Tuesday, 7 June 2016

417. Definition of Adhi

Verse 417

ஆதிஎன்ற நாதமடா சோதி சோதி
அதையறிந்து பூரணமாய்ப் பூசை செய்தால்
சோதிஎன்ற ஞானமது இதுதான் ஆச்சு
சுகமான சிவயோக மிதுதானாச்சு
நீதிஎன்ற பிராணாய மிதுதானாச்சு
நிசமான வாசியது மிதுதானாச்சு
ஓதியதோர் மந்திரமு மிதுதானாச்சு
உண்மையென்ற பூசையது மிதுதானாச்சே

Translation:
The Adhi, the nadha is the effulgence, jyothi,
If you performing puja knowing it fully/as poornam
It became the jnana, the jyothi.
It became the sukha siva yogam
It became the neethi, the pranayama
It became the truth, the vaasi
It became the mantra recited
It became the truth, the puja

Commentary:
In the previous verse Agatthiyar mentioned that if a yogin performs siva sakthi puja, knowing the guru and remains at the third eye, the ajna he will see the siva rupa and the adhi.  In this verse he defines the aadhi.  It is the nadha which is also the effulgence.  The nadha or the primordial sound is the first manifestation following Siva and Sakthi.  Nadha gives rise to bindu or the primordial form.  Agatthiyar says that the nadha is the effulgence of wisdom, the sivayogam, the pranayama, the vasi, the mantras recited and the truth or puja.


முந்தைய பாடலில் அகத்தியர் ஒரு யோகி, குருவைப் பார்த்து, சிவசக்தி பூசை செய்து, ஆக்னையில் கவனத்தை நிறுத்தினால் அவருக்கு சிவரூபமும் மனத்தெளிவும் ஆதியின் தரிசனமும் கிட்டும் என்றார்.  இப்பாடலில் அவர் ஆதி என்பது நாதம் என்று விளக்குகிறார்.  ஒருமை நிலையில் இருக்கும் இறைமை பலவாக, பிரபஞ்சமாக விரியும்போது சக்தி, சிவ தத்துவங்களுக்குப் பிறகு தோன்றுவது நாதமாகும்.  இந்த நாதமே பிந்து எனப்படும் உருவை ஏற்படுத்துகிறது.  இந்த நாதம்தான் ஆதி, சோதி, ஞானம் ஜோதி, சுக சீவ யோகம், நீதி, பிராணாயாமம், உண்மையான வாசி, ஓதப்படும் மந்திரங்கள், உண்மையான பூசை என்கிறார் அகத்தியர்.

416. Seeing Siva rupa and Adhi

Verse 416
பாரப்பா பதியறிந்து குருவைக் கண்டு
பத்தியுடன் சத்திசிவ பூசை பண்ணி
காரப்பா கருணைவிளி மலர்க்கண்ணாலே
கமலமென்ற புருவநடு கண்ணைப் பற்றி
நேரப்பா நின்றதினால் மைந்தா மைந்தா
நிசமான சிவரூபம் கண்ணிற்காணும்
தேரப்பா சிவரூபங் கண்ணால் கண்டு
தெளிந்து மனங் கொண்டதினால் ஆதி பாரே

Translation:
See son, knowing the locus and seeing the guru,
Performing sakthi siva puja
See it with the merciful flower-eyes
Holding to the lotus, the eye in the middle of the brow
Son, Son, because of remaining straight
The true sivaroopa will be seen
Seeing the sivaroopa and becoming an expert
Becoming clear and adorning the mind, see the Adhi.

Commentary:
The locus mentioned here is the brow middle.  Agatthiyar tells Pulathiyar to see the guru and perform Sakthi and Siva puja.  Worship of Siva and Sakthi means merging the nadha and bindhu together.  It is the process of merging the distinctions, dualities.  Then one will see the Siva roopa here.  If one see the siva rupa then one’s mind will become clear and one will see the Adhi.

இங்கு அகத்தியர் பதம் என்று குறிப்பிடுவது ஆக்ஞையை.  இந்த  குருபதத்தைப் பார்த்து, சிவசக்தி பூசை செய்து மூன்றாம் கண் எனப்படும் ஆக்ஞையைப் பற்றி நின்றால் ஒருவர் சிவரூபத்தைப் பார்ப்பார் என்றும் அவ்வாறு பார்த்தால் மனம் தெளிவடைந்து ஆதியின் தெரிசனம் கிட்டும் என்றும் அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

சிவசக்தி பூசை என்பது நாத பிந்துக்களைச் சேர்ப்பது.  இரண்டாக இருக்கும் நிலையை ஒன்றாக்குவது.  இதுவே ஆதி நிலை.  

Monday, 6 June 2016

415. ukaara deeksha- benefits of worshipping moola sakthi

Verse 415
உகார தீக்ஷை
திறமான சத்தியடா உகார சக்தி
சிவசிவா மனம் நிறுத்திப் பூசை செய்தால்
உரமான தேகமடா உறுதியாகும்
உற்ற கலைக் கியானமடா சித்தியாகும்
பரமான அண்டபதம் கைக்குள்ளாகும்
திருவான பூரணமுஞ் சித்தியாகும்
திறமான பராபரமுந் தாந்தானாகும்
பதிவான மூலசத்தி பலந்தான் பாரே

Translation:
Ukaara deeksha
The capable Sakthi is the ukaara sakthi
Siva sivaa!  If the mind is arrested and puja performed
The healthy body will become firm
The kalai gnana siddhi will be attained
The param, the locus of macrocosm will come under control
Siddhi of Thiru, poorna will be attained
The Paraparam will become self,
See the effect of the mulasakthi/primordial sakthi.

Commentary:
Agatthiyar explains the primordial power, mula sakthi, here.  He says that when the sakthi, the ukara is worshipped, arresting the mind then the body will become strong, the kalai jnana or the wisdom of kala will be attained along with the status of Param, the locus in macrocosm.  Poorna siddhi will be attained and Paraparam will become the Self.  Thus, the yogin attains the supreme state by worshipping Mulasakthi or the primordial energy.


இப்பாடலில் மூல சக்தியை விளக்குகிறார் அகத்தியர்.  இந்த சக்தியே உகார சக்தி என்றும் அதை மனதை நிறுத்தி வழிபடுவோர்கள் வலிமையான உடலைப் (காய சித்தி) பெறுவர் என்றும் கலைஞான சித்தியும் திரு எனப்படும் பூரண சித்தியும் பெறுவார் என்றும் பரம் எனப்படும் அண்ட பதவி அவருக்குக் கிட்டும் என்றும் கூறுகிறார் அகத்தியர்.  பராபரமே அவரது தான் என்று ஆகும் என்றும் அவர் கூறுகிறார்.  இவ்வாறு ஒருவர் உச்ச நிலையை மூலசக்தியை வழிபடுவதன் மூலம் அடைகிறார் என்கிறார் அகத்தியர்.

Sunday, 5 June 2016

414. Sakthi, the karpam

Verse 414
கற்பம்
மனதான மனதறிந்து மனத்தைக் காக்க
மார்க்கமுள்ள கற்பமொன்று வழுத்தக் கேளு
கனமான கற்பமடா ஆர்தான் காண்பார்
கருணைவளர் உகாரமடா சத்தி சத்தி
குணமான உகாரமென்ற சத்தி தன்னை
குருவருளால் அந்திசந்தி பூசை பண்ணிச்
சினமான ஆங்காரத் திறுக்கறுத்து
சின்மயங் கொண்டென்னாளும் திறமாய் நில்லே

Translation:
Karpam
To know protect the mind, knowing about it
Listen to me describe the karpam, the path
The heavy karpam- who will see it?
The merciful ukara is sakthi, sakthi,
The quality, ukara the sakthi-
Worshipping it during andhi and sandhi (terminus and twilight)
Cutting away the anger, the ahamkaram
Remain, adorning chinmayam, always.

Commentary:
Karpam means a path, a way to reach to something.  The path that Agatthiyar describes in this verse is sakthi.  It is through sakti that the soul reaches the supreme state.  Hence, sakthi is the karpam.  Siddhas explain the relationship between siva and sakthi as the gemstone and its effulgence, a flower and its fragrance.  Thus, sakthi is the guna of siva.  Hence, worshipping Sakthi is worshipping the saguna form of Brahman.  She, the ukara, should be worshipped during andhi and sandhi. 

The words andhi and sandhi have an interesting meaning.  Andhi means terminus.  The terminus is the peak or the end of something.  In kundalini yoga the andhi are the muladhara and the supreme state.  Sandhi is the point where they meet.  The universal energy and limited energy in the body meet at every chakra.  For example when we look at Sivavaakiyar’s expression sivayavasi is two headed fire “iruthalaikkoLLi” it means the two fires, the kundalini in the body and the sikaara, the effulgence or jyothi form, the ultimate state are the termini represented by si.  The sandhi or the meeting point is ya or the ajna cakra, the sky principle.  Hence, Siddhas say that the soul should look at muladhara and ajna together, keeping its mind unwavering and consciousness in the turya state.

Agatthiyar begins this verse by mentioning the mind.  He says the nature of the mind must be known to protect it.  The mind is the cause for attachments, limitations. Agatthiyar has said elsewhere that when the mind is perfected there is no need to recite any mantra- “manamadhu semmaiyaanaal mandiram jebikka vendaam”.  Bhagavan Ramana Maharishi equated the mind to a stick with which one stokes the fire.  It is held until the end and then the stick is also thrown into the fire.  The mind is held until the last point at which it is also given up.  Hence, Agatthiyar says that one has to know the nature of the mind and protect it.  The way to protect the mind is by cutting away anger, the sign of ahamkara.  One has to remain as chinmaya or embodiment of consciousness to travel in the path of sakthi.

கற்பம் என்றால் பாதை என்று பொருள்.  இங்கு அகத்தியர் விளக்கும் பாதை சக்தி.  சக்தியின் வழியில் பயணித்து ஆன்மா உச்ச நிலையை அடைகிறது.  சித்தர்கள் சிவனுக்கும் சக்திக்கும் இடையே உள்ள உறவை விளக்க ரத்தினமும் அதன் ஒளியும், மலரும் அதன் மணமும் என்று கூறுகின்றனர்.  சக்தி சிவனின் குணமாகும்.  அதனால்தான் சிவனையும் சக்தியையும் பிரிக்கமுடியாது என்கின்றனர்.  இவ்வாறு சக்தியை வழிபடுவது என்பது சகுண பிரம்மன் வழிபாடாகிறது.  சக்தியை ஒருவர் அந்தி சந்தியில் வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர்.

அந்தி சந்தி என்ற சொற்கள் ஒரு சுவாரசியமான பொருளைக் கொண்டுள்ளன.  அந்தி என்றால் ஒன்றன் முடிவு, உச்சம்.  குண்டலினி யோகத்தில் முடிவு என்பது மூலாதாரம் மற்றும் உச்ச பரநிலைகளாவை.  இங்கு சிவவாக்கியரின் தொடர், “சிவயவசி என்பது இருதலைக் கொள்ளி” என்பதைப் பார்ப்போம்.  சி என்பது அக்னியைக் குறிக்கும் எழுத்து.  அக்னியின் அந்திகள் உடலில் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி மற்றும் உச்ச நிலையான சிகாரம் அல்லது அக்னி ஸ்வரூபமான மகாகாரண சரீரம்.  இந்த இரண்டும் சந்திக்கும் இடம் வெளி, அதைக் குறிக்கும் எழுத்து ய எனப்படும் ஆகாயம்.  அது உடலில் ஆக்ஞா சக்கரமாகவும் வெளியில் பரவெளியாகவும் உள்ளது. இவ்வாறு இரண்டு தீக்கள், கொள்ளிகளைக் கொண்டது சிவயவசி என்று கூறுகிறார் சிவவாக்கியர்.  இதனால் அந்தி என்பது மூலாதாரம் மற்றும் மகா காரண சரீரம் என்றும் சந்தி என்பது வெளி அல்லது ஆக்ஞா சக்கரம் என்பதும் புலப்படுகிறது.  இந்த இடங்களில், நிலைகளில் சக்தியை வழிபடவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். 


இப்பாடலை அகத்தியர் மனதைப் பற்றிக் கூறுவதாகத் தொடங்குகிறார். மனத்தைக் காக்க அதன் தன்மையை அறியவேண்டும் என்கிறார் அவர்.  வேறொரு இடத்தில் அவர் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.  பகவான் ரமணர் மனத்தை நெருப்பைக் கிளரும் ஒரு குச்சி என்கிறார். அந்த குச்சியினால் தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்துவிட்டு முடிவில் அந்தக் குச்சியையும் தீயினுள் இட்டுவிடுவதைப் போல மனத்தை கடைசிவரை அடையப் பயன்படுத்திவிட்டு முடிவில் அதையும் விட்டுவிட வேண்டும்.  இந்த மனத்தை எவ்வாறு காப்பது என்றால் அதிலிருந்து கோபம் என்னும் அகங்காரத்தை விலக்கவேண்டும். சின்மயமாக நிற்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

413.Living a sivayoga life

Verse 413
பாராக்கும் புலத்திய மாரிஷியே அய்யா
பதியான உலகமது பேயாங்கூற்று
நேரான கூற்றதுதான் சிவன் செயலென்றெண்ணி
நேர்மையடன் பூரணமாய்ப் புருவமேவி
தூரான அடிமுடியும் ஒன்றாய்க் கண்டு
சுக சீவப் பிராணமயமாக நின்றால்
மாறாத வாழ்வுசிவ யோக வாழ்வு
வந்துதடா வந்துதடா மனதைக் காரே

Translation:
Pulathiya Maharishi, Sir!
The world, the locus is the god of death, the ghost,
Considering the god of death as the action of Sivan,
Going to the brow middle, straight,
Seeing the top and bottom as one
If you remain as sukha jeeva pranamayam
The life is that of sivayoga life
It occurred, it occurred, watch the mind.

Commentary:
In this verse Agatthiyar defines the life of sivayoga or “sivayoga vaazhvu”.  He says that if one considers this world as nothing but god of death, Yama, remains at the ajna cakra seeing the top and bottom- the muladhara and ajna together and lives as embodiment of sukha jeeva prana then it is the life of sivayoga. 

இப்பாடலில் அகத்தியர் சிவயோக வாழ்வு என்றால் என்ன என்று விளக்குகிறார்.  ஒருவர் இவ்வுலகைக் கூற்று அல்லது மரணத்தைக் கொடுப்பது, பேய் என்று எண்ணி, புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் நின்று, அடி முடி எனப்படும் மூலாதாரம், ஆக்ஞா என்ற இரு சக்கரங்களையும் ஒன்றாகப் பார்த்து சுக ஜீவபிராணமயமாக இருப்பதே சிவயோக வாழ்வு என்று கூறுகிறார்.

சிவயோகம் என்றால் சிவத்துடன் சேர்ந்திருப்பது என்று பொருள். 

Friday, 3 June 2016

412. Kevuna mani kuligai

Verse 412
மணிகெவுன குளிகை
பண்ணப்பா அந்திசந்தி பூசைபண்ணி
பரம கைலாச மென்ற பதியை நோக்கி
கண்ணப்பா தானறிந்து தன்னைப் பார்த்தால்
கசடான கர்மவினை காணாதொடும்
எண்ணப்பா என்று தன்னை மறந்திடாதே
எட்டறிந்து திட்டமுடன் கட்டாய் நில்லு
முன்னப்பா விசையறிந்து பாய்ந்த தண்ணீர்
முத்தியுடன் மணி கெவுன குளிகை பாரே

Translation:

Mani kevuna kuligai

Perform worship during end and meeting points
Towards the Parama Kailasa the locus
Knowing the eye, if the self is seen
The dregs, the karma will run away,
Think son, do not forget the self
Knowing the eight remain firmly,
The water that flowed knowing the speed
See the mani kevuna guligai.

Commentary:
Agatthiyar tells Pulathiyar that he should perform the above mentioned worship of Ganapathy (drawing down of amrit) during evenings and junction points.  If one perceives the sahasrara, the Kailasa, then the karma will run away.  Knowing the eight is knowing the akara or the Divine.  If one remains in this state, the water, the bindu will flow with a great force.  This is the mani kevuna kuligai. 

Siddhas recommend that the gross semen or bindhu should be processed with the fire of kundalini and it flow reversed from downwards to upwards.  This process is called “madai maarral” or reversal of the flow.  We should remember here that the sushumna is not in the physical body it is in the subtle body.  Thus the energy of the semen is reclaimed by the yogin.  The semen is said to get solidified by this process.  The siddhas call this kevuna mani and say that it confers kevuna siddhi or the mystical accomplishment that lets them travel in space. Again, these methods should be learnt from a guru.

மேற்பாடலில் கூறிய பூசையை அந்தி சந்தி செய்யவேண்டும் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.  அந்த பூசை அல்லது கணபதி அபிடேகம் என்பது அமர்தத்தை மூலாதாரத்துக்கு இறக்குவது.  இதை ஒரு நாளில் பல முறை செய்து பரம கைலாசம் என்னும் சகஸ்ராரத்தைப் பார்த்தால்  கர்மங்கள் ஓடிவிடும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு எட்டு எனப்படும் அகாரத்தை அறிந்திருந்து நின்றால் தண்ணீர் எனப்படும் விந்து பாய்ந்து ஓடும், அதனால் மணி கெவுன குளிகையாகும் என்றும் அவர் கூறுகிறார்.

விந்து அல்லது சுக்கிலத்தை யோக அக்னியால் அதன் கீழ்நோக்கு பாதையை மாற்றி சுழுமுனை நாடியின்மூலம் மேலே ஏறச்செய்வது மடைமாற்றல் எனப்படுகிறது.  இதனால் அது ஒரு மணி போல கெட்டிப்படுகிறது என்றும் அது கெவுனசித்தி எனப்படும் ஆகாய சஞ்சார சித்தியை அருளுகிறது என்றும் சித்தர்கள் கூறுகின்றனர்.  இந்த விவரங்களை ஒரு குருவிடமிருந்தே கற்கவேண்டும்.

Wednesday, 1 June 2016

411. Abhisheka to Ganapathy, meijnana poornam state

Verse 411
பாரப்பா தன்னைமிக அறிவால்கண்டு
பாலகனே விந்துரச அமுர்தம் வாங்கி
நேரப்பா சற்குருவை தியானம் பண்ணி
நிலையறிந்து கணபதிக்கு அபிஷேகித்தால்
வீரப்பா கொண்டு நின்ற அறிவுமைந்தா
மெய்ஞ்ஞான பூரணமாய் விளங்கும் பாரு
காரப்பா அந்தநிலை சொந்த மென்று
கருணையுடன் அந்திசந்தி பூசை பண்ணே

Translation:
See son, seeing with awareness
Boy! Receiving the bindu amrita rasa
Contemplating on the sathguru
If you perform ablution to Ganapathy, knowing the state
The awareness, that is roaring, Son!
Will remain as meijnana poornam
Attain that state as belonging to you
Perform andhi sandhi puja, with mercy.

Commentary:
This verse talks about the amrit that is received through vaasi yoga.  The amrit that decends from lalata or dvadasantha is usually lost to the surya mandala.  To prevent this, it is collected at the vishuddhi and brought down to muladhara.  Agatthiyar is referring to this process here.  The bindu amrita rasa is the nectar.  It is brought down to muladhara- ablution performed to Ganapathy means this, Then the awareness or conscisouness will remain as meijnana poornam.  The consciousness will not be limited but all pervading.  This is the natural state of the soul.  Knowing this the yogin has to raise his consciousness through muladhara and the intermediate cakras- the andhi, terminus and sandhi, the points of meeting.


லலாடம் அல்லது துவாதசாந்தத்திலிருந்து ஊறும் அமிர்தத்தை எவ்வாறு உடலுக்குள் இறக்குவது என்பதை இப்பாடல் கூறுகிறது.  மேலிருந்து கீழிறங்கும் அமிர்தம் பொதுவாக சூரியமண்டலத்தினால் சுவீகரிக்கப்பட்டு வீணாகிவிடுகிறது.  அவ்வாறு வீணாகாமல் இருக்க அதை விசுத்தியில் சேகரித்து பின் மூலாதாரத்துக்கு இறக்கவேண்டும்.  இதையே அகத்தியர் கணபதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.  அவ்வாறு செய்தால், அமிர்தம் மூலாதாரத்துக்கு வந்தால் ஒருவரது உணர்வு அல்லது அறிவு, மெய்ஞ்ஞான பூரணமாகும் என்றும் இதுவே ஒருவரது இயற்கையான நிலை என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த நிலையை அறிந்து ஒருவர் அறிவை அந்தி எனப்படும் மூலாதாரத்திலும் சந்தி எனப்படும் பிற சக்கரங்களின் ஊடும் எழுப்பவேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.