Verse 380
ஆச்சப்பா இன்னமொரு சுன்னஞ்சொல்வேன்
ஆதியென்ற பூரமுமனந்தஞ்சேர்த்து
காச்சப்பா களிம்பான துரிசு கூட்டி
கல்வமதில் பழச்சாற்றால் நன்றாயாட்டி
மூச்சப்பா தானிருக ரவியிற்போட்டு
முன்னவனைத் தான் பணிந்து புடத்தைப் போடு
நீச்சப்பா நிலையாத காரமாச்சு
நிசமான காரம் வெகு சுன்னமாச்சே
Translation:
I will tell
you about another sunnam
The Adi, the
pooram and the mind
Boil them, the
verdigris, the thurisu, adding it also
Grind them in
the mortar with the juice from the fruit/ ancient essence
Place the
breath in ravi
Salute the
earlier one and process it
It will become
the wavering kaaram
The true
kaaram became sunnam.
Commentary:
The breath
along with the prana is mixed with the universal prana sakthi during vaasi
yogam. This is done through the
mind. The mind is the cause of innate
impurities or mala. Siddhas call the
mala as verdigris or the covering over the metal because when they are removed
the original shine of the metal, the nature of the soul, is revealed. Thus, the manas causes the thurisu or kalimbu
or mala. Pazhacchaaru means fruit
juice. This may refer to the amrit or
the nectar that secretes during the vaasi yoga.
This is also the ancient fluid, the one that is associate with the soul
since eternity. The breath is made to
flow through the ravi or the pingala nadi during this process. The “munnavan” or the previous one refers to
the Lord as he is the earlier one of everything. Worshiping the Lord this process is performed
so the mental wavering stops and it becomes sunya or unwavering entity that
holds all thoughts and movements within it.
வாசியோகத்தின்போது மூச்சும் பிராணனும் சேர்ந்த வாசி,
பிரபஞ்ச பிராண சக்தியுடன் சேர்க்கப்படுகிறது.
இது மனத்தினால் நிகழ்த்தப்படுகிறது.
இந்த மனமே மலங்கள் எனப்படும் களிம்புக்குக் காரணம். சித்தர்கள் மலங்களைக் களிம்பு என்று
அழைக்கின்றனர். எவ்வாறு உலோகத்தின் மேல்
உள்ள களிம்பு நீக்கப்படும்போது அந்த உலோகத்தின் உண்மையான தன்மை வெளிப்படுகிறதோ
அதேபோல் மலங்கள் விலக்கப்படும்போது ஆன்மாவின் உண்மையான தன்மை வெளிப்படுகிறது. மலங்கள் மனத்தின் அசைவினால் ஏற்படுகின்றன. அந்த அசைவு நிறுத்தப்பட்டால்தான் வாசியோகம்
நடைபெறுகிறது. இந்த அசைவை நிறுத்த
பழச்சாறு எனப்படும் அமிர்த்தத்தை மூச்சுடனும் ஆதி எனப்படும் பிரபஞ்ச பிராண
சக்தியுடனும் கூட்ட வேண்டும். அப்போது மனத்தின்
அசைவுகள் நின்று சுன்னம் எனப்படும் அனைத்தையும், எல்லா எண்ணங்கள், விருப்பங்கள்
ஆகியவற்றையும், உள்ளடக்கிய நிலை ஏற்படுகிறது.
இந்த செயலை முன்னவன் எனப்படும் இறைவனை வணங்கிச் செய்யவேண்டும் என்கிறார்
அகத்தியர்.
No comments:
Post a Comment