Monday, 13 February 2017

537. Expansion on Siva jnana

Verse 537
பாரான உலகமதே மாய வாழ்க்கை
மகத்தான வாழ்க்கையிலே மருவிநின்று
நேரான நிச்சயத்தை அறியாமற்றான்
நிசமான வெளியென்றும் ஒளிதானென்றும்
பேரான பரமென்றும் பரந்தானென்றும்
பெருகி நின்ற சத்திஎன்றும் சிவந்தா னென்றுங்
கூறாதயின மென்றும் எண்ணி எண்ணி
கொண்டு நின்ற நிச்சயத்தை அறியார் காணே

Translation:
The world, is the life of maya
Remaining in the great life here
Without knowing the truthful definitude
As the space and light
As the Param and that Param is self
As Sakti and sivam
The creed that cannot be described
Without thinking about these, they will not know the definitude.

Commentary:
Agatthiyar described siva jnana in the previous verse.  There, he described the knowledge that one should know thoroughly.  Here he elaborates on that knowledge.  One should know that the worldly life is nothing but a play of maya.  The supreme is space and light, It is beyond the material world, it is the light of awareness.  It is the Param and that param is also the self.  That param became Sivam and Sakti or passive and active entities, those that are beyond verbal description.  Only the param is satyam, the unchanging, the definitude.  Everything else is “not nicchayam”.  Everying undergoes change.  So there is nothing in this world that we can definitely talk about as “this”.  Hence, Agatthiyar says that only the Supreme Param is “nicchayam”.  People do not know this knowledge or the “definitude”.


சிவஞானம் என்றால் என்ன என்று முந்தைய பாடலில் கூறினார் அகத்தியர்.  அந்தப் பாடலில் ஒருவர் ஞானத்தைப் பூரணமாகப் பார்க்கவேண்டும் என்றார்.  இங்கு அந்தக் கருத்தை மேலும் விளக்குகிறார்.  இவ்வுலக வாழ்க்கை என்பது மாய வாழ்க்கை.  இறைவன் என்பது வெளியும் ஒளியும்தான், ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்ல.  அந்த இறைவனே பரம் எனப்படுவது.  அந்தப் பரமும் “தான்” எனப்படுவதே, வேறொரு பொருளல்ல.  அந்தப் பரமே சிவம், சக்தி என்று செயலற்றது, செயல்பாடுடையது என்ற இரு நிலைகளாக உள்ளது.  இந்த நிலைகள் வார்த்தைகளால் விளக்கமுடியாதவை. இந்த பரமே நிச்சயமானது, மாற்றமற்றது, சத்தியம்.  உலகில் உள்ள அனைத்தும் மாற்றத்துக்குட்பட்டவை.  இறைவன் ஒருவனே மாற்றமற்று இருப்பவன்.  அதனால் அவன் ஒருவனே நிச்சயமாக “இது” என்று இருப்பவன்.  மக்கள் இதை அறிவதில்லை என்று அகத்தியர் கூறுகிறார்.  அந்த அறியாமைக்குக் காரணம் மாய வாழ்க்கை.

No comments:

Post a Comment