Sunday, 10 July 2016

443. Puja of the pots

Verse 443
நாற்பத்து முக்கோணம்
கேளப்பா பிரணவமேல் முக்கோணமிட்டுக்
கிருபையுள்ள கோணமதில் விந்து போட்டு
வாளப்பா சொல்லுகிறேன் கும்பமெல்லாம்
வகையுடனே நூலணிந்து கெங்கைவிட்டு
ஆளப்பா மாங்குலையுந் தேங்காய் சாற்றி
அன்பாக அவர் தனித்து ஆடை சாற்றி
சூளப்பா சுகந்த பரி மளங்கள் சாற்றி
சுத்தமுடன் தானிருந்து பூசைபண்ணே

Translation:
Forty triangles
Listen Son, drawing a triangle over the pranava,
Drawing a bindhu in that angle
I will tell you.  Wrap all the kumba
With thread and add water (ganga) to it
Place mango leaves and coconut
Add their individual clothes as dress
Adorn them with fragrances
Remaining pure, perform puja.

Commentary:
This verse describes the puja of Srichakra.  Siddhas call the Srichakra as forty triangles.  Agatthiyar says that a triangle is drawn over the pranavam. A bindhu or dot is added to it.  The pots are wrapped with thread, water added to them and the usual custom of mango leaves and coconut are placed over them.  Each pot is wrapped in a cloth appropriate for a particular planet.  They are adorned with fragrances such as sandalwood paste and worship ritual is performed.

It is common to perform navagraha puja during several auspicious occasions such as house warming ceremony.  Let us see what the navagraha signify and why we eulogize them.  During the big bang the energy that was released during the process assembled into nine primary rays.  They rays are represented by the navagraha.  The word graha, besides meaning planet, also mean that which grabs.  These energy rays assemble, change, evolve and divide into various factors and affect the earth.  In the end, during dissolution, they go back and merge into the state of singularity.  Thus, worshipping the navagraha is worshipping the primary energy rays.  These rays represent various factors.  These factors are present in greater amounts in certain objects.  For example the ray or the principle represented by Sani is present in great amounts in sesame seeds.  Hence, sesame seeds are used for worshipping Sani.  Similarly, the color black represents the Sani principle more than other colors.  Hence, black cloth is offered as the vastram for Sani.
When Agatthiyar says adorn the respective dresses for the planets he means worship all the parts of the primal Sakthi through this ritual.

ஸ்ரீ சக்ர பூசைக்கான ஆயத்தங்களை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  சித்தர்கள் ஸ்ரீ சக்கரத்தை நாற்பது முக்கோணம் என்று அழைக்கின்றனர்.  பிரணவத்தைச் சுற்றி கோணங்களை வரைந்து நடுவில் பிந்துவைப் போடவேண்டும்.  அதன் மேல் நூல் சுற்றிய கலசங்களை வைத்து அதில் நீர் சேர்த்து அதன் மேல் வழக்கப்படி மாவிலை தேங்காயை வைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஒவ்வொரு கலசத்தைச் சுற்றியும் அந்தந்த கிரகத்துக்கான வஸ்திரத்தைச் சாற்ற வேண்டும்.  அதன் பிறகு அவற்றிற்கு சந்தனம் போன்ற வாசனை திரவியங்களைச் சாற்றி பூசை செய்ய வேண்டும் என்கிறார் அகத்தியர்.

கிரகப்பிரவேசம், நாமகரணம் போன்ற பல சடங்குகளின் பகுதியாக நவக்கிரக ஹோமம் அல்லது பூசை செய்வது வழக்கம்.  அதை நாம் ஏன் செய்கிறோம் என்பதை இங்கே சிறிது பார்ப்போம்.  உலகம் தோன்றும்போது ஆதி வெடிப்பு ஏற்பட்டது. அப்போது வெளிவந்த சக்தி ஒன்பது ஆதி கதிர்களாக வெளிவந்தன.  இந்த ஒன்பது கதிர்கள் ஒன்பது ஆதி வஸ்துக்களைக் குறித்தன.  இந்த கதிர்கள் ஒன்றோடொன்று சேர்வது, பரிணாம மாற்றமடைவது, பிரிவது என்று பல மாற்றங்களை அடைந்து உலகில் பல தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  இவ்வாறு நவக்கிரக பூசை என்பது ஆதியின் தோன்றிய சக்திகதிர்களின் வழிபாடாகிறது.  இந்த கதிர்கள் ஒவ்வொரு ஆதி தத்துவத்தையும் குறிக்கின்றன.  இந்த தத்துவங்கள் சில பொருள்களில் அதிகமாக வெளிப்படுகின்றன.  உதாரணமாக சனி குறிக்கும் தத்துவம் எள்ளிலும் கருப்பு நிறத்திலும் அதிகமாக வெளிப்படுகிறது.  அதனால் சனியை வழிபடும்போது, அது குறிக்கும் தத்துவத்தை வழிபடும்போது அந்த தத்துவம் அதிகமாக வெளிப்படும் எள்ளையும் கருப்பு வஸ்திரத்தையும் பூசையில் சேர்த்துக்கொள்கிறோம். 

இவ்வாறு நவகிரகங்களையும் அவற்றிற்கான வஸ்திரங்களுடன் வழிபட வேண்டும் என்று அகத்தியர் குறிப்பிடுவது ஒன்பது ஆதி சக்திகளை வழிபடுவதாகிறது.  இந்த சக்திகள் முடிவில் ஆதிசக்தியில் லயமடைகின்றன.

Thursday, 7 July 2016

442. "Devi come, rule me"

Verse 442
படிவாக அட்சதையைப் பரப்பி மைந்தா
பத்தியுடன் பிரணவத்தை பதிவாய் நாட்டி
முடிவான சத்திநடு மையத்தின் கும்பம்
மோனமுள்ள அட்சதையும் படிதானெட்டு
அடியான தளமதிலே சாத்திக் கும்ப
மதிஎன்ற பிரணவத்தை மன்பாய்ச் சாற்றி
வடிவாக எனையாள வாவாவென்று
மார்க்கமுடன் தானிருந்து சொல்லக் கேளே

Translation:
Spreading the sacred rice, son
Establishing the pranava
The end is the Sakthi center pot/kumbham
The silence, the sacred rice is eight measures/steps.
Placing it in the bottom plane,
Adorning the mind, the pranava with love/throught the mind
As, “come, come to rule me”
Remain as marga and listen to the words.

Commentary:
This verse and the one above seems to be a description of an external ritual, that of placing nine pots and worshipping Devi.  There is also an inner meaning for these verses.  The nine pots may represents the nine aavarana or enclosures in Sri Chakra.  These nine enclosures represent various concepts and their stepwise dissolution into the central point, the bindhu, the ninth enclosure, which Agathiyar says is omkara.
The word “akshathai” refers to rice grain that was not pounded.  Thus, it has the capacity to regenerate.  It possesses “jivakalai”.  Thus, this term may also mean the prana that is does not die out.
The term “ettu padi” means both, a measure and eight steps which correspond to ashtanga yoga and the eight enclosures that end in bindhu.  They also represent the nine chakra in our body, the muladhara, svadhistana, manipuraka, anahata, vishuddhi, ajna, sahasrara, dvadasantha and then the all pervasive state of Sakthi.  This order represents creation as well as dissolution.kumbam” also means kumbaka or the cessation of breath, a state when the soul harmonizes with the Divine.
 
Establishing the pots thus with pranava Sakthi is prayed to come within the yogin and rule him. 

This verse describes placing the mind, the cause for creation at Pranava and requesting Sakthi to rule it.  Stopping the wavering of the mind is an essential step in kundalini yoga.  This process is described subtly here.  The mind is merged with pranava and Sakthi is requested to take over the mind so that it is brought under control.

இப்பாடலும் இதற்கு முந்தைய பாடலும் ஒரு பூசை வழிமுறையைப் போலத் தோன்றினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தமும் இருக்கிறது. கும்பம் என்றால் கும்பகம் அல்லது மூச்சற்ற நிலை என்றும் பொருள்.  ஒன்பது கும்பங்கள் என்பது இவ்வாறு ஒன்பது நிலைகளில் கும்பகத்தைக் கொள்வது என்றும் பொருள்படுகிறது.  இந்த ஒன்பது என்பது ஸ்ரீ சக்ர பூசையில் உள்ள நவ ஆவரணங்களையும் குறிக்கலாம்.  நவ ஆவரணங்கள் என்பவை ஒன்பது சுற்றுக்கள். அவை மத்தியில் உள்ள பிந்துவில் முடிகின்றன.  இந்த ஒன்பது சுற்றுக்களும் ஒன்பது தத்துவங்களைக் குறிக்கின்றன. 

ஒன்பது என்பது ஒன்பது சக்கரங்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம், துவாதசாந்தம் மற்றும் சக்தி நிலையே இந்த ஒன்பது எனப்படுகின்றன.  இந்த ஒன்பதும் ஓங்காரத்தின் விரிவை, சிருஷ்டியையும், லயத்தையும் குறிக்கின்றன.

அக்ஷதை என்ற சொல்லுக்கு வளர்ச்சியைக் கொண்டது என்று பொருள். உலக்கையால் குத்தப்படாத அரிசி அக்ஷதை எனப்படுகிறது.  முனைமுறியாத அந்த அரிசி வளரும் தன்மையைக் கொண்டது, ஜீவகளையைக் கொண்டது.  இவ்வாறு அக்ஷதை என்பது இறப்பற்ற பிராணனையும் குறிக்கலாம். 
இங்கு எட்டு படி என்பது ஒரு அளவையைக் குறிப்பதுடன் எட்டு படிகள் அல்லது அஷ்டாங்க யோகம் என்பதையும் குறிக்கலாம். 
இவ்வாறு ஒன்பது கும்பங்களை இட்டு தேவி என்னை ஆள வாவா என்று அழைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.


இப்பாடல் மனதின் சலனத்தை நிறுத்துவதைக் குறிக்கிறது. மனதைப் பிரணவத்தில் வைத்து சக்தியை அதனை ஆள வருமாறு வேண்டுவதே இப்பாடலின் நோக்கம்.  குண்டலினி யோகத்தில் மனதின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி உணர்வைத் துரியத்தில் வைக்க வேண்டும்.  இப்பாடல் மனதைக் குறித்தது.  

Wednesday, 6 July 2016

441. Nava kumbha puja

Verse 441
நவகும்ப பூசை
பார்முழுதும் ஒருகுடைக்கீழ் பதிவாயான
பகர்ந்த சொல்லை மறவாதே ஞானம் பாரு
சீர்பெறவே பூசை செய்ய கும்பம் எட்டும்
தீர்க்கமுள்ள கும்பமடா ஓம் பிரதானம்
நேர்பெறவே கும்ப நடுக் கும்பம் வைத்து
நேர்மையுடன் நவக்கிரகந் தனக்கு மைந்தா
பேர்பெறவே கரகமதிற் கடியில் மைந்தா
பிலமான அட்சதையும் படிதானொன்றே

Translation:
Puja of nine kumbha
The word that has the world under its umbrella
Do not forget the word,  see the jnana.
For the puja- eight pots (kumbha)
The biggest one is Om, the main one.
Placing the kumbha and central one
For the navagraha, Son,
Under the pot, son
Place sacred rice, one measure (padi- approx..750 gm)

Commentary:
Agatthiyar describing a ritual where nine pots are placed for invoking the nine planets or houses.  Graha means planets as well as loci.  This interpration is given as Agatthiyar says that the most important kumba is the one in the middle which is the omkara (om pradhaanam).  So the nine graha are the nine chakra or the nine planets.  In fact, the nine planets correspond to nine cakra in the body and thus worship of navagraha is actually a worship of the chakra. 
Agatthiyar says that the pots are placed and below them approximately 750 gm of rice is spread.

Nava graha may also mean the nine aavarana or nine enclosures that surround the bindhu or the dot in the middle of the Sri Cakra.

ஒன்பது கும்பங்களை வைத்துச் செய்யும் பூசையை இங்கே குறிப்பிடுகிறார் அகத்தியர்.  இந்த பூசை நவகிரகங்களுக்கு என்று கூறும் அவர் ஓம்தான் பிரதானம் என்கிறார். இதனால் நவகிரகங்கள் என்றது ஒன்பது சக்கரங்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  இவ்வாறு நவக்கிரக பூசை என்பது ஒன்பது சக்கரங்களின் வழிபாடாகிறது.

நவ கிரகங்கள் என்பதற்கு ஒன்பது இல்லங்கள் என்று பொருள் கொண்டால் அது ஒன்பது ஆவரணங்கள் அல்லது சுற்றுக்களைக் குறிக்கிறது.  இந்த ஒம்பது சுற்றுக்கள் ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் உள்ள பிந்துவைச் சூழ்ந்துள்ளன.

இவ்வாறு ஒன்பது கும்பங்களை வைத்து அவற்றின் கீழ் ஒரு படி அரிசியைப் பரப்பவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Monday, 4 July 2016

440. Devi grants Kadgam

Verse 440
சத்தியமாய் நின்றசிவ சத்தி மாதே
சமர்முனையில் வைத்திருந்த தாயே தாயே
வெத்தியுள்ள பூரணத்தின் வேத ரூபி
வேதாந்த கோத்திரமாய் விளங்குந்தாயே
முத்தியுள்ள மோன மந்திர விவேகத்தாயே
மோனமுடன் தியானமதாய்ப் பூசை செய்யே
பத்தியுள்ள மந்திரவாள் கையில் ஈந்து
பதிவான வரங்கொடுப்பாள் கெதியைப் பாரே

Translation:
The Lady Siva Sakthi who remained as truth
The Mother, mother who kept (it) at the tip of battle
The victorious veda rupi of poornam
The mother who remains as the Vedanta Gotram
The mother who is liberating mantra of silence
You worship her as silence and dhyana
She will grant the devotional magical sword
And the merciful boons.  See the path/refuge.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that he should praise mother Devi in several ways addressing her as Siva Sakthi, mother who keeps the consciousness at the battle tip, the battle being that between limitedness and unlimitedness.  ‘Samar’ also means porcupine. The ajna cakra is said to be at the size of the tip of the quill of a porcupine.  Sakthi stabilizes the consciousness at the ajna.  She is the Veda rupi or embodiment of Veda.  She is the Vedanta gotram or the lineage of Vedanta.  She is worshipped as dhyana and silence.  Then she will grant the devotee with the magical sword and boons. 

Reciting the kadgamala stotram is equivalent to performing the fullscale Srividya upasana. To understand more about the kadgamala stotram http://shaktisadhana.50megs.com/Newhomepage/Frames/gallery/Khadgamala/ksfrequentlyaskedquestion.html

தேவியைப் பல பெயர்களால் துதிக்கவேண்டும் என்று புலத்தியருக்குக் கூறுகிறார் அகத்தியர். சிவசக்தி மாது, சமர் முனையில் வைத்திருக்கும் மாதா- அதாவது அளவுக்குட்பட்டமையும் எல்லையின்மையும் போரிடும் இடமான ஆக்ஞாவில் வைத்திருக்கும் தாய் என்று அவளைத் துதிக்கிறார் அகத்தியர்.  சமர் என்றா முள்ளம்பன்றி என்றும் ஒரு பொருள் உள்ளது.  ஆக்ஞை முள்ளம்பன்றியின் முள் முனையின் அளவில் இருக்கும் என்று யோக நூல்கள் கூறுகின்றன.  தேவி வேதரூபி, வேதாந்த வழியைச் சேர்ந்தவள்.  இவ்வாறு அவளைத் துதித்தால் அவள் பூரண மந்திர வாளையும் வரங்களையும் தருவாள் என்று கூறுகிறார் அகத்தியர்.

மூன்று மணிநேரங்களுக்கு மேல் ஆகும் ஸ்ரீவித்யா பூசையின் சுருக்கமே தேவி கட்கமாலா ஸ்தோத்திரம்.  அதன் பலன்களைப் பற்றியும் அதைக் கூறும் முறையைப் பற்றியும் மேற்கூறியுள்ள தளத்தில் பார்க்க.

439. Praise of Devi

Verse 439
கண்ணான கமலிதிரி சூலி வாமி
காரணமே பூரணமே கமலத்தாயே
விண்ணான சபைதனிலே நடனமாடி
வேதாந்தப் பேரொளியாய் நின்றதாயே
முன்னான கண்மணியே ரூபா ரூபி
முதலான பூரணமே அருமைக்கண்ணே
ஒண்ணான பூரணமாய் என்னாளுநதான்
ஓமென்ற மூலமந்திர சத்திமாதே

Translation:
The beloved/eye, kamali, tirisooli, vaami,
The kaaranam, pooranam, the mother lotus
Dancing in the sabha of space/sky
The Mother who sttod as the Great effulgence of Vedanta
The jewel of the eye, the one with form and without a form
The primal pooranam, the beloved, dear/eye
As the poornam, everyday
The maiden who is the om, the mulamantra satyam.

Commentary:
This verse is an eulogy to Mother, Devi in Sricakra.  Agatthiyar praises her as Kamali, Trisooli or the one with the trident, vaami the one who is the prana, the causality, the fully complete, the mother of the lotus or chakra, the mother who dances in the arena of the sky, the great effulgence beyond knowledge, the one with and without form and the Om or the mulamantra satya maadhu/lady.


இப்பாடல் தேவியைப் போற்றுவதாக உள்ளது.  அகத்தியர் ஸ்ரீ சக்கரத்தில் உள்ள தேவியை கமலி, திரிசூலி, வாமை, காரணம், பூரணம், கமலத் தாய், விண் என்னும் சபையில் நடனமாடும் வேதாந்தப் பேரொளி, கண்ணின் மணி, ஆதி பூரணம், ஓம்கார மூலமந்திர சத்தியம் என்று பலவாறு போற்றித் துதிக்கிறார்.

438. Sricakra, triple bali, mantra

Verse 438
கேளப்பா மந்திரமாம் மூல மந்திரங்
கேசரத்தின் பூரண ஓங்காரவாளால்
ஆளப்பா இதையறிந்து தியானம் பண்ணி
அடிமாந்து செய்யாது அறிவைப் பற்றி
நாளப்பா முப்பெலியும் அமர்ந்தே வாங்கும்
நாற்பத்தி முக்கோண மாத்தாளுக்கு
வாளப்பா வாழ்வதற்கு மவுனத்தாயை
மனதுருக பூரணமாய் மதிச்சுக் கண்ணே

Translation:
Listen son about the mantra, the mulamantra
By the sword of omkara poornam of kecharam
Rule it, knowing this, by performing dhyana
The bottom does not cause delusion.  Holding the awareness
Seated, it will accept the triple offering.
For the mother of the forty triangles
It is the sword to live.  The mother-silence
Respect as poornam, the eye/ see.

Commentary:
Agatthiyar is talking about raising the maha prana through the muladhara with the help of mantra.  He has not mentioned the mantra explicitly but says that the mantra should be known from the magical sword of pooranam of kecharam.  These may be the bhija mantra found in kadgamala stotram.  He talks about the fourty triangles which is Sricakra.  The term “muppeli” may be triple bhali or offerings.  Siddhas prescribe triple bali or offerings while collecting medicinal plants for their preparations.  The triple offerings are coconut, lemon and white pumpkin.  They are covered with kumkum and offered.  The deity who accepts the offering is Devi in Sricakra.  This will offer the vision of the mother, the supreme silence.


பிராணனை மூலாதாரத்தின் ஊடே மேலே மந்திரங்களின் உதவியுடன் மேலே எழுப்புவதை இப்பாடலில் குறிப்பிடுகிறார் அகத்தியர்.  அந்த மந்திரங்களை வெளிப்படையாகக் கூறாமல் மந்திரவாள் கேசரத்தின் பூரணத்தின் உதவியால் அறிவாய் என்று கூறுகிறார் அவர்.  இதனால் இந்த மந்திரங்கள் கட்கமாலா ஸ்தோத்திரத்தில் இருக்கலாம் என்று தோன்றுகிறது.  இந்த மந்திரத்தை குருமுகமாக அறியவேண்டும் என்பதனால் அதனை வெளிப்படையாக அவர் கூறவில்லை.  இந்த மந்திரத்துடன் முப்பெலியை நாற்பது முக்கோண ஆத்தாளுக்கு அளிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  நாற்பது முக்கோணம் என்பது ஸ்ரீ சக்கரம்.  முப்பலி என்பதை சித்தர்கள் மூலிகைகளைச் சேகரிக்கும்போது செய்யுமாறு கூறுகின்றனர்.  அவை தேங்காய், எலுமிச்சை பழம் மற்றும் பூசணிக்காய்.  இவற்றை குங்குமத்தால் நிரப்பி தேவிக்குப் படைக்க வேண்டும்.  தத்துவ ரீதியாகப் பார்த்தால் முப்பலி என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றை தேவியிடம் சம்ர்ப்பிப்பதைக் குறிப்பதைப் போலத் தோன்றுகிறது.  இவ்வாறு செய்தால் தேவியின் தரிசனம் கிட்டும் என்கிறார் அவர்.

436. Muladhara

Verse 436
பாரடா பரஞ்சோதி முக்கோணத்தில்
பத்திகொண்டு இன்னமொரு கருவைக் கேளு
கூறடா கனிந்து உனது அறிவால் நீயும்
காலறிந்து வாசியினால் கருவைப் பற்றி
ஆரடா நிலையறிந்து பானங் கொள்ளு
நிலையான அறுசபையும் நிலைதப்பாது
பேரடா அடிமூலங் கணேசன் இச்சை
மெய்ஞ்ஞான பூரணத்தின் கெதியைப் பாரே

Translation:
See the supreme effulgence at the triangle
Hear about another essence, with devotion.
Knowing the air, through vaasi, holding it
Know the state and consume the drink
The loci, the six sabha will not lose their status/state
The bottom terminus- the iccha Ganesha
See the path of the meijnana poornam.

Commentary:
The triangle mentioned in the first line refers to the ajna cakra. Agatthiyar talks about another practice.  The yogi becomes aware of how the breath flows, the essence is known with the help of vaasi and the nectar is consumed.  The six sabha or the cakra will emerge and the ganesha and iccha sakthi or buddhi will emerge at the muladhara.  The path of the meijnana poornam or supreme consciousness will become known.


இங்கு  முக்கோணம் எனப்படுவது ஆக்ஞா சக்கரமாகும்.  அங்கு ஒளி தென்படுகிறது.  மற்றொரு வழியை அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். அறிவினால் சரம் எனப்படும் மூச்சு எவ்வாறு ஓடுகிறது என்பதை அறிந்து வாசியினால் கருவைப் பற்றி அமிர்தத்தைப் பருகவேண்டும்.  அப்போது ஆறு சபை எனப்படும் சக்கரங்கள் தென்பட ஆரம்பிக்கின்றன.  அடிமூலம் எனப்படும் மூலாதாரத்தில் கணபதியும் இச்சை எனப்படும் புத்தியும் தென்படுகிறார்கள்.  அதனைத் தொடர்ந்து மெய்ஞ்ஞான பூரணம் எனப்படும் பரவுணர்வு தனது கதியில் பயணிக்கத் தொடங்குகிறது.  இதைப் பார் என்று புலத்தியரிடம் கூறுகிறார் அகத்தியர்.