Monday, 25 July 2016

454. om reeng sivayavasi

Verse 454
பாரப்பா இடதுகண் அகாரஞ்சந்திரன்
பதிவான வலதுகண் உகாரஞ்சூரியன்
நேரப்பா சுழிமுனைதான் மகாரம் அக்கினி
நினைவாக இப்படியே தியானஞ் செய்து
கூரப்பா செபிக்கிர தேவி மந்திரங்கேளு
கருணையுடன் ஓம் றீங் சிவயவசி என்று
தேரப்பா இப்படியே தியான செபம் பண்ண
சிவசிவா இகபரமும் முத்தியாச்சே

Translation:
See son, the left eye is akara, the moon
The right eye, ukara is sun
The sushumna, makara is fire
Performing dhyana with concentration in this fashion
Listen to the devi mantra that is chanted
It is om reeng sivayavasi, with mercy.
Performing dhyana in this fashion
Siva sivaa, it will become liberation in this world and the next.

Commentary:
In the previous verses Agatthiyar described the benefits of reciting the magical sword, the mantra om reeng in combination with other letters.  Here he is focusing on its efficacy in kundalini yoga.  He says that the Devi mantra that should be chanted is om reeng sivayavasi.  This should be chanted while contemplating on the image, the right eye being the ukara, the sun, the left eye being the akara the sun and the sushumna the fire, makara.  Agatthiyar says that if one performs dhyana in this fashion one will attain mukti.

Let us examine why Agatthiyar is prescribing this mantra for liberation.  The mantra sivayanama or panchakshara represents the five elements as follows: si-fire, va- air, ya- space, na- earth and ma-water.  Thus the mantra namasivaya represents kundalini moving from muladhara to ajna the loci of these seed letters.  So when this mantra is uttered as sivayavasi it means the water and earth principles are merged in the other three, fire, air and space.  With space as the center, the fire and air in the body- the kundalini and prana are made to harmonize with the prapancha prana and the mahakarana sareera who form is that of fire.  Thus, this mantra represents a state where the yogi is in continuous communication with the universe.  There is a continuous flow of universal energy through him.  Siddhas call this state as saagaakkaal or undying air where the prana flows continuously without any cessation, like a tornedo.  This is the supreme state that a yogi attempts to achieve.  The bija mantra om reeng helps him attain this state.

முந்தைய பாடல்களின் அகத்தியர் மந்திர வாள் எனப்படும் ஓம் றீங் என்ற மந்திரத்தை பிற பீஜாட்சரங்களுடன் சேர்த்து எவ்வாறு ஓதுவது என்றும் அதனால் ஏற்படும் பயனையும் கூறினார்.  இப்பாடலில் இந்த மந்திரத்தை குண்டலினி யோகத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறுகிறார். யோகத்தில் செபிக்கவேண்டிய தேவி மந்திரம் ஓம் றீங் சிவயவசி என்பது.  இந்த மந்திரத்தை ஒருவர் இடதுகண் அகாரம் சந்திரன், வலதுகண் உகாரம் சூரியன், சுழுமுனை மகாரம், அக்னி என்ற நினைப்புடன் தியானம் செய்து உச்சரித்தால் இகபர முக்தி கிட்டும் என்கிறார் அகத்தியர்.

எதனால் அகத்தியர் இந்த மந்திரம் முக்தியை அளிக்கும் என்று கூறுகிறார் என்று பார்ப்போம்.  நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தில் இந்த எழுத்துக்கள் பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன.  ந-பூமி, ம-நீர், சி-அக்னி, வ-காற்று, ய- ஆகாயம்.  இந்த மந்திரம் சிவயவசி என்று உச்சரிக்கப்படும்போது பூமி மற்றும் நீர் தத்துவங்கள் மற்ற மூன்று தத்துவங்களில் சேர்க்கப்பட்டு ஆகாயத்தை மையமாக வைத்து உடலில் உள்ள பிராணனும் குண்டலினி அக்னியும் பிரபஞ்ச பிராண சக்தியுடனும் அக்னி ரூபமான மகா காரண சரீரத்துடனும் சேர்ந்திசைந்திருக்கின்றன.  இந்த நிலையில் பிரபஞ்ச பிராணன் தொடர்ந்து அவரது உடலுள் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த நிலையை சாகாக்கால் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

இந்த உச்ச நிலையை அடைய ஓம்றீங் என்ற மந்திரம் உதவுகிறது.

Sunday, 24 July 2016

453. Mei tavam

Verse 453
எண்ணுவதும் உண்ணுவது மந்திர சூட்சம்
ஏகாந்த சூட்சத்தை என்ன சொல்வேன்
விண் நிறைந்த சூட்சமடா அம்மாவாசி
வேதாந்த வாசிசிவ விந்துநாதம்
கண் நிறைந்த போதமடா கமலபோதம்
கருணைவளர் பூரணமாய் நின்ற நாதம்
உன்னி விளையாடுகின்ற நாதந்தன்னை
உத்தமனே மெய்த்தவமாய்க் கண்டு பாரே

Translation:
Thoughts and food are mantra sookshma
How will I describe the ekantha sookshma
The subtlety that fills the sky the ammaavaasi (the great vaasi, the new moon)
Vedanta vaasi, Siva bindu nadham
The bodham that filled the eyes, the bodham of lotus
The nadha that remained as the merciful poornam
The nadha that looks pointedly and plays
The Supreme One! See it as true tapas/ the tapas of the body.

Commentary:
The word mantra, when split as man+tra has the following etymological meaning.  man- manas, tra- instrument.  It is that which uses mind as the instrument.  The mind’s movement is closely linked with the breath.  Through breath regulation the mind is brought under control.  Hence, Agatthiyar is saying that the mantra sukshma is the great vaasi or regulated breath. Am-maa-vaasi means that great regulated breath/prana.  This is the Vedanta vaasi.  It is the Siva bindu nadha that dances as the merciful poornam.  Agatthiyar calls this as mei tapas.  Mei means truth.  It also means body.  Mei tavam is thus the tapas done with the body to use the mind as the instrument to attain the supreme state.


மந்த்ரா என்ற சொல் மன்+த்ரா என்று பிரிந்து மனத்தைக் கருவியாகக் கொண்டது என்று பொருள்படுகிறது.  மந்திர சூட்சுமம் என்பது மனத்தின் சூட்சும நிலை என்று கொண்டால் அந்த நிலையை அடைவது வாசி எனப்படும் மூச்சு பிராணன் கலவையினால் ஏற்படுகிறது.  இவ்வாறு உடலின் மூலம் மனம் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.  அதை அகத்தியர் சிவபிந்து நாதம் என்கிறார்.  இந்த நாதம் உன்னி நடனமாடுகிறது என்னும் அகத்தியர் அதை மெய்த்தவமாகப் பார்க்கவேண்டும் என்கிறார்.  மெய்த்தவம் என்பது உண்மைத் தவம் என்றும் மெய் என்னும் உடலால் செய்யப்படும் தவம் என்றும் பொருள்படும்.  

Saturday, 23 July 2016

452. Other benefits of om reeng

Verse 452
உண்டாகும் ஓம் றீங் மசிமசி என்றோத
ஒடுங்காத காலகடி விஷங்கள் மீளுந்
தாண்டாமல் ஓம் றீங் அங்கென்றோத
தட்டழிந்து மிருகமெல்லாந் தானே ஓடும்
நன்றாகச் சொன்னதிந்த மந்திர வாளை
நாட்டமுடன் பூரணமாய் பூசைபண்ணி
நின்றாட யாதொருகால் எழுத்துக்கெல்லாம்
நிசமான மந்திரவாள் ஓம்றீங் என்னே

Translation:
Reciting om reeng masi masi
All the poisons, insect bites will be relieved
Reciting om reeng ang
All the animals will run away
This magical sword was described well
Worshiping it as poornam, with interest,
The air will remain dancing in one place.  For all the letters
The true magical sword is om reeng.

Commentary:
Agatthiyar says that when om reeng is combines with masimasi it will provide relief for insect bites, poisons.  When it is uttered as om reeng ang all the animals will run away without harming the person.  When these letter, om reeng is recited considering it as poornam or fully complete then the vital air will remain in kumbakam.  Thus, according to Agatthiyar om reeng is the magical sword for all the bhija akshara or letters.


ஓம் றீங் என்ற எழுத்துடன் மசிமசி என்று ஓத எல்லாவிதமான கடிகளும் விஷங்களும் விலகும்.  ஓம் றீங் அங் என்று ஓத எல்லா தீய விலங்குகளும் விலகி ஓடிவிடும் என்று கூறும் அகத்தியர் ஓம் றீங் என்ற எழுத்துக்களை பூரணமாகக் கருதி பூசித்தால் கால் எனப்படும் பிராணன் நின்று ஆடும், அதாவது, கும்பகத்தில் நிற்கும் என்கிறார்.  இவ்வாறு எல்லா எழுத்துக்களுக்கும் ஓம் றீங் என்பது மந்திரவாளாகச் செயல்படுகிறது என்கிறார் அகத்தியர்.

Thursday, 21 July 2016

451. Magical sword with other letters

Verse 451
பத்தி மனங்கொண்டு பூரணமாய் நின்று
பரஞான கேசரமே வாசமாகி
சுத்தமுடன் ஓம் றீங் வசிவசி என்றோத
சூழ்ந்திருந்த சத்துருக்கள் வசியமாகும்
சித்தமுடம் ஓம்றீங் நசிநசி என்றோத
சினந்து வரும் பீடைஎல்லாம் அகன்று போகுஞ்
சுத்தமுடன் ஓம் றீங் வசிவசி என்றோத
சகல சவுபாக்கியங்கள் தானுண்டாமே

Translation:
With devotion in the heart, remaining as poornam
The parajnana kecharam as the locus
Reciting with purity, om reeng vasivasi
All the enemies will be enchanted
Reciting om hreeng nasi nasi with concentration
All the angry evils will go away
Reciting om hreeng vasivasi with purity
All the riches will occur.

Commentary:
Agatthiyar is showing that by combining the magical sword or the the mantra om hreeng with other letters one can produce different beneficial effects.  He says that if one remains at the para jnana kecharam or supreme state of consciousness with breath regulated and mind quelled, and recite om hreeng vasi vasi then all the enemies will become friendly and all the riches will come to the person.  If one recites om hreeng nasi nasi then all the evil forces that are coming towards the person in a state of anger will go away.


ஓம் றீங் என்ற மந்திர வாளை பிற மந்திரங்களுடன் சேர்த்துக் கூறினால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  பர ஞான கேசரம் என்ற உச்ச உணர்வு நிலையில் மூச்சையும் பிராணனையும் ஒழுங்குபடுத்தி மனத்தைக் குவித்து ஒருவர் ஓம் றீங் வசிவசி என்று கூறினால் ஒருவரது விரோதிகள் வசியமாவார்கள், அவர் எல்லா சௌபாக்கியங்களையும் பெறுவார் என்றும் ஓம் றீங் நசிநசி என்று கூறினால் சினத்தோடு அவரை நோக்கி வரும் தீமை ஓடிவிடும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

Wednesday, 20 July 2016

450. Magical sword- om hreeng

Verse 450
மந்திரத் தியானம்
பாராளும் புலத்தியனே சகலருக்கும்
பதிவான மந்திரவாள் சூட்சங்கேளு
நேரான மூலமடா வடிவுமாச்சு
நிசமான றீங்காரம் வேலுமாச்சு
கூறாத வடிவெல்லாம் மந்திர வாளை
கூரிமையுடன் சொல்லுகிறேன் ஓம்றீங் என்று
மாறாத மவுனமதாய் தியானம் பண்ண
மார்க்கமுடன் தியான வகையைப் பற்றே

Translation:
Mantra dhyana
Pulathiya who rules the world! For all the citizens of the world
Listen to the subtlety of the magical sword
Its form is that of the origin,
The truthful reeng became the spear
All the forms of the magical sword that were never described
I will tell you as om hreeng
Performing dhyana silently/as silence
Hold on to the types of dhyana in the proper way.

Commentary:
In this verse Agatthiyar mentions the mantra he was referring to all along.  It is om reeng.  He says that the magical sword is the origin or mula.  The tail or the stem of it, the Vel is reeng.  Thus, the head is omkara and it is directed to the target by the mantra reeng. In Tamil it is not possible to distinguish between reeng and hreeng.  So, the Siddhas give the hreeng as that with the big r.

We will understand the reason behind this as follows.  Hreeng or hreem is called Bhuvaneswari pranava or Sakti bhijam like om which is Siva bhija mantra.  The ha is akshara for Siva.  Hra where it is joined with ra and emerging as a half of ha and ra, as hr shows the creative power of prakriti.  Thus a remains hidden here. ee means Siva and prakriti joined together and set into action as Sakti or Mahamaya.  The bindu pronounced as m denotes laya, back into Siva. Thus hreem represents creation and dissolution of the Divine. 

Hreem is an important mantra is SriVidya.  Three sections of the panchadasi or 15 letter mantra of SriVidya are separated by hreem indicating the various aspects of the Devi.  In Lalitha Sahasranama there are 60 sacred names for Devi that begin with Hreem. Using hreem mantra the yogin wakes up his muladhara cakra. The upasana using this mantra is called vachaka upasana.  Also Ha is the iccha sakti, ra the kriya sakti and ee the jnana sakti of the Divine.

Agatthiyar incates this by saying that om is the form and hreeng is the spear of the mantra, the active aspect of the omkara. 

இதுவரை தான் கூறிய மந்திரம் எது என்று அகத்தியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  அந்த மந்திரம் ஓம் றீங் என்பது.  இதுவே மூலமான மந்திர வாள் என்கிறார் அவர்.  இந்த மந்திரத்தின் உருவு ஓம் என்றும் றீங் அதன் வேல் என்றும் அவர் விளக்குகிறார்.  அதாவது ஓங்காரத்தை றீங்காரம் செயல்பட வைக்கிறது என்கிறார் அவர்.  இதைப்பற்றி மேலும் சில விவரங்களைப் பார்ப்போம்.

தமிழில் றீங் என்பதற்கும் ஹ்றீங் என்பதற்கும் வித்தியாசம் காட்ட முடியாது. அதனால் சித்தர்கள் ரீங் என்று இதைக் குறிப்பிடாமல் றீங் என்று குறிப்பிடுகின்றனர்.  ஹ்ரீங் அல்லது ஹ்றீம் என்பது புவனேஸ்வரி பீஜம் அல்லது சக்தி பிரணவம் எனப்படுகிறது.  ஓம்காரம் சிவ பீஜம் அல்லது சிவ பிரணவமாகும்.  இது தந்திர பிரணவம், வேத பிரணவமல்ல.  ஹ்றீங் என்ற மந்திரத்தில் ஹ என்பது சிவனைக் குறிக்கும் அது ற வின் பாதியுடன் சேர்ந்து ஹ்ற் என்றாகும்போது பிரகிருத்தியின் படைப்புச் சக்தியைக் காட்டுகிறது.  இந்த பாதி எழுத்து ஈ என்னும் சப்தத்துடன் சேரும்போது உச்சரிக்கத் தகுந்ததாக, செயல் பாடுடையதாக, சக்தியினால் வழிநடத்தப்படுவதாக மாறுகிறது,  ம் என்பது சப்தம் அல்லது பிந்து இவ்வாறு தோற்றமளிக்கும் சக்தி சிவன் பிரகிருதிகள் லயமடைவதைக் குறிக்கிறது. 
ஸ்ரீவித்யாவில் ஹ்றீம் என்ற மந்திரம் மிக முக்கியமானது.  லலிதா சகஸ்ரநாமத்தில் அறுபது பெயர்கள் இந்த மந்திரத்துடன் தொடங்குகின்றன.  இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் ஒருவர் தனது மூலாதாரத்தை எழுப்புகிறார்.  இது வாசக உபாசனை எனப்படுகிறது.  இந்த மந்திரத்தில் ஹ என்பது இச்சா சக்தியையும் ற என்பது க்ரியா சக்தியையும் ஈ என்பது ஞான சக்தியையும் குறிக்கின்றன என்று அதர்வண வேதம் கூறுகிறது.

ஒவ்வாரு ஓம் என்னும் சிவனை ஹ்றீங் என்ற சக்தி  வேலாக இருந்து வழிநடத்துகிறாள் அதுவே மந்திர வாள் என்று அகத்தியர் கூறுகிறார்.

Monday, 18 July 2016

449. Mother Tribhuvanai will grant the magical sword

Verse 449
பண்ணடா பூசைமுறை ஆசைவைத்து
பத்தியுடன் மனங்கொண்டு பூசை செய்தால்
முன்னடா நின்று திருபுவனை தாயும்
மூன்றுலகும் தன்வசமாய் ஆள்வதற்கு
கண்ணடாகருணைவிட்டு திருநீறிட்டு
கமலமலர் அமுர்தமதை கனிவாய்ஊட்டி
விண்ணடா தானிருந்த மந்திரவாளை
வேதாந்த பூரணமாய் ஈவாள் பாரே

Translation:
Perform worship, with love,
If it is performed with a mind which has devotion
The mother, Tirubhuvana, taking charge
To rule the three worlds by bringing them under control,
The eye, releasing mercy, adorning sacred ash,
Feeling the nectar from the lotus flower- with love,
The magical sword, the sky where the self remained
She will offer it as Vedanta poornam, See!

Commentary:
Agatthiyar describes the work of Sakti when the yogin performs the above mentioned worship.  When the yogin worships her as listed in the above verses, with love and devotion Mother Tribhuvana will grant her love and mercy to him.  She will feed him the divine nectar from the lotus flower, cakra.  She will grant him the magical sword, the sky where the self remains. She will offer it as the fully complete state of Vedanta poornam.


முந்தைய பாடல்களில் கூறியபடி பூசை செய்தால் சக்தித்தாய் எவற்றைக் கொடுப்பாள் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  மனத்தில் அன்புடனும் பக்தியுடனும் ஒருவர் மேற்கூறிய புவனை பூசையைச் செய்தால் சக்தித்தாய், திருபுவனை, கருணையுடன் அவருக்குத் திருநீறிட்டு, கனிவாக தாமரை மலர் என்னும் லலாட சக்கரத்தின் அமிர்தத்தை அருளி அவர் மூவுலகும் ஆளுமாறு தான் எனப்படும் ஆத்மா இருக்கும் வானான மந்திரவாளை வேதாந்த பூரணமாய் ஈவாள் என்கிறார் அகத்தியர்.  இதனால் சக்தி நிலையை அடையும்போதுதான், நாதாந்த நிலையை அடையும்போதுதான் அமிர்தம் சுரக்கிறது அது ஆத்மநிலையான மந்திர வாளைத் தருகிறது என்பது புரிகிறது.

448. Worship during waxing and waning of the moon

Verse 448
நாட்டமென்ற நடுவான கும்பந்தன்னில்
நாதாந்த புவனை சக்கரத்தைச் சாற்றி
தேட்டமென்ற கும்ப நவ கும்பமெல்லாம்
சிவசிவா பூசை முறை செயமாய்ச் செய்து
ஆட்டமென்ற அம்பலவா தன்னை நீயும்
அங்கனையே பூரணமாய்த் தியானம் பண்ணி
வாட்டமில்லா வாசிமலர் வாசத்தாலே
வளர்பிறையுந் தேய் பிறையும் பூசை பண்ணே

Translation:
In the middle kumbam, the awareness
Adorn the nadhantha bhuvanai chakra
The search, all the nava kumbha
Siva sivaa!  Performing the puja successfully
The dance, the Ambalava, worshipping
Him there as Poornam with contemplation
By  the never withering flower of vaasi, its fragrance
You perform the worship during waxing and waning.

Commentary:
Let us see the subtle meaning of the verse first.  Agatthiyar calls the middle kumba as awareness.  Consciousness remains in the turiya state during the vaasi/siva yoga.  Nadanta state is beyond the primordial state.  It is the state of Sakthi.  At this state the only entities present are Sakthi and then Siva in ascending order.  The yogin experiences this state at ajna.  The nava kumbha means the nine states of consciousness. The dancer, Ambalavan mentioned here is Siva who dances at sahasrara in the body and at Dvadasantha, in space.  The yogin worships Sakti and Siva with the help of vaasi or prana/breath combination.  Agatthiyar mentions that this worship should be performed during waxing and waning.  This refers to inhalation and exhalation, ascent and descent of consciousness. 

Literally, this verse means place the Bhuvanai chakaram in the middle pot, worship her and Siva with fragrant flowers during waxing and waning periods of the moon. 
இப்பாடலின் உட்பொருளை முதலில் பார்ப்போம்.  நடுவான சுழுமுனையில் கும்பக நிலையை இருந்து புவனையின் சக்கரமான ஆக்ஞையில் விழிப்புணர்வை நிறுத்தி நாதாந்த நிலை எனப்படும் சக்தி நிலையையும் அம்பலவர் எனப்படும் சிவனையும் வாசி எனப்படும் மூச்சும் பிராணனும் சேர்ந்த மலரைக் கொண்டு வளர்பிறை தேய்பிறை எனப்படும் உள்மூச்சு வெளிமூச்சு என்ற இரண்டின்போதும், விழிப்புணர்வு எழுந்து மறையும் இரு நிலைகளின்போதும் வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர்.


இப்பாடலின் வெளிப்பொருள்: நடுக்கும்பத்தில் புவனையின் அட்சரத்தை எழுதிய தகட்டை வைத்து, நாதாந்தம் எனப்படும் சொல்நிலையைக் கடந்த தியான நிலையால் சக்தியையும் அம்பலவர் எனப்படும் சிவனையும் வாசனை மிகுந்த மலர்களால் வளர்பிறை தேய்பிறை என்ற சந்திரனின் வளர்ச்சி, குறைவு என்ற இரு நிலைகளின்போதும் வழிபடவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.