Verse 539
காக்ஷிஎன்ற காக்ஷிகண் காக்ஷியாச்சு
கலந்து ஒன்றாய் நின்ற பொருள் சூக்ஷமாச்சு
மோக்ஷமென்ற சூக்ஷமத்தில் தானா மென்று
மோனமுடன் தானிருப்பார் போதமாகப்
பேச்சான மூச்சிறந்த வடிவே யோகம்
வளமான யோகபதி பூரணமே தானாம்
சூக்ஷமேன்ர சூக்ஷமத்தை போதமாக
சூக்ஷாதி சூட்சமுடன் இருப்பார் தானே
Translation:
The sight, it
became perceivable, it became the vision of the eye
The entity
that remained infused became subtlty
To become the
moksha, the subtlty
They will
remain silent, as bodham
Yoga is the
form where speaking died and breath died
The verdant
locus of yoga is the poornam
With the
subtlty as the bodham
They will
remain with the supreme subtlty.
Commentary:
Agatthiyar
describes the ultimate state of a yogin.
This describes the Samadhi state where the mind ceases to operate. The yogin perceives the supreme vision of
light. This is the Divine that is merged
with the state. It is seen at the ajna. Moksha or liberation is the state of this
subtlty. Those who reach this state will
remain in kumbaka and in a state of silence.
This is the state of fully complete or poornam. This is not an unconscious state, but one
with complete awareness or bodham. The yogin remains as this bodham, with the
Divine or the supremely Subtle.
We should
remember that this is not a permanent state.
It is tasting of the ultimate state for a moment because the mind cannot
stop permanently. Once it starts to
function the yogin descends from this state to body consciousness.
இப்பாடலில் அகத்தியர் சமாதியின் உச்சத்தில் நடைபெறுவதைக்
கூறுகிறார். இந்த நிலையே மோக்ஷம், இதில் அந்த யோகி ஜீவனுடன் கலந்துள்ள பரமனைப்
பார்க்கிறார். இந்தக் காட்சி ஆக்னையில்
கிட்டுகிறது. அப்போது அந்த யோகி பேச்சற்ற
மவுனத்திலும் மூச்சற்ற கும்பகத்திலும் இருக்கிறார். இது உணர்வற்ற நிலையல்ல, பூரண உணர்வு நிலை, போத நிலை. அந்த யோகி போதமாக சூட்சத்துடன் கலந்து தானும்
சூட்சமாக இருக்கிறார்.
இந்த நிலை நிரந்தர நிலை இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும். மனம் இறந்திருக்கும்வரை இந்த
நிலை நீடிக்கும். மனம் தனது செயல்களைத்
தொடங்கியவுடன் இந்த நிலை முடிந்து அந்த யோகி தனது உடலுணர்வு நிலைக்குத்
திரும்புகிறார்.
No comments:
Post a Comment