Monday, 23 January 2017

531. Chendooram- is it only a medical preparation?

Verse 531
கொள்ளாத பசுவுக்கு கண்ணங்கேது
கொண்டு கரையேறுதற்குச் செந்தூரத்தில்
கள்ளாகேள் பணவிடைதான் தேனிற்கொண்டால்
கசடான தத்துவங்கள் கனகமாகும்
உள்ளான வாசியது உறுதியாகும்
உண்மைஎன்ற தளமதிலே தீபங் காணும்
விள்ளாமல் விண்டதொரு செந்தூரத்தை
விபரமுடன் அந்திசந்தி கொண்டு தேரே

Translation:
Where is the eye for the cow (pasu)
In the chendooram, to accept it and get liberated
Thief! Hear!  If it is consumed one measure
The dregs, the tattva will become gold
The vasi will become firm
The flame will be seen in the locus, plane
The chendoor, that taught without teaching
Consume it in the morning/evening and twilight and become expert.

Commentary:
The cow or pasu is the Jiva.  The chendooram is the awareness.  It makes the jiva realize the truth.  The vasi will become firm.  All the principles that constitute a jiva state will become golden.  The flame will be seen at the ajna.  Agatthiyar tells Pulathiyar to consume the chendooram during morning, evening and during twilight.  Andhi, we saw before, means the termini, sandhi are the places where different principles meet.  Thus the term andhi sandhi means the chakra and the three mandala where different states of consiocusness meet. Thus, the sendooram is not only a medical preparation, it is also a state of the soul.  It makes the soul realize the truth, without explicitly teaching it like a teacher.



பசு என்பது ஜீவனைக் குறிக்கும்.  இந்த செந்தூர முறையைச் செய்யாவிட்டால் பசுவுக்கு மூன்றாவது கண் எனப்படும் ஞானக் கண் தோன்ற வாய்ப்பில்லை என்கிறார் அகத்தியர்.  அந்த செந்தூரத்தை ஒரு பணவிடை அளவு கொண்டால்  ஜீவா நிலையை ஏற்படுத்தும் தத்துவங்கள் பொன்மயமாகும்.  வாசி உறுதிப்படும், தளம் எனப்படும் ஆக்ஞையில் தீபம் காணப்படும்.  இந்த செந்தூரம் ஜீவனுக்கு உண்மைகளை உரைக்காமல் உணரச் செய்யும்.  அதனால் அதனை காலை மாலை மற்றும் சந்தி நேரங்களில் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர்.  அந்தி என்பது மூலாதாரம் மற்றும் ஆக்ஞை அல்லது சகஸ்ராரம் என்றும் பொருள்படும்.  சந்தி என்பது பல தத்துவங்களும் உணர்வு நிலைகளும் சந்திக்கும் சக்கரங்களையும் அக்னி, சூரியன் மற்றும் சந்திர மண்டலங்களையும் குறிக்கும்.  

529, 530. Alchemical process to obtain chendooram

Verse 529
லிங்க வேதை
தானென்ற சாதிலிங்கம் வேதை செல்வேன்
தவறாமல் லிங்கமது ஓர் பலமும் வாங்கி
கோனென்ற ரசமுடனே வங்கஞ் சேர்த்து
குருவான அரப்பொடியுங் கூடச் சேர்த்து
தேனென்ற நாதமதாய் நன்றாயாட்டி
செம்மையுடன் லிங்கமதுக்கு அங்கி பூட்டி
வானென்ற ரவிதனிலே மைந்தா நீயும்
வணக்கமுடன் காயவைத்து வரிசை கேளே

Translation:
I will tell you about the alchemy of jatilingam
Take a measure of lingam
Adding the king, rasa and vangam
Add the guru arappodi
Grind them well with the nadha, the honey
Adding fire to the lingam
Son, in the sky, the ravi
Dry it and listen to the process.

Verse 530
வரிசையுடன்கெந்தி அரிதாரம் வெள்ளை
மகத்தான கெவுரிகரி யுப்புத் துத்தம்
வரிசையுடன் வகைக்கு இரு களஞ்சிவாங்கி
உத்தமனே கல்வமத்தில் பொடித்துக்கொண்டு
கரிசனமாய் அயச்செம்பில் பொடியரை தானிட்டு
கனமாக கவசமதை அதின்மேல் வைத்து
புரசமுடன் புடம்போட்டு எடுத்துப் பாரு
புதுமை வெகு செந்தூரங் கண்கொள்ளாதே

Translation:
The gendhi aridhaaram white
The great gauri kari uppu thuttham (zinc)
Taking them two measures in that order
The supreme one! Powdering them in the mortar
Placing the powder in the lead copper
Placing a weighty shield over it
Process it with fire and see
The wonderful chendooram, it cannot be contained by sight.

Commentary:
The above two verses describes steps in alchemy.  We have seen the philosophical explanations in the previous verses.  We will not go through them again here.  In the following verses Agatthiyar talks about the benefits that one derives from this process.


மேலே உள்ள இரு பாடல்களும் ரசவாத வழிமுறைகளாகும்.  இப்பொருள்களின் தத்துவ விளக்கங்களை முன் பாடல்களில் பார்த்தோம்.  இதனால் ஏற்படும் செந்தூரம் அளிக்கும் பயனை அடுத்து வரும் பாடல்களின் அகத்தியர் கூறுகிறார். அந்த தத்துவ விளக்கங்களை மேலே காண்போம்.

Wednesday, 18 January 2017

528. Chendooram

Verse 528
ஆறவைத்து ரசமணியை எடுத்துப் பாரு
அப்பனே செந்தூரம் கண்கொள்ளாது
தேரவைக்குந் தேகமத்தை செந்தூரந்தான்
சிவசிவா பணவிடை தான் தேனிற்கொண்டால்
மாரவைக்கும் வாசியது நேரே நிற்கும்
மகத்தான ஆதார மங்காதப்பா
ஊறவைக்குஞ் செம்புதனில் சத்தே பட்டால்
ஊறலத்து தங்கமய மாகுந் தானே

Translation:
See the rasamani that was cooled
Son, the chendooram will be ravishing
The chendooram will elevate the body
Siva sivaa, if a measure of it is consumed with honey
The vasi will change and stop
The magnificient adhaara will not dim
If the sath/essence touches the copper that is soaked
The secretion/body will become golden.

Commentary:
This verse brings to mind the Carnatic music song, “Sri Gananadha sindoora varna” which praises Ganapathy as having the orange hue.  Thus, this verse corresponds to the process that occurs in muladhara, the locus of Ganapathy.  The chendooram is the product of the transformation of the rasamani.  As we saw before rasamani is the bead of rasa, mercury, semen, the essence.  It will help the yogin progress in kaya siddhi.  Agatthiyar says that this chendooram should be consumed with honey.  Physically it is the honey collected by bees.  In the yogic parlance it is the divine nectar that descends from the lalata.  This will make the vasi or the prana breath combination stop in kumbaka.  The adhara, as we saw before, are in the subtle body.  The yogi will continue to perceive them, they will not dim out.  The sath or essence, soul when it touches copper or the anahata chakra the body where fluids secrete will become golden.  The yogi will attain “ponnaar meni” or golden body.


இப்பாடல் கர்நாடக சங்கீத பாடலான, “ஸ்ரீ கணநாதா சிந்தூர வர்ண” என்ற பாடல் வரியை நினைவுபடுத்துகிறது.  இப்பாடல் மூலாதாரத்தில் உள்ள அதிபதியான கணபதி செந்தூர வர்ணத்தில் இருக்கிறார் என்று புகழ்கிறது.  இவ்வாறு அகத்தியரின் இப்பாடல் மூலாதாரத்தில் நடைபெறும் செயல்களைக் குறிக்கிறது.  செந்தூரம் என்பது ரசமணி அடையும் மாறுபாட்டைக் குறிக்கிறது.  இந்த செந்தூரம் காயசித்தியை அளிக்கக் கூடியது.  இந்த செந்தூரத்தை தேனுடன் உட்கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இங்கு தேன் என்பது வண்டுகளிடமிருந்து பெறும் திரவத்தையும் லலாடத்திலிருந்து சுரக்கும் அமிர்தத்தையும் குறிக்கும்.  இது வாசி எனப்படும் பிராணன் மூச்சு கலவையை நேராக்கி நிற்க வைக்கும், கும்பக நிலையை அடைய வைக்கும்.  ஆதாரங்கள் மங்காமல் தென்படும்.  ஆதாரங்கள் சூட்சும உடலில் இருக்கும் சக்தி மையங்கள்.  அவற்றை ஒருவர் யோக நிலையில் பார்க்கிறார்.  சத் எனப்படும் இருப்பு, உணர்வு சக்தி, செம்பைத் தொட்டால் அனாகத சக்கரத்தை அடைந்தால் ஊறல் எனப்படும் உடல் தங்கமயமாகும், பொன்னார் மேனி கிட்டும் என்கிறார் அகத்தியர்.

Monday, 16 January 2017

527. Process at the muladhara

Verse 527
வையப்பா மேலுமந்தப் படிதானுப்பை
வரிசையுடன் செய்தபின்பு சட்டி மூடி
மெய்யப்பா மண்சீலை ஏழு செய்து
மெஞ்ஞான சற்குருவின் பாதம் போற்றி
தையப்பா தவறாமல் அடுப்பில் ஏற்றி
கமலமென்ற அக்கினியை நாலுசாமம்
செய்யப்பா தீமூட்டிப் பதந்தப்பாமல்
செம்மையுடன் தானிறக்கி ஆற வையே

Translation:
Place the salt in that step/ one measure
After doing it in the order, close the pot
Cover it with clay seven layer
Praising the sacred feet of the sathguru
Stitch them.  Placing it on the stove
The fire of lotus, for four time measures
Light it and do so maintiaing the composition/ padam
Bring it down and let it cool.

Commentary:
There are several words in this verse that have more than one meaning.  “padi thaan uppu” found in the first line means measure of salt as well as the step of ukara.  “satti mootti” means lighting the fire under the pot.  It also means starting the pot or muladhara, that is, awakening the kundalini.  “man seelai Ezhu seithu” means covering it with clay for seven layers. “maN” means the earth principle, the element of muladhara.  Ezhu or seven may be the principles or the chakra.  “kamalam enra agni” means fire of the lotus or muladhara.  “naalu saamam”  means four time measures.  This corresponds to the time for which the pranayama should be performed.  Sivavaakiyam talks about this using the same terms.  “padham thappaamal” means maintaining the correct consistency, not over cooking or under cooking.  Padham also means locus.  “keezh irakki” generally means bringing the pot out of fire.  Here it means making something come down.  This corresponds to the amrit.


இப்பாடலில் பல சொற்கள் இரு பொருள்களைத் தருகின்றன.  படி தான் உப்பு என்ற தொடர் ஒரு படி உப்பு என்றும் படியாக, வழியாக உள்ள உகாரம் என்றும் பொருள்படும்.  சட்டி மூட்டி என்பது சமையல் செய்யும் பாத்திரத்தையும், மூலாதாரத்தையும் குறிக்கும். இவ்வாறு இத் தொடர் குண்டலினி அக்னியை எழுப்புவதைக் குறிக்கிறது.  “மண் சீலை ஏழு”- மண் என்பது மூலாதாரத்தையும் அது குறிக்கும் பூமி தத்துவத்தையும் குறிக்கிறது. ஏழு என்பது தத்துவங்களையும் சக்கரங்களையும் குறிக்கலாம்.  “நாலு சாமம்” என்பது கால அளவைக் குறிக்கிறது.  இந்த யோகத்துக்கான கால அளவை இது குறிக்கிறது.  சிவ்வாக்கியமும் இதே தொடரைப் பயன்படுத்துகிறது.  “பதம் தப்பாமல்” என்பது பொருள்களின் தன்மையையும் பதம் எனப்படும் இடங்களையும் குறிக்கிறது.  “கீழ் இறக்கி” என்பது அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்குவதையும் அமிர்தத்தை அதன் பதத்திலிருந்து கீழே இறக்குவதையும் குறிக்கிறது.  இவ்வாறு இப்பாடல் வாசியோகத்தின் வழிமுறையைக் கூறுகிறது.

526. Treating the rasamani

Verse 526
பாரப்பா சூதமணி தனையெடுத்து
பத்தியுள்ள நாதமதால் சுருக்குத்தாக்கி
சேரப்பா அஞ்சிடைக்கி தங்கஞ் சேர்த்து
திறமான அப்பிரகம் விந்தாலாட்டி
நேரப்பா மணி தனக்கு அங்கி பூட்டி
நேர்மையுடன் ரவிதனிலே காயப்போட்டு
தேரப்பா சட்டியிலே கரியுப்பிட்டு
திறமான ரசமணியை நடுவில் வையே

Translation:
See son, taking the soodhamani
Attack it and condense it with the nadha
Bringing the five under control add to it the gold
Grinding it with apiraham, the bindu
Lighting the fire for the mani
Dry it in the sun
Adding the coal salt in the pot
Place the rasamani in the center.

Commentary:
In the process of vasi yoga the amrit is brought to the muladhara and raised through the chakras sequentially.  This verse seems to describe the process that should be carried out in the muladhara.
The bead that is taken to the muladhara, the sight of the gold.  To this is added the nadha and bindu and the fire of kundalini is lighted.  Ravi or sun may mean the Aditya that is mentioned to start between the suvadhishtana and manipuraka chakra.  Tirumular describes this part as that from where the sun rises in the body.  The sun may indicate consciousness, here.  The pot is the muladhara.  Kari which means coal also means elephant.  The muladhara is depicted to be the locus of Ganesha or the elephant head.  The uppu is the active part of the prapancha prana sakti.  The rasamani is subjected to this treatment.

வாசி யோகத்தில் மூலாதாரத்துக்குக் கொண்டு வந்த சூதமணியை பிற சக்கரங்களின் ஊடே மெதுவாக ஏற்றவேண்டும்.  இந்த ஏற்றத்தை இப்பாடலிலிருந்து கூறத் தொடங்குகிறார் அகத்தியர்.

தங்கம் என்பது மூலாதாரத்தைக் குறிக்கிறது.  அதனுடன் நாத பிந்துக்களை கூட்ட வேண்டும். அக்னி என்பது குண்டலினி தீயைக் குறிக்கும்.  அவற்றை ரவியில் காய வைக்க வேண்டும்.  இங்கு ரவி என்பது ஆத்தியன் எனப்படும் சூரியனைக் குறிக்கும்.  நமது உடலில் ஆதித்தியன் தோன்றும் இடம் சுவாதிஷ்டானத்துக்கும் மணிபூரகத்துக்கும் இடையே என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறுகிறார்.  இங்கு சட்டி என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.  கரி என்பது அடுப்புக்கரியைக் குறித்தாலும் அது யானை என்ற பொருளையும் உடையது.  மூலாதார சக்கரம் யானையின் தலையாகக் குறிக்கப்படுகிறது.  அதன் உப்பு என்பது செயல்பாடுடைய பிரபஞ்ச சக்தி என்று பொருள்.  இவ்வற்றின் இடையே ரசமணியை வைக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Monday, 9 January 2017

525. The reason for seeking the divine nectar from lalata

Verse 525
தானென்ற பூரணமே அமுர்தமாகும்பாரு
தன்மையுடன் அந்தமுர்தந் தானே கொண்டு
தேனென்ற அந்தமுர்தங் கொண்டு தேர்ந்தால்
திருவாசல் பூட்டுகள்தான் திறக்கும்பாரு
ஊனென்ற ஆதாரம் அங்கே காணும்
உண்மைஎன்ற நாதஒளி கீதங் கேழ்க்கும்
நானென்ற நாட்டமதாய் நின்றாயானால்
நலபதங் கிட்டுமடா நயனம்பாரே

Translation:
The self, the fully complete purna, is the amrit (nectar)
Consuming that nectar with the right attitude
If you consume that honey-like nectar
The locks of the sacred entrance will open
The adhara (chakra) will be seen there
The truth of light and sound of nadha will be heard
If you remain in the state of self
The good status/ locus will be attained,  see the eyes.

Commentary:
Agatthiyar explains the secret behind the siddha practices that insist on consuming the amrit from lalata.  The nectar seems to be both, a state as well as a physical entity.  The state is that of self.  Only in this state will the chakra become visible.  All other previous practice until stage, then, may be mental creations of the chakra.  Only after this stage the yogin will truly experience the chakras.  Yoga texts describe this process as raising the kundalini up, bringing down the nectar and then raising it up through the chakra.  This process results in the experience of the light and sounds that are due to nadha.  The yogin remain in the good state of turiyatitha.


எல்லா யோக நூல்களும் லலாடத்திலிருந்து அமிர்தத்தை கீழே இறக்குவதைப் பேசுகின்றன.  இப்பாடலில் அகத்தியர் அதை எதற்காகச் செய்யவேண்டும் என்று கூறுகிறார்.  இங்கு அமிர்தம் என்பது ஒரு நிலையாகவும் ஒரு வஸ்துவாகவும் இருப்பதைக் காண்கிறோம்.  அது தான் எனப்படும் ஆத்மநிலை, மற்றும் ஒரு திரவம்.  இந்த அமிர்தத்தை சரியான தன்மையுடன் கொண்டால் சக்கரங்கள் புலப்படும். இதற்கு முன் செய்யப்படும் தியானம் மற்றும் பிற படிகள் மனத்தால் அவற்றை உருவாக்குவதே.  அமிர்தத்தைக் கொண்ட பிறகே ஒரு யோகி உண்மையில் சக்கரங்களைக் காண்கிறார். இவ்வாறு உணர்வு, பிராணன், குண்டலினி ஆகியவற்றை மேலே ஏற்றி, லலாடத்திலிருந்து அமிர்தம் கீழே இறக்கி அதை சக்கரங்களின் ஊடே மேலே ஏற்றினால் ஆக்ஞையில் ஒளியும் பல ஓசைகளும் கேட்கும்.  இது நாதத்தால் ஏற்படுகிறது.  இந்த நிலையில் இருந்தால் துரியாதீதம் என்ற நல்ல பதம் அல்லது நிலை கிட்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.

Sunday, 8 January 2017

524. Special powers due to Rasamani

Verse 524
போட்ட பின்பு  கரண்டியிலே எண்ணெய் குத்தி
புத்தியுடன் தானுருக்கி எடுத்துக்கொண்டு
நாட்டமுடன் குடக்கரியில் உருக்கிப் பார்த்தால்
நல்ல ரசமணியதுவும் கண்விட்டாடும்
தேட்டமுடன் அம்மணியை எடுத்துக்கொண்டு
சிவசிவா சாரணைகள் திறமாய்ச் செய்தால்
ஆட்டமுடன் அண்டமெல்லாஞ் சுத்தி வரலாகும்
அரகரா சூதமணி ஆட்டுத் தானே

Translation:
After placing it, add oil to the ladle
Melting (the self) with intellect
If seen after melting it in the coal from the pot
The good rasamani will dance in the eye
Taking that bead
Siva sivaa, if the “saaranai” (addition of elements) is performed
It is possible to roam around all the universes greatly
Araharaa, it is the dance of the soodhamani.

Commentary:
The treatments to mercury mentioned in the previous verses are continued here.  Oil is added to the product and melted once and again in coal (fire).  The mercury becomes a solid, as a bead.  Saaranai is adding various products to the mercury to make grant special powers.  Then, with the help of the mercury bead, one can travel through the “gevuna marga” or “in the sky”.  Agatthiyar says that one can travels to other universes also.

Philosophically, the yogin who remains with ahamkara or I-sense mentioned in the previous verses melts even that. He transcends limitedness completely and becomes all pervasive.  Kudakkari or the coal in the pot may be referring to the ajna.  The soul is perceived as a jewel at ajna.  Saaranai means adding various factors to the pure soul so that it performs several magical acts including space travel.  “kevuna margam” is an interesting term.  Kevunam seems to mean “gavanam” or attention, focus.  Thus, through focusing the mind the yogin is able to perceive occurences anywhere in the world.  He need not travel there physically.  Agatthiyar says that by perfecting the soul it is possible to achieve great feat.

முந்தைய பாடல்களில் கூறிய வழிமுறைகள் இப்பாடலிலும் தொடருகின்றன.  மேற்கூறிய பொருள்களுடன் கரண்டியில் எண்ணெயை எடுத்து உருக்கி அவற்றை குடக்கரியில் உருக்கினால் ரசமணி உறுதிப்படும்.  அதனுடன் சாரணை என்னும் முறையில் பல பொருள்களை சேர்த்தால் அந்த மணிக்கு அதிசய சக்திகளைக் கொடுக்கும் திறன் ஏற்படும்.  அதனால் கெவுனமார்க்கம் எனப்படும் வானில் பயணிக்கும் திறன்கூட ஏற்படும் என்கிறார் அகத்தியர்.

தத்துவரீதியில் இதற்குப் பொருள் கூறவேண்டும் என்றால், பிற மலங்களை எரித்துவிட்டு தான் என்னும் ஆணவ மலத்துடன் இருக்கும் யோகி அதைக் குடக்கரி அல்லது கருங்குகை எனப்படும் ஆக்ஞையில் விட வேண்டும்.  அப்போது அளவுக்குட்பட்டமை விலகிவிடும்.  அந்த நிலையில் ஜீவனுடன் எந்த தத்துவத்தைச் சேர்த்தாலும் அந்த யோகி அந்த தத்துவத்தினால் செய்யக்கூடிய மனித எத்தனத்துக்கப்பாற்பட்ட செயல்களைப் புரிய முடியும்.  கெவுன மார்க்கம் எனப்படும் ஆகாய வழிப் பயணம் கூட அதனால் சாத்தியமாகும் என்கிறார் அகத்தியர். கெவுனம் என்ற சொல்லைப் பார்த்தால் கவனம் என்பதுபோல் தோன்றுகிறது.  இது மனத்தைக் குவிப்பதைக் குறிக்கிறது.  இதனால் ஒரு யோகிக்கு அண்டத்தில் பிற இடங்களில் நடப்பவை புலப்படுகின்றன.  அதற்கு ஒருவர் உடலளவில் அங்கு பயணப்படவேண்டும் என்பதுகூட அவசியமில்லை.


அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்ற சித்தர்கருத்தை இங்கு நினவுகூற வேண்டும்.