Verse 374
கரத்தின் விரல் மகிமை
முத்தியுள்ள கரத்தின் விரல் மகிமைதன்னை
மோனமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
பத்தியுள்ள அங்குஷ்டம் பெருவிரலாய் நிற்கும்
பதிவான அடுத்த விரல் தற்சனையாம் மைந்தா
முத்தியுள்ள நடுவிரல்தான் மத்திமையாய் நிற்குந்
திருவான பவுத்திரந்தான் அனாமிகைதான் மைந்தா
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டி எனலாகுஞ்
சுகமாக இதையறிந்து முத்திரையைச் செய்யே
Translation:
Speciality of
the fingers
The speciality
of the fingers
I will say with
silence, listen well.
With devotion. The thumb is ankushtam
The next
finger is tharjanai
The middle
finger is maddhimai
The next one
is anamikai, son
The pure little
finger is kanutti.
Knowing these
well hold the mudra.
Commentary:
Agattiyar is
mentioning the name of each of the fingers in this verse. The thumb is the ankushtam, the index finger
is tharjanai, the middle finger is maddhimai, the ring finger is anamika and
the little finger is kanutti. Knowing
the names one should perform the mudra.
இப்பாடலில் அகத்தியர் விரல்களின் பெயர்களை விளக்குகிறார்.
கட்டைவிரல் அங்குஷ்டம், சுட்டு விரல் தற்சனை, நடுவிரல் மத்திமை, மோதிரவிரல் தர்சனை
மற்றும் சிறுவிரல் கனுட்டி என்று அழைக்கப்படுகின்றன. இதையறிந்து ஒருவர் முத்திரைகளைச் செய்ய
வேண்டும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment