Friday, 5 August 2016

469. Benefits of the amutha rasam

Verse 469
பாரப்பா மவுனமுடன் நின்று வாழ
பரைஞான கேசரியாள் பாதம் போற்றி
சாரப்பா அவள்பதமே கெதியென்றெண்ணி
சங்கையுடன் மவுனரசந்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேராலே
பேரண்டஞ் சுற்றிவர கெதியுண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்துகொண்டு பூரணத்தை அடுத்து வாழே

Translation:
See son, to live wth silence
Praising the sacred feet of lady Parai Jnana Kechari
Considering her feet as the refuge
If the essence of silence is consumed
By the austerities
The capacity to roam around the universe will become possible
Who will know, the nature of silence
Knowing it, live associated with poornam.

Commentary:
Agatthiyar says that the amrit rasa that occurs at lalata, if it is consumed through austerities, will grant the supreme silence which will make the yogi traverse the space.  This capacity is called kevuna siddhi


அமிர்த ரசத்தை தவத்தின் மூலம் பருகினால் ஒரு யோகி ஆழமான மவுன நிலையை அடைவார், அவரால் கெவுன சித்தி எனப்படும் வானத்தில் சூட்சும நிலையில் பயணிக்கக்கூடிய தகுதி ஏற்படும், அதனால் ஒருவர் மவுனத்தின் போக்கை அறிந்துகொண்டு பூரணநிலையைச் சார்ந்து வாழுமாறு அகத்தியர் கூறுகிறார்.

Thursday, 4 August 2016

468. Joining the akara ukara into omkara

Verse 468
பேணிப்பார் பஞ்சகர்த்தாள் அஞ்சுமொன்றாய்
பிலமாக நின்று விளையாடுதற்கு
பூணிப்பார் அகாரமென்ற சிவமாம் விந்தை
புத்தியுடன் பூரணமாய்ப் பூசை பண்ணி
ஊணிப்பார் அதன் பிறகு உகார சத்தி
ஓமெனவே தான் செபித்து உறுதிபெற்றால்
ஆணிமாத்த திகமதாய் பஞ்ச பூதம்
அப்பனே பூரணமா யாகும்பாரே

Translation:
Consider the five actors as one
To play firmly
The akara, the Sivam is the bindu
Performing fully complete puja
Look carefully the ukara sakti
If om is chanted and became strong,
The five elements will be supremely pure
Son, they will become poornam, See.

Commentary:
Bindu is the primordial form.  It is Sivam.  It is the locus or the point of emergence from which emerged the five elements.  Also, the actions of five elements occur in the world which also originated from the bindu.  Agatthiyar says that this bindu is akara, Sivam.  These elements are activated by Sakti, the ukara.  Thus, akara and ukara, the bindu and nadha together remain as the five elements in their functional state.  Omkara brings the akara and the ukara together thus resulting in a state of singularity.  It brings together bindu and nadha or Siva and Sakti.  Thus, omkara makes the five elements reach the fully complete state or poornam.


பிந்து என்பது ஆதி உரு.  இதிலிருந்துதான் உலகம் ஒரு உருவுடன் பிறக்கிறது. இந்த பிந்து அகாரம் அல்லது சிவம் என்கிறார் அகத்தியர்.  இந்த பிந்துவுக்கு சக்தியளிப்பது உகாரம்.  இவ்வாறு அகார உகாரங்கள் அல்லது பிந்து நாதங்கள் செயல்படும் உலகமாக இருக்கின்றன.  பஞ்ச பூதங்களும் அவ்வாறே செயல்படுகின்றன.  அவற்றின் உருவம் அகாரம், செயல்பாடு உகாரம்.  இந்த அகார உகாரங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஓம்காரம் அல்லது ஒருமை நிலையை அடைகின்றன.  இவ்வாறு பஞ்சபூதங்களைச் சேர்த்தால் அவை பூரண நிலையை அடைவதைக் காணலாம் என்கிறார் அகத்தியர்.

Wednesday, 3 August 2016

467. Elements as pairs

Verse 467
காணவே சத்திசிவ மாகிநின்ற
காலான வாய்வுடனே தீயும் ரெண்டும்
பூணவே ஆகாயஞ் சாட்சியாகப்
போனதின்பின் பிரிதிவியும் அப்பும் ரெண்டு
தோணவே ரெண்டுமது மொன்றாய்க் கூட்டி
சேர்ந்து மிகத்தான் மடிந்து சுத்தமாகப்
பேணவே மண்ணாகி உப்பாய்ப் போன
பேச்சறிந்து அஞ்சையுமே பேணிப்பாரே

Translation:
To see, Sakthi and Sivam
Adorrned as air and fire
With the sky as the witness
After that the earth and water.
Joining the two together
With their identites dying and becoming pure
They become soil and salt
Knowing this, see the five.

Commentary:
Agatthiyar says that Sivam and Sakthi become the five elements.  He describes them as pairs,  fire and air, earth and water with sky as the witness.  These two should be joined together, that is Sakthi and Sivam should be joined together, nadha and bindu brought together to turn them into soil and salt. 


சக்தியும் சிவமும் ஐந்து பூதங்களாகின்றன என்னும் அகத்தியர் அவற்றை இரட்டை இரட்டையாகக் கூறுகிறார்.  காற்று, தீ என்ற இரண்டு, நிலம் நீர் என்ற இரண்டு இவற்றிற்கு ஆகாயம் சாட்சி என்கிறார் அவர்.  இந்த இரண்டுகளை ஒன்றாகக் கூட்டவேண்டும் அப்போது அவை மண்ணும் உப்புமாகும் என்கிறார் அகத்தியர்.  

Tuesday, 2 August 2016

466. Sivam, Sakthi and Vaasi-- what are they?

Verse 466
பாரப்பா தன்னகத்தைப் பதிவாய்ப் பார்க்கில்
பாழான ரவிமதியும் பாய்ந்து பாய்ந்து
நேரப்பா ஒன்றையொன்று நம்பாமல்தான்
நிலைதவறி மாண்டயிடம் யார்தான் காண்பார்
சேரப்பா மாண்டகெதி என்னவென்றால்
திங்கள் என்ற சந்திரனே வாசியாச்சு
வீரப்பா கொண்டதொரு மூல ஆவி
விளங்கி நின்ற சத்திசிவமாகுங்  காணே

Translation:
See son, if the locus of the self is seen,
The destructive (void) the ravi and madhi (pingala and ida/sun and moon)
Flowing greatly without trusting each other
The place where they died, losing their status- who can see it?
Join them/ join that state, the way they died-if you question it
The moon became the vaasi
The primal soul (moola aavi) with vigor
Became the Sakti Sivam.  See it.

Commentary:
Agatthiyar explains Sakti, Sivam and vaasi in this verse.  Thingal or chandra or the moon indicates the ida nadi.  Universal prana or life force enters the body through the ida nadi.  It is stabilized in the body by the pingala nadi or surya.  Thus the vaasi is chandra or madhi.  The primal soul or Paramatma became the duality- Sakthi and Sivam.  Agatthiyar is talking about the body here.  The Paramatma became Sakti and Sivam in the body while the prapancha prana which remains in space became the vaasi or the moon.

The prana flows through the ida and pingala nadi, usually, during breathing.  The place where they died refers to the kumbaka state.  This state occurs in the chandra mandala which spans the region from the throat to the forehead.  H


சக்தி, சிவம் பிராணன் என்ற மூன்றையும் இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  இவை உடல் நோக்கிலிருந்து விளக்கப்படுகின்றன.  பிரபஞ்ச பிராண சக்தி உடலினுள் இடை நாடி மூலமாக வருகிறது.  இதுவே திங்கள் அல்லது சந்திரன் எனப்படுகிறது.  இதுவே வாசியாகிறது என்கிறார் அகத்தியர்.  மூல ஆவி அல்லது பரமாத்மாவே உடலில் சக்தி சிவமாகின்றது என்றும் அவர் கூறுகிறார்.  

Monday, 1 August 2016

465. 11, 12, 13, 14 and 15- Amavasi

Verse 465
ஏகமென்ற தேசியடா ஏகாதேசி
இன்பமுடன் துவாதேசி ரெண்டுமாகி
தேகமென்ற வாசியடா திரையோதேசி
செம்மையுடன் சதுர்த்தெசி சேர்ந்து ஒன்றாய்
ஆகமென்ற ஆகமங்கள் அறிவேதானாம்
அடங்கிநின்ற வாசியம்மா வாசியாச்சு
பாகமுடன் வாசிநின்ற அம்மாவாசி
பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்ப் பாரே

Translation:
The singularity, the desi is ekadesi
With bliss dvadesi, the two.
The body, the vaasi, thrayodesi
Adding the chaturdesi to it
It became the knowledge- Agama,
The vaasi that stood in abidance became the ammaavaasi
The vaasi that stood so with distinctions
See it as the locus of the Self.

Commentary:
Agatthiyar is continuing the numbers beyond ten in this verse.  He calls the state of singularity as Eka desi or the Ekadasi.  When bliss or Ananda emerges in this singularity it became two, the dvadesi.  This singularity and duality remain in the body as Sivam and Sakti.  When prana or vaasi is added to it in the body it became thrayodesi or the three entities, jiva, Sivam and Sakthi.  The knowledge that emerged in this process are the Agama and this is the state of four or chaturdesi.  The fifteenth day after chaturdasi is amavasa.  Agatthiyar calls the state where the vasi remains in kumbaka, the supreme state as amavasi or the maha vaasi.  This vaasi or the prana in the body is the locus of the self.

Agatthiyar answers the question, Where does the jiva reside in the body.  It is not remaining in the heart or the muladhara or any such specific location.  It is present as the universal force or prana that pervades the body. 

பத்துக்கு மேற்பட்ட எண்களை இப்பாடலில் தொடருகிறார் அகத்தியர்.  ஒருமை நிலை அல்லது தானாக இருக்கும் நிலையே ஏகாதேசி அல்லது ஏகாதசி.  இந்த ஒருமை நிலையில் இன்பம் தோன்றும்போது இரண்டாக இருக்கும் நிலை தோன்றுகிறது.  இதுவே துவாதசி.  இந்த இரண்டுமே சிவம் சக்தி என்று உடலில் இருக்கின்றன.  இதில் வாசி அல்லது பிராணன் சேர்ந்து ஒரு தேகமாக மாறும்போது அது த்ரயோதசி.  இதுவே ஜீவன், சிவம் சக்தி என்ற மூன்றாகும்.  இவற்றில் அறிவு தோன்றும்போது சதுர்த்தசி ஏற்படுகிறது. இந்த அறிவே ஆகமமாகிறது. இந்த சதுர்த்தசிக்கு அடுத்த நாள் அமாவாசை.  வாசி எனப்படும் உயிர்ச்சக்தி கும்பகத்தில் நிற்கும்போது அது அம்மாவாசி என்கிறார் அகத்தியர்.  இந்த பிராணனே உடலில் ஆத்மாவின் இருப்பிடம் என்கிறார் அவர். 


உடலில் பிராணன் எங்கிருக்கிறது என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறார் அகத்தியர்.  சிலர் ஆத்மா இதயத்தில் இருக்கிறது, மூலாதாரத்தில் இருக்கிறது என்பர்.  ஆத்மா பிராணனாக உடல்முழுவது விரவியிருக்கிறது என்று அகத்தியர் இப்பாடலின்மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

464. 6, 5, 4, 3, 2, 1

Verse 464
பாரப்பா ஏழு வகைத் தோற்றந் தன்னிலே
பதிவான மடபதிகள் ஆறு மாச்சு
காரப்பா மடபதியில் பஞ்ச கர்த்தாள்
கருணையுள்ள நால்வேதங் கருவாய்க் கட்டி
நேரப்பா நின்ற திருமூர்த்தியானார்
நிறைந்த திருமூர்த்தி சத்தி சிவமுமானார்
சாரப்பா சத்திசிவம் ரெண்டும் ஒன்றாய்
தானாகித் தானவனாய் ஏகமாமே

Translation:
See son, among the seven types of life forms
It became the madapathis six
In the madapathi are the pancha kartha (five actors)
Tying the merciful four Vedas as essence
He became the Tirumuthi
The Trimurthy became Sakthi and Sivam
Associate with Sakthi Sivam as singularity
Becoming Self, with the self as Him, as singularity.

Commentary:
While seven types of lives refers to different lifeforms Agatthiyar has shown that they also represent seven types of people. Those who have supreme qualities are the devas.  Humans are those who have good qualities such as mercy, patience as well as bad qualities such as jealousy, anger.  Animals are those who are ruled by the ego.  Birds are those who are heavily influenced by the senses.  Plants are those who cannot distinguish between good and bad.  Aquatics are those who speak ill of even those who give them things and help them.  Thus, the seven lifeforms represent seven types of people.

The word madapathi, when split as madam+pathi means the loci.  This refers to the six chakras.  Among the six cakras, the five have the five actors or pancha kartha, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva, as the lords.  The four Vedas explain that the world is a representation of the three muthi’s, Siva, Sakti and Jiva.   Through yoga the jiva leaves its limited state and becomes Sakthi and Sivam.  When even this duality is crossed and the state of singularity is attained then everything becomes the Self.  There are no distinctions anymore.

Agatthiyar is continuing the play with numbers.  Amavasi may mean “am-maha-vasi” or that great vasi.  With the help of vasi or the breath and prana combination all kinds of distinctions are crossed.  Agatthiyar begins with the body with 10 instruments, 9 apertures through which sensations occur, 8 siddhis, ashtanga yoga, 7 types of lifeforms, 6 chakras, 5 kartha or lords, 4 Vedas the essence of everything, 3 Murthys, 2-Sakthi and Sivam and finally the state of singularity.

ஏழு வகைத் தோற்றங்கள் என்பது ஏழு வித உயிர்களைக் குறித்தாலும் அவை ஏழு நிலைகளில் இருக்கும் மனிதர்களையும் குறிக்கின்றன.  தனது எழுவகைத் தோற்றம் என்ற நூலில் அகத்தியர் இந்த ஏழு வகை மனிதர்களை விளக்குகிறார்.

மனிதருள் கற்போடு வாழ்பவர்கள் மாணிக்கங்கள், உத்தமர்கள்.  அவர்களே தேவர்கள், வானவர்கள். இவர்களை அடுத்து மனிதர் என்பவர் அன்பு, கருணை, பொறுமை போன்ற நற்குணங்களையும் கோபம், பொறாமை போன்ற தீய குணங்களையும் கொண்டவர்கள்.  விலங்குகள் என்பவர்கள் அகந்தையால் ஆளப்படுபவர்கள்.   பறவைகள் என்போர் புலன்களின் தாக்குதல்களுக்கு ஆட்படுபவர்கள்.  தாவரங்கள் என்பவர்கள் நன்மை தீமை என்று பாகுபடுத்திக் காண முடியாதவர்கள், விவேகமற்றவர்கள்.  தனக்குப் பொருளோ அருளோ கொடுப்பவரையும் இகழ்ந்து பேசுபவர்கள் நீரில் வாழ்பவர்கள்.  மானமின்றி இரந்து வாழ்பவர்கள் ஊர்வன எனப்படும் புழு பூச்சிகள் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு ஏழுவகை உயிரினங்கள் என்பவை ஒருவரது நடத்தையை வைத்தே என்று காட்டுகிறார் அகத்தியர்.

மடபதி என்ற சொல்லை மடம்+பதி என்று பிரித்தால் அது ஒரு இடத்தைக் குறிக்கிறது.  ஆறு மடபதிகள் என்பது ஆறு சக்கரங்களைக் குறிக்கிறது.  இந்த சக்கரங்களில் ஐந்தில் பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற ஐந்து கடவுள்கள் ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களைச் செய்கின்றனர்.  இவற்றை விளக்குவது நான்கு வேதங்களாகும்.  இந்த வேதம் விளக்குவது மூன்று மூர்த்திகள் எனப்படும் சக்தி, சிவம், ஜீவன் என்பவர்களை.  யோகத்தின் மூலம் ஜீவன் இந்த மூன்றாக இருக்கும் நிலையைக் கடந்து சக்தி சிவம் என்று இரண்டாக இருக்கும் நிலையையும் முடிவில் சிவம் எனப்படும் தான் என்ற நிலையையும் அடைகிறது என்று அகத்தியர் கூறுகிறார்.  இந்த வழிமுறை அம்+மா+ வாசி அல்லது அந்த மகா வாசி எனப்படும் பிராணன் மூச்சுக் கூட்டால் நடைபெறுகிறது என்கிறார் அகத்தியர்.  இதுவே அம்மாவாசியின் சூட்சுமம்.


முந்தைய பாடலில் தொடங்கிய எண்கள் விளையாட்டை இப்பாடலில் முடிக்கிறார் அகத்தியர்.  தசமி எனப்படும் பத்து புலன்களைக் கொண்ட ஒன்பது வாசல்களால் அந்த புலனுனர்வுகளைக் கொண்ட உடலினால் அஷ்ட சக்திகள் எனப்படும் எட்டு சித்திகள் கிட்டுகின்றன.  இவற்றைக் கொண்ட உயிர்கள் ஏழு வகையாகத் தோற்றமளிக்கின்றன.  ஆறு மடபதிகள் எனப்படும் சக்கரங்களில் ஐந்து கர்த்தாக்கள் இருந்துகொண்டு ஐவித தொழில்களைச் செய்கின்றனர்.  அதை விளக்குவது நால்வகை வேதங்கள்.  அவற்றின் சாரம் மும்மூர்த்திகள்.  இவற்றில் ஜீவன் சக்தி சிவம் என்னும் இருமை நிலையையும் சிவம் அல்லது தான் என்ற ஒருமை நிலையையும் அடைகிறது என்கிறார் அகத்தியர்.

463. Details about Amavasi- 10, 9, 8, 7

Verse 463
அமாவாசி விபரம்
 சுத்தமுள்ள ஆதர சூட்சந்தன்னை
தொடுகுறி போலச் சொல்லுகிறேன் நன்றாய்ச்
சித்தமுள்ள தேகமது திசமிமைந்தா
சிவசிவா திசமியிலே நவமி தோன்றும்
பத்தமுள்ள நவமியாலே அஷ்டசத்தி
பதிவாக அஷ்டாங்க யோகமானால்
உத்ததொரு அஷ்டாங்க யோகந் தன்னில்
உதித்த சதம் எழுவகை தோற்றம் பாரே

Translation:
Amavasi details
The pure subtle adhara
I will tell you about it as if pointing it out
The body with chittham is disami (dasami-tenth day)
Siva sivaa! In the disami the Navami (ninth day) will occur
Because of the Navami the ashta sakthi (eight sakti)
If ashtanga yoga is accomplished
In the favorable ashtanga yoga
Emerged the hundred (countless) seven types of forms.

Commentary:
Agatthiyar is playing with numbers in this verse.  Amavasi is new moon day.  The term means living near.  The new moon day signifies the beginning of the bright half of the moon.  There is increase in the brightness of the moon from Amavasya onwards. 

Agatthiyar is explaining amavasi in the context of the body.  He calls the body as dasami or the tenth day.  The body is made up of ten senses. In this dasami, the Navami or nine occurs,  The nine may be nine states of consciousness.  Due to these chakras the yogin attains eight powers or ashta sakthi.  The eight powers are ashta siddhi.  The ashtanga yoga is also attained in the body.  This combination gives rise to seven types of lifeforms.  The life forms are crawlers, birds, aquatic, plants, celestials, humans and those that move on land.

It is interesting that Agatthiyar has blessed us with this song about Amavasya on Adi Amavasya day (2/8/2016).

அகத்தியர் இப்பாடலில் எண்களின் மூலம் தத்துவங்களை விளக்குகிறார்.  அமாவாசி என்பது சந்திரன் ஒளியுடன் தோன்றுவதற்கு முற்பட்ட நாள்.  அந்த நாள் முழு இருளாக இருந்தாலும் ஒளியின் பிறப்பைக் குறிக்கும். 
அமாவாசி என்பதை உடல் நோக்கில் விளக்குகிறார் அகத்தியர்.  இந்த உடல் தசமி அதாவது பத்தால் ஆனது என்கிறார் அவர்.  பத்து என்பது பத்து புலன்களைக் குறிக்கும்.  இந்த புலன்களால் ஆன உடலில் நவமி அல்லது ஒன்பது சக்கரங்கள் தோன்றுகின்றன.  அவற்றால் ஏற்படுவது அஷ்டசக்தி அல்லது எட்டு சக்திகள்.  இந்த உடலின் மூலம் அஷ்டாங்க யோகம் நிகழ்கிறது.  அவ்வாறான சூட்சும உடலினால் எழுவகை உயிர்கள் தோன்றுகின்றன அதாவது ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, தாவரங்கள், தேவர்கள், மனிதர்கள் என்ற ஏழு வகை உயிர்கள் இந்த சூட்சும உடலைக் கொண்டுள்ளன என்கிறார் அவர்.


ஆடி அமாவாசையன்று (2/8/2016) இப்பாடலை அகத்தியர் நமக்குக் கொடுத்தது ஆச்சரியமாக உள்ளது!