Verse 378
வாசி என்ற சிவயோகந் தனக்கு மைந்தா
மகத்தான காரமுள்ள முப்பு சொல்வேன்
தேசி என்ற உப்புடனே காரம் பூரம்
திறமாக மூன்றும் ஒன்றாய்க் கல்வத்திட்டு
ஊசி என்ற உப்பு நீர் தன்னால் ஆட்டி
உறுதியுடன் தானெடுத்து வட்டு பண்ணி
மாசி என்ற சிவகலசப் புடத்தைப் போடு
மகத்தான சுன்னமிது காரந்தானே
Translation:
For the vaasi
also called siva yoga, Son
I will tell
you about the essence the muppu
Along with the
horse, the salt/uppu the alum/kaara, and camphor/pooram
Grinding the
three in a mortar
Along with the
needle, the saline water
Collecting it
and making a cake
Bake in the “maasi”
sivakalasa.
This is the
magnificient void/sunnam, this is essence/kaaram.
Commentary:
This verse
sounds like a medicinal preparation.
However, it has philosophical concepts embedded in it. Agatthiyar begins the verse saying he will be
talking about siva yoga and vaasi yogam and describes three components. The factors involved in the vaasi yogam are
the prana, mind and consciousness. Desi
mentioned in the third line means the prana whose flow has been regulated by
pranayama. It means a horse. The flow of prana that has been turned
upwards is called “pari” or horse.
Agatthiyar calls this uppu. Uppu corresponds
to ukara. Along with prana, he
recommends adding kaaram or akaaram and pooram.
These correspond to consciousness, akara and prapancha sakthi. These are ground together or merged together
with the salt water which is the amrit that oozes from the lalata. This is then baked in maasi or makara, the
product of maya, the human body the pot of consciousness or siva kalasa.
Thus, the
combination of prana, consciousness, the amrit processed together in the body
results in sunnam or void where all the distinctions are merged to form an
indistinct state. This is the state of akara.
இப்பாடல் ஒரு மருத்துவத் தயாரிப்பு போலத் தோன்றினாலும் யோக
வழிமுறையைத் தன்னுள் கொண்டுள்ளது. தான்
சிவயோகத்தைப் பற்றி, வாசி யோகத்தைப் பற்றிக் கூறப்போகிறேன் என்று தொடங்கும்
அகத்தியர் மூன்று பொருள்களை இங்கு குறிப்பிடுகிறார். வாசியோகத்தில் பங்கேற்கும் மூன்று பொருள்கள்
பிராணன், மனம், உணர்வு ஆகும்.
பிராணாயாமத்தினால் நெறிப்படுத்தப்பட்ட மூச்சு பரி அல்லது குதிரை
எனப்படுகிறது, தேசி என்று மூன்றாம் வரியில் குறிப்பிடப்படுவது குதிரை என்று
பொருள்படும். இந்த பரியை உப்பு என்கிறார்
அகத்தியர். உப்பு என்பது உகாரத்தைக்
குறிக்கும். இந்த உப்புடன் காரம் மற்றும்
பூரத்தைச் சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
காரம் என்பது படிகாரம் என்றும் அகாரம் என்றும் பொருள்படும். பூரம் என்பது சக்தி அல்லது ஊகாரம் (ஊ- சக்தி
சேர்ந்த உகாரம், குறில் சிவனின் எழுத்து, நெடில் சக்தியின் எழுத்து). இவ்வாறு பூரம் என்பது பிரபஞ்ச சக்தியைக்
குறிக்கும்.
இந்த மூன்று பொருள்களையும் ஊசி எனப்படும் உப்பு நீர் கொண்டு
கல்வத்தில் அரைக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
இது லலாடத்திலிருந்து ஊறும் அமிர்தத்தைக் குறிக்கும். இந்தப் பொருள்களை ஒன்றாக அரைத்த பிறகும் அதை
வட்டாகச் செய்து மாசி என்னும் சிவகலசப் புடத்தைப் போடவேண்டும் என்கிறார்
அவர். மாசி என்பது மா எனப்படும்
மாயையினால் தோற்றுவிக்கப்படும் உடலைக் குறிக்கிறது. சிவ கலசம் என்பது விழிப்புணர்வு இருக்கும் கடம்
அல்லது பானையைக் குறிக்கிறது. நமது உடலை
கடம் அல்லது பானை என்று குறிப்பிடுவது வழக்கம்.
இந்த வழிமுறையைச் செய்தால் கிடைப்பது சுன்னம் என்கிறார் அகத்தியர். சுன்னம் என்பது சூனியம் என்பதன் தமிழ்ச்
சொல். சூனியம் என்பது ஒன்றுமில்லாத நிலை
அல்ல. அனைத்தையும் உள்ளடக்கிய இதுதான்
என்று குறிப்பிட முடியாத நிலை. இந்த நிலையே
சிவயோகத்தின் முடிவில் ஏற்படுகிறது என்கிறார் அகத்தியர். இந்த நிலையே அகார நிலை.
No comments:
Post a Comment