Saturday, 9 April 2016

376. The supreme state and how to reach it

Verse 376
ஆச்சப்பா அமைந்த விதி இதுதானாச்சு
ஆதியந்த பூரணமும் இதுதானாச்சு
மூச்ச ப்பா நின்றவிடம் அதுதானாச்சு
மூவுலகு மாண்டவிடம் அதுதானாச்சு
காச்சப்பா அந்த இடம் சொந்தமாக
காலரிந்து மேலானக் கமலக் கண்ணை
பாச்சப்பா காலறிந்து இடைபின்னாக
மிகுந்தறிந்து மூலமதிற் பதிவாய் நில்லே

Translation:
Yes son, this became the rule
This became the origin terminus fully complete
This is the place where breath stopped
It became the place where the three worlds died
Seek that place as your own
Knowing the breath, direct the superior lotus eye
Direct the breath there with the ida as later
Knowing this, remain in the mulam

Commentary:
Agatthiyar says that the merging of sun and the moon, pingala and ida became the technique to reach the supreme state.  It is the state of kumbaka, breath-free state.  It is the state where distinctions such as bhu, bhuvar and suvar lokha or wakeful, dream and deep sleep states cease and the state of turya is attained.  Agatthiyar tells Pulatthiyar to remain in this state by knowing the pattern of breath which would take him there- through pranayama, and directing the awareness at the ajna, the locus of the third eye which is depicted as lotus.  The breath flows through the pingala when this state is reached.  Hence he says ida was later.  Consciousness is planted at the muladhara to reach this state.


ரவியும் மதியும் ஒன்றாவதே உச்ச நிலையை அடைய விதி என்கிறார் அகத்தியர்.  இந்த நிலையே ஆதி அந்த பூரணம், மூச்சற்ற கும்பக நிலை, பூ, புவர், சுவர் லோகங்கள் எனப்படும் மூவுலகங்கள் அல்லது விழிப்பு, கனவு, ஆழ் உறக்கம் என்ற மூன்று நிலைகள் முடிந்து மீதமிருக்கும் துரிய நிலை.  இந்த நிலையை புலத்தியர் தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் அதற்கு கால் எனப்படும் மூச்சையும் பிராணனையும் அறிந்து தகுந்த விகிதத்தில் பிராணாயாமம் செய்து கவனத்தை மேல் கமலக்கண் எனப்படும் ஆக்ஞையில் வைத்து, பிறகு மூச்சை பிங்கலையில் ஓடச்செய்து கவனத்தை மூலாதாரத்தில் வைக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment