Verse 377
பதிவான இடமதுதான் புருவ மத்தி
பரை ஞான கேசரியாள் இருக்கும் வீடு
விதியான வீடறிந்து கெதி என்றெண்ணி
மெஞ்ஞான அமுர்த ரசம் கொண்டாயானால்
மதியான சந்திரகலை ரவியில் சென்று
மகத்தான சோதி பிரகாசங் காணுங்
கெதியான சோதியான பிரகாசங் கண்டால்
கேசரத்தை ஆளுகிற வாசிதானே
Translation:
The place
where this occurs is the middle of the brow
The house of
parai, jnana kechari
Knowing the
house, considering it as your refuge/path
If you consume
the nectar
The
chandrakala, the mathi will go to ravi
The glorious
effulgence, flame will be seen
When the
path/goal, brilliance is seen
It is the
vaasi that rules the kecharam.
Commentary:
The ajna cakra
is the locus for the space principle.
The word kechari means one who roams in space. (ka+chari). This is attained through
vaasi. Vaasi is the lifeforce which is a
mixture of prana and the universal energy brought together through breath by
the process of pranayama. When the yogin
attains the akasha siddhi the nectar or amrit will secrete. Chandra kala going
to ravi is the harmony of the 16 measures of chandra kala with the 12
suryakala+4 agni kala.
This will
result in vision of effulgence, a brilliance.
ஆக்ஞா சக்கரம் ஆகாய தத்துவத்தைக் குறிக்கும். கேசரி அல்லது க+சரி என்றால் வெளியில்
சஞ்சரிப்பது என்று பொருள். இந்த சித்தியை
ஆகாய சித்தி என்று கூறுவர். பொருள்கள்,
செயல்கள், எண்ணங்கள், ஆகிய அனைத்துக்கும் இருப்பிடமாக, அடித்தளமாக இருப்பது
ஆகாயம். ஆகாய சித்தி பெற்ற யோகி
இவையனைத்தையும் தனது இருப்பிடத்திலிருந்தே அறிகிறார். இந்த சித்தி வாசியால் கிட்டுகிறது. வாசி என்பது
உடலில் உள்ள பிராண சக்தியும் பிரபஞ்ச பிராண சக்தியும் சேர்ந்தது. இந்த சக்தி நிலை பிராணாயாமத்தால் ஏற்படுகிறது. இந்த பிராணாயாமத்தின் உச்சியில் அமிர்தம்
சுரக்க ஆரம்பிக்கிறது. சந்திரகலை ரவியில்
செல்வது என்பது பிராணன் இடை பிங்கலையில் சமநிலையில் ஓடுவது என்று பொருள். அப்போது சோதி நிலை தோன்றுகிறது. இதைத்தான்
இப்பாடல் விளக்குகிறது.
No comments:
Post a Comment