிவில் திரிபுரையாகவும் வழிபடப்படுகிறாள்.  இந்த புவனையே உலகைப் பெற்றெடுத்த தாய்.  அவளது பூசை சகல வெற்றியையும் அளிக்கும் என்கிறார் அகத்தியர்.

Friday, 15 July 2016

445. Vaalai puja, the magical sword, the worship with intellect

Verse 445
பண்ணப்பா பூசை நவ கும்ப பூசை
பத்தி கொண்டு சத்தமதாய் சத்தி பூசை
விண்ணப்பா நிறைந்த திரு மந்திரவாளாய்
விளங்குகின்ற வேதாந்த வாலைபூசை
கண்ணப்பா நிறைந்ததிரு வாலைபூசை
காரணமும் பூரணமாய் நின்ற பூசை
முன்னப்பா செய்தவத்தால் பலிக்கும் பூசை
புத்தியுள்ள பூசையடா சித்தி தானே

Translation:
Perform son, the worship of nine pots
Having devotion, as sound, the Sakti puja.
As the magical sword that fills the sky
The Vedanta Vaalai Puja.
The sacred Vaalai puja that filled the eye
The puja where the causality stood as fully complete
The puja will become fruitful because of the tapas performed before
The puja with buddhi.  Only siddhi.

Commentary:
Agatthiyar tells us an important information here.  He says the magical sword is the worship of the nine pots or the nava graha.  The sword is that which fills the eye of discrimination, the sky principle.  It is the puja of Vaalai or Bala and that it will become fruitful by the tapas performed before.  This puja is performed with the intellect or buddhi.  Thus, the sword is intellect cutting away the illusions, the opening of the eye of discrimination, the third eye.  Thus, Agatthiyar is talking about one of the aspects of internal senses, the buddhi or intellect.


இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறார். மந்திர வாள் என்பது விண்ணை நிறைத்து இருப்பது, கண்ணை நிறைப்பது, வாலை பூஜை.  அந்த பூஜை முன் செய்த தவத்தால் பலனளிக்கும்.  அதனை புத்தியால் செய்யவேண்டும்.  அப்போது சித்தி கிட்டும் என்கிறார் அவர்.  இதனால் மந்திரவாள் என்பது மாயையின் கட்டை புத்தியால் விலக்குவது, மூன்றாவது கண்ணை விழிக்கச் செய்வது என்பது புலப்படுகிறது.  இந்தச் செயல் புத்தியால், பகுத்தறிவால் செய்யப்படுவது என்பது புரிகிறது.

Wednesday, 13 July 2016

444. Ananda poorani

Verse 444
பூசைமுறை சொல்லுகிறேன் மைந்தா மைந்தா
பூரணமாங் கும்ப நடுக் கும்பந்தன்னில்
நேசமுடன் மதுர ரசக் கனிகள் வைத்து
நேமமுடன் தூபமுடன் தீபங் காட்டி
ஓசையுள்ள மணி நாதம் சங்கின் நாதம்
உத்தமனே செகண்டி ஜெகனாதந்தான்
ஆசையுடன்  உபசாரஞ் செய்து நல்ல
ஆனந்த பூரணியைப் பூசை பண்ணே

Translation:
Son, Son, I will tell the method of worship
The middle kumbha the poornam
Placing sweet fruits and honey
Waving the fragrance and flame
Sounding the bell, conch
Metallic disc and other sounds
Offering things with interest
Perform the worship of Ananda poorani.

Commentary:
Agatthiyar is describing the worship ritual of Devi.  He calls Devi as Anandapoorani.  In this context it will be interesting to note that Devi in the temples established by Agatthiyar is usually called Anandavalli.  https://shanthiraju.wordpress.com/2007/12/20/pancheshti/ 
The supreme state is state of bliss or Ananda. 


இப்பாடலில் அகத்தியர் தேவியின் வழிபாட்டை விளக்குகிறார்.  அவர் தேவியை ஆனந்த பூரணி என்று அழைக்கிறார்.  இவ்விடத்தில் நாம் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பார்ப்போம்.  அகத்தியர் பிரதிஷ்டை செய்த கோவில்களில் எல்லாம் ஈசன் அகத்தீஸ்வரர் என்றும் அம்மை ஆனந்தவல்லி என்று அழைக்கப்படுகின்றனர்.  உதாரணமாக பஞ்சேஷ்டி என்ற கோவிலில் அம்மை மூன்று கண்களையுடைய ஆனந்தவல்லி அம்மையாவாள்.  இக்கோயிலைப் பற்றிய விவரங்களை மேற்கூறியுள்ள தளத்தில் பார்க்கவும்.  யோகத்தின் உச்ச நிலை ஆனந்த நிலை.  இந்த நிலையில் அச்சக்தி ஆனந்தவல்லி எனப்படுகிறார்.

Sunday, 10 July 2016

443. Puja of the pots

Verse 443
நாற்பத்து முக்கோணம்
கேளப்பா பிரணவமேல் முக்கோணமிட்டுக்
கிருபையுள்ள கோணமதில் விந்து போட்டு
வாளப்பா சொல்லுகிறேன் கும்பமெல்லாம்
வகையுடனே நூலணிந்து கெங்கைவிட்டு
ஆளப்பா மாங்குலையுந் தேங்காய் சாற்றி
அன்பாக அவர் தனித்து ஆடை சாற்றி
சூளப்பா சுகந்த பரி மளங்கள் சாற்றி
சுத்தமுடன் தானிருந்து பூசைபண்ணே

Translation:
Forty triangles
Listen Son, drawing a triangle over the pranava,
Drawing a bindhu in that angle
I will tell you.  Wrap all the kumba
With thread and add water (ganga) to it
Place mango leaves and coconut
Add their individual clothes as dress
Adorn them with fragrances
Remaining pure, perform puja.

Commentary:
This verse describes the puja of Srichakra.  Siddhas call the Srichakra as forty triangles.  Agatthiyar says that a triangle is drawn over the pranavam. A bindhu or dot is added to it.  The pots are wrapped with thread, water added to them and the usual custom of mango leaves and coconut are placed over them.  Each pot is wrapped in a cloth appropriate for a particular planet.  They are adorned with fragrances such as sandalwood paste and worship ritual is performed.

It is common to perform navagraha puja during several auspicious occasions such as house warming ceremony.  Let us see what the navagraha signify and why we eulogize them.  During the big bang the energy that was released during the process assembled into nine primary rays.  They rays are represented by the navagraha.  The word graha, besides meaning planet, also mean that which grabs.  These energy rays assemble, change, evolve and divide into various factors and affect the earth.  In the end, during dissolution, they go back and merge into the state of singularity.  Thus, worshipping the navagraha is worshipping the primary energy rays.  These rays represent various factors.  These factors are present in greater amounts in certain objects.  For example the ray or the principle represented by Sani is present in great amounts in sesame seeds.  Hence, sesame seeds are used for worshipping Sani.  Similarly, the color black represents the Sani principle more than other colors.  Hence, black cloth is offered as the vastram for Sani.
When Agatthiyar says adorn the respective dresses for the planets he means worship all the parts of the primal Sakthi through this ritual.

ஸ்ரீ சக்ர பூசைக்கான ஆயத்தங்களை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  சித்தர்கள் ஸ்ரீ சக்கரத்தை நாற்பது முக்கோணம் என்று அழைக்கின்றனர்.  பிரணவத்தைச் சுற்றி கோணங்களை வரைந்து நடுவில் பிந்துவைப் போடவேண்டும்.  அதன் மேல் நூல் சுற்றிய கலசங்களை வைத்து அதில் நீர் சேர்த்து அதன் மேல் வழக்கப்படி மாவிலை தேங்காயை வைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஒவ்வொரு கலசத்தைச் சுற்றியும் அந்தந்த கிரகத்துக்கான வஸ்திரத்தைச் சாற்ற வேண்டும்.  அதன் பிறகு அவற்றிற்கு சந்தனம் போன்ற வாசனை திரவியங்களைச் சாற்றி பூசை செய்ய வேண்டும் என்கிறார் அகத்தியர்.

கிரகப்பிரவேசம், நாமகரணம் போன்ற பல சடங்குகளின் பகுதியாக நவக்கிரக ஹோமம் அல்லது பூசை செய்வது வழக்கம்.  அதை நாம் ஏன் செய்கிறோம் என்பதை இங்கே சிறிது பார்ப்போம்.  உலகம் தோன்றும்போது ஆதி வெடிப்பு ஏற்பட்டது. அப்போது வெளிவந்த சக்தி ஒன்பது ஆதி கதிர்களாக வெளிவந்தன.  இந்த ஒன்பது கதிர்கள் ஒன்பது ஆதி வஸ்துக்களைக் குறித்தன.  இந்த கதிர்கள் ஒன்றோடொன்று சேர்வது, பரிணாம மாற்றமடைவது, பிரிவது என்று பல மாற்றங்களை அடைந்து உலகில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  இவ்வாறு நவக்கிரக பூசை என்பது ஆதியின் தோன்றிய சக்திகதிர்களின் வழிபாடாகிறது.  இந்த கதிர்கள் ஒவ்வொரு ஆதி தத்துவத்தையும் குறிக்கின்றன.  இந்த தத்துவங்கள் சில பொருள்களில் அதிகமாக வெளிப்படுகின்றன.  உதாரணமாக சனி குறிக்கும் தத்துவம் எள்ளிலும் கருப்பு நிறத்திலும் அதிகமாக வெளிப்படுகிறது.  அதனால் சனியை வழிபடும்போது, அது குறிக்கும் தத்துவத்தை வழிபடும்போது அந்த தத்துவம் அதிகமாக வெளிப்படும் எள்ளையும் கருப்பு வஸ்திரத்தையும் பூசையில் சேர்த்துக்கொள்கிறோம். 

இவ்வாறு நவகிரகங்களையும் அவற்றிற்கான வஸ்திரங்களுடன் வழிபட வேண்டும் என்று அகத்தியர் குறிப்பிடுவது ஒன்பது ஆதி சக்திகளை வழிபடுவதாகிறது.  இந்த சக்திகள் முடிவில் ஆதிசக்தியில் லயமடைகின்றன.

Thursday, 7 July 2016

442. "Devi come, rule me"

Verse 442
படிவாக அட்சதையைப் பரப்பி மைந்தா
பத்தியுடன் பிரணவத்தை பதிவாய் நாட்டி
முடிவான சத்திநடு மையத்தின் கும்பம்
மோனமுள்ள அட்சதையும் படிதானெட்டு
அடியான தளமதிலே சாத்திக் கும்ப
மதிஎன்ற பிரணவத்தை மன்பாய்ச் சாற்றி
வடிவாக எனையாள வாவாவென்று
மார்க்கமுடன் தானிருந்து சொல்லக் கேளே

Translation:
Spreading the sacred rice, son
Establishing the pranava
The end is the Sakthi center pot/kumbham
The silence, the sacred rice is eight measures/steps.
Placing it in the bottom plane,
Adorning the mind, the pranava with love/throught the mind
As, “come, come to rule me”
Remain as marga and listen to the words.

Commentary:
This verse and the one above seems to be a description of an external ritual, that of placing nine pots and worshipping Devi.  There is also an inner meaning for these verses.  The nine pots may represents the nine aavarana or enclosures in Sri Chakra.  These nine enclosures represent various concepts and their stepwise dissolution into the central point, the bindhu, the ninth enclosure, which Agathiyar says is omkara.
The word “akshathai” refers to rice grain that was not pounded.  Thus, it has the capacity to regenerate.  It possesses “jivakalai”.  Thus, this term may also mean the prana that is does not die out.
The term “ettu padi” means both, a measure and eight steps which correspond to ashtanga yoga and the eight enclosures that end in bindhu.  They also represent the nine chakra in our body, the muladhara, svadhistana, manipuraka, anahata, vishuddhi, ajna, sahasrara, dvadasantha and then the all pervasive state of Sakthi.  This order represents creation as well as dissolution.kumbam” also means kumbaka or the cessation of breath, a state when the soul harmonizes with the Divine.
 
Establishing the pots thus with pranava Sakthi is prayed to come within the yogin and rule him. 

This verse describes placing the mind, the cause for creation at Pranava and requesting Sakthi to rule it.  Stopping the wavering of the mind is an essential step in kundalini yoga.  This process is described subtly here.  The mind is merged with pranava and Sakthi is requested to take over the mind so that it is brought under control.

இப்பாடலும் இதற்கு முந்தைய பாடலும் ஒரு பூசை வழிமுறையைப் போலத் தோன்றினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தமும் இருக்கிறது. கும்பம் என்றால் கும்பகம் அல்லது மூச்சற்ற நிலை என்றும் பொருள்.  ஒன்பது கும்பங்கள் என்பது இவ்வாறு ஒன்பது நிலைகளில் கும்பகத்தைக் கொள்வது என்றும் பொருள்படுகிறது.  இந்த ஒன்பது என்பது ஸ்ரீ சக்ர பூசையில் உள்ள நவ ஆவரணங்களையும் குறிக்கலாம்.  நவ ஆவரணங்கள் என்பவை ஒன்பது சுற்றுக்கள். அவை மத்தியில் உள்ள பிந்துவில் முடிகின்றன.  இந்த ஒன்பது சுற்றுக்களும் ஒன்பது தத்துவங்களைக் குறிக்கின்றன. 

ஒன்பது என்பது ஒன்பது சக்கரங்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம், துவாதசாந்தம் மற்றும் சக்தி நிலையே இந்த ஒன்பது எனப்படுகின்றன.  இந்த ஒன்பதும் ஓங்காரத்தின் விரிவை, சிருஷ்டியையும், லயத்தையும் குறிக்கின்றன.

அக்ஷதை என்ற சொல்லுக்கு வளர்ச்சியைக் கொண்டது என்று பொருள். உலக்கையால் குத்தப்படாத அரிசி அக்ஷதை எனப்படுகிறது.  முனைமுறியாத அந்த அரிசி வளரும் தன்மையைக் கொண்டது, ஜீவகளையைக் கொண்டது.  இவ்வாறு அக்ஷதை என்பது இறப்பற்ற பிராணனையும் குறிக்கலாம். 
இங்கு எட்டு படி என்பது ஒரு அளவையைக் குறிப்பதுடன் எட்டு படிகள் அல்லது அஷ்டாங்க யோகம் என்பதையும் குறிக்கலாம். 
இவ்வாறு ஒன்பது கும்பங்களை இட்டு தேவி என்னை ஆள வாவா என்று அழைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.


இப்பாடல் மனதின் சலனத்தை நிறுத்துவதைக் குறிக்கிறது. மனதைப் பிரணவத்தில் வைத்து சக்தியை அதனை ஆள வருமாறு வேண்டுவதே இப்பாடலின் நோக்கம்.  குண்டலினி யோகத்தில் மனதின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி உணர்வைத் துரியத்தில் வைக்க வேண்டும்.  இப்பாடல் மனதைக் குறித்தது.  

Wednesday, 6 July 2016

441. Nava kumbha puja

Verse 441
நவகும்ப பூசை
பார்முழுதும் ஒருகுடைக்கீழ் பதிவாயான
பகர்ந்த சொல்லை மறவாதே ஞானம் பாரு
சீர்பெறவே பூசை செய்ய கும்பம் எட்டும்
தீர்க்கமுள்ள கும்பமடா ஓம் பிரதானம்
நேர்பெறவே கும்ப நடுக் கும்பம் வைத்து
நேர்மையுடன் நவக்கிரகந் தனக்கு மைந்தா
பேர்பெறவே கரகமதிற் கடியில் மைந்தா
பிலமான அட்சதையும் படிதானொன்றே

Translation:
Puja of nine kumbha
The word that has the world under its umbrella
Do not forget the word,  see the jnana.
For the puja- eight pots (kumbha)
The biggest one is Om, the main one.
Placing the kumbha and central one
For the navagraha, Son,
Under the pot, son
Place sacred rice, one measure (padi- approx..750 gm)

Commentary:
Agatthiyar describing a ritual where nine pots are placed for invoking the nine planets or houses.  Graha means planets as well as loci.  This interpration is given as Agatthiyar says that the most important kumba is the one in the middle which is the omkara (om pradhaanam).  So the nine graha are the nine chakra or the nine planets.  In fact, the nine planets correspond to nine cakra in the body and thus worship of navagraha is actually a worship of the chakra. 
Agatthiyar says that the pots are placed and below them approximately 750 gm of rice is spread.

Nava graha may also mean the nine aavarana or nine enclosures that surround the bindhu or the dot in the middle of the Sri Cakra.

ஒன்பது கும்பங்களை வைத்துச் செய்யும் பூசையை இங்கே குறிப்பிடுகிறார் அகத்தியர்.  இந்த பூசை நவகிரகங்களுக்கு என்று கூறும் அவர் ஓம்தான் பிரதானம் என்கிறார். இதனால் நவகிரகங்கள் என்றது ஒன்பது சக்கரங்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  இவ்வாறு நவக்கிரக பூசை என்பது ஒன்பது சக்கரங்களின் வழிபாடாகிறது.

நவ கிரகங்கள் என்பதற்கு ஒன்பது இல்லங்கள் என்று பொருள் கொண்டால் அது ஒன்பது ஆவரணங்கள் அல்லது சுற்றுக்களைக் குறிக்கிறது.  இந்த ஒம்பது சுற்றுக்கள் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் உள்ள பிந்துவைச் சூழ்ந்துள்ளன.

இவ்வாறு ஒன்பது கும்பங்களை வைத்து அவற்றின் கீழ் ஒரு படி அரிசியைப் பரப்பவேண்டும் என்கிறார் அகத்தியர்.