Verse 381
முப்பு செயநீர்
பாரப்பா சுன்னவகை மூன்றும் ஒன்றாய்ப்
காரப்பா அறுவகை நீர் தன்னால் ஆட்டி
கருணை பெற வழித்து உருட்டி ரவியில் போட்டு
சாரப்பா நீர் வத்த நன்றாய்க் காய்ந்தால்
சற்குருவை தான் பணிந்து புடத்தைப் போடு
வீரப்பா தானொடுங்கி நீறிப் போகும்
வெகு சுருக்கு மூன்றுவகை சுன்னந்தானே
Translation:
See son, the
three types of sunnam together
Placing them
in the mortar
Grinding it
with six types of water
Collect it, to
attain mercy, place it in ravi
When the water
evaporates and it dries well
Saluting the
sathguru, process it
The veeru will
abide and it will become watery
Very condensed,
the three types of sunnam.
Commentary:
During
kundalini yoga the three components involved in the process are prana which
comes in through breath, the mind and the consciousness. Consciousness is held in turya state so that
the mind does not waver. The prana in
the body is mixed with the universal prana which is drawn in through pranayama
and mantra. This is combination- prana,
manas and consciousness are made to ascend through the six cakras. Then the energy so collected is stabilized in
the body by breath through the right nostril and appropriate mantra. This is done by saluting to the sathguru who
taught this technical knowledge. Then the mind, prana and consciousness will
all abide and the divine nectar will begin to secrete. This process is being explained in this
verse.
The three
sunnam are the three components. They
are made to ascend through the six cakra, the six types of water or
principles, The breath occurs through
ravi or the right nostril. They all abide, or lose their vigor (veeru) and
abide. They become tied or tethered in a
particular state.
வாசி பிராணாயாமத்தின்போது பங்கேற்கும் மூன்று வஸ்துக்கள்
பிராணனும் மூச்சும், மனம் மற்றும் உணர்வு.
இந்த மூன்றையும் கொண்டு பிராண சக்தி ஆறு ஆதாரங்களின் ஊடாக சகஸ்ராரத்துக்கு
ஏற்றப்படுகிறது. அப்போது கீழே
இறக்கப்படும் பிரபஞ்ச பிராண சக்தி வலது மூக்கு சுவாசத்தாலும் தகுந்த
மந்திரங்களாலும் உடலுள் நிலைபெற வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் உணர்வு துரியத்திலும் மனம் அசைவற்றும் இருக்கின்றன. இந்த வழிமுறை இந்த அறிவைத் தந்த சத்குருவைப்
போற்றி மேற்கொள்ளப்படுகிறது. அப்போது
அனைத்தும் அடங்க அமிர்தம் சுரக்கிறது.
இந்த கருத்தைத்தான் இப்பாடல் கூறுகிறது. ஜெய நீர் என்பது வெற்றி நீர், அமிர்தம்.
No comments:
Post a Comment