Tuesday, 14 June 2016

423. Wax of Poornam

Verse 423
பூரண மெழுகு
வாங்கி வந்த பூரணத்தை மைந்தா நீயும்
வணக்கமுடன் பீங்கானில் வைத்துப் போற்றி
பாங்குபெற ரவி பீசஞ் சரியாய்ச் சேர்த்து
பதமாக மத்தித்து ரவியில் வைத்து
சாங்கமாய்க் காய்ந்த பின்பு எடுத்துப் பாரு
சதாசிவத்தின் செயலதனால் மெழுகாய்ப் போகும்
பூங்கமல அமுர்தரச மெழுகை வாங்கி
புத்தியுடன் சத்திசிவ வாலைசேரே

Translation:
Wax of poornam (poorana mezhugu)
The poornam that you received, son,
Placing it in the ceramic, with humility and praise
Adding the ravi bheejam correctly
Centering it properly, placing it in ravi
After it has dried, look at it
It will become a wax due to Sadasivam’s action
Receiving the amrita rasa wax of the lotus flower,
Add Sakthi, Siva and vaalai to it.

Commentary:
Even though this verse sounds like a medicinal preparation it is also a hint for kundalini yoga.   We have to remember that Siddha songs are applicable in all the three levels, physical, mental and spiritual.  For details about steps in vaasi/siva yogam please refer to Dr. T. Sumanendran’s book Agatthiyar yoga jnana thiravukol.

Poornam is supreme consciousness. It is received due to Sakthi’s grace.  It is the amrita rasa or the divine nectar that flows down from the dvadasantha, the anda kechari.  This is then collected at the vishudhi the ceramic.  Vishuddhi cakra is called a lake. The nectar is collected here and slowly exposed to the surya mandala, the region that spans the throat to the navel region.  The bhijam referred to here is specific mantra.  It may also be ukara.  The akara corresponds to agni mandala, ukara the surya mandala and Makara the chandra mandala. The nectar is dried due to the action of the ajna cakra, by Sadasivam who resides there.  The nectar hardens.  To this added the sakti, siva and vaalai.  Sakthi corresponds to nadha, Siva to bindu and Vaalai to the combination consisting of prana and its vehicle the breath, the mind and consciousness. 

வைத்தியத் தயாரிப்பைப் போலத் தோன்றும் இப்பாடல் ஆன்மீக விளக்கமும் ஆகும்.  சித்தர் பாடல்கள் தூலப்பொருட்கள் நிலை, மனோ நிலை, ஆத்மநிலை என்ற மூன்று நிலைகளிலும் பொருள் தருவன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  வாசி யோகம்/சிவ யோகம் பற்றிய குறிப்புக்களுக்கு முனைவர் த. சுமநேந்திரன் அவர்களது அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் என்ற புத்தகத்தைப் படிக்கவும்.


பூரணம் என்று இங்கு குறிப்பிடப்படுவது பிரபஞ்சப் பிராணன் அல்லது பரவுணர்வு.  இதுவே அமிர்த ரசமாக அண்டகேசரி எனப்படும் துவாதசாந்தத்திலிருந்து கீழே இறங்குகிறது.  இதை விசுத்தி சக்கரத்தில் சேமிக்கவேண்டும்.  இல்லாவிட்டால் சூரிய மண்டலத்தில் விழுந்து அது வீணாகிவிடுகிறது.  இவ்வாறு விசுத்திக்கு இறங்கும் அமிர்த ரசத்தை மந்திரங்களுடன் மெதுவாக மூலாதாரத்துக்கு இறக்கவேண்டும்.  விசுத்திக்கு இறக்கிய அமிர்தத்தை ரவி பீஜத்துடன் சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இங்கு ரவி எனப்படுவது சூரிய மண்டலமாகும்.  அதற்கான பீஜமந்திரத்தை இங்கே அகத்தியர் குறிப்பிடுகிறார்.  இந்த பீஜம் உகாரமாகவும் இருக்கலாம். அகாரம் அக்னி மண்டலத்துக்கும் உகாரம் சூரிய மண்டத்துக்கும் மகாரம் சந்திரமண்டலத்துக்கும் உரியவை.  இவ்வாறு இறக்கிய அமிர்தம் மத்திக்கப்பட்டு அல்லது மத்தியில் உள்ள சுழுமுனை நாடியில் சேர்க்கப்பட்டு ரவியினால் இறுகுகிறது.  இது சதாசிவத்தின் அருளால் நிகழ்கிறது என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு மெழுகுபோல் இறுகிய அமிர்தத்துடன் சக்தி, சிவன், வாலையை சேர்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  மேலிருந்து கீழே இறங்கும் பிரபஞ்ச பிராணனுடன் உடலில் உள்ள பிராணன், மனம் மற்றும் உணர்வைச் சேர்க்கவேண்டும் என்று இதற்குப் பொருள்.

Monday, 13 June 2016

422. How to see the action of the poornam

Verse 422
செயலான செயலறிந்து செயலைக் காண
திறமான தீர்க்கமொன்று செப்பக் கேளு
மயலான மயக்கறுத்து மவுனங்கொண்டு
மகத்தான கேசரியாம் அண்டத்தேகி
சுயமான பூரணமாஞ் சோதித் தாயை
சுத்தமுடன் தான் வணங்கி தொழுது போற்றி
நயமாக வைத்துருமை செய்து கொண்டு
நாதாந்த பூரணத்தை நயமாய் வாங்கே

Translation:
To see the action of the amazing action
Listen to me tell you a firm method
Cutting away the delusion of maya, holding silence
Going to the macrocosm, the kechari
The pure, poorna, mother effulgence,
Saluting her, praising her, worshipping her
Holding her firmly
Receive the nadhantha poornam, ably.

Commentary:
Agatthiyar is describing a method to perceive the action of poornam or consciousness.  He says that Sakthi, the mother, the poornam should be worshipping, reaching the macrocosm, the kechari.  This means the dvadasantha or the spot in space, beyond the sahasrara.  This will grant the nadhantha poornam to the worshiper.


பூரணத்தின் செயலை எவ்வாறு காண்பது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார். பூரணம், சோதித்தாய் எனப்படும் சக்தியை அண்டம் எனப்படும் கேசரியை அடைந்து தொழுது பணிய வேண்டும்.  அவ்வாறு வழிபட்டால் நாதாந்த பூரணம் கிட்டும் என்கிறார் அகத்தியர்.  இங்கு அண்டத்தில் குறிப்பிடப்படும் இடம் துவாதசாந்தம் எனப்படும் சகஸ்ராரத்துக்கு மேற்பட்ட இடமாகும்.  இது உடலுக்கு அப்பால், வெளியில் இருக்கிறது.  இதனால், சக்தியின் அருளே ஒருவருக்கு உச்ச நிலையை அளிக்கிறது என்பது தெளிவாகிறது.

Sunday, 12 June 2016

421. Benefit of sakti siva vaalai puja

Verse 421
காரப்பா மனதறிந்து மனதைக் காத்து
கருணையுடன் சத்தி சிவ வாலை பூசை
நேரப்பா நேர்மையுடன் பூசை செய்தால்
நினைத்தபடி முடிக்கும்வகை கைக்குள்ளாகுஞ்
சாரப்பா சகலகலை கியானஞ் தோற்றுஞ்
சதாயோகமான சிவயோகந்தானாய்
நேரப்பா சிவயோகத் திறத்தால் மைந்தா
சிவசிவா பூரணத்தின் செயலைக் காணே

Translation:
Protect son, knowing the mind’s nature
The merciful siva sakthi vaalai puja
If you do it truthfully
The way to accomplish it will come under control
The sakala kalaa jnana will appear as
The eternal yoga of sivayoga
Due to the sivayoga, son,
Siva sivaa, see the action of poornam.

Commentary:
When the yogin performs the sakti siva vaalai puja the goal of attaining the supreme state, siva yogam will become possible.  The yogin will see the action of the poornam, the supreme consciousness.


தான் கூறியபடி ஒரு யோகி சக்தி, சிவ வாலை பூசையைச் செய்தால் உச்ச நிலையான சிவயோகம் கைக்கூடும்.  சகல கலை ஞானம் சிவ்யோகமாகத் தோன்றும்.  அதனால் அவர் பூரணம் எனப்படும் பரத்தின் செயலைப் பார்க்கிறார் என்கிறார் அகத்தியர்.

420. A danger in Srividya upasana

Verse 420
என்மகனே புலத்தியமா ரிஷியே அய்யா
இன்பரசந் தான் கொடுத்த மாதர் தன்னை
தன்மையுடன் மோகமதாய் சரசஞ் செய்தால்
தான் நினைத்த காரியங்கள் தவறுண்டே போம்
உண்மையென்ற மந்திரங்கள் உதவாதய்யா
உடலதிலே செந்தீயும் உடனே பத்தும்
வண்மைஎன்ற கூற்றவனும் உயிரை உண்பான்
மார்க்கமுடன் மனதறிந்து மனத்தைக் காரே

Translation:
My son, Pulathiya Maharishi!, Sir
The lady who gave the blissful rasa,
If you interact with her with desire/love
The goals will become flawed
The truth, the mantra will not help, sir,
The body will catch fire immediately
The lord of death will consume the soul
Knowing the nature of the mind, protect it.

Commentary:
Agatthiyar is cautioning a Sakthi upasaka about the problem that can happen during his practice.  In Srividya upasana the worshiper eulogizes Sakthi as Bala, a nine year old girl, as Sundari and beautiful maiden or Tripura Bhairavi, an old lady.  Agatthiyar advises Pulathiyar that it is safe to worship Sakthi as Bala, a little girl.  Otherwise, if he worships her as beautiful lady, he will be buffeted by desire towards her.  His goal will be messed up, he will chase the wrong goal.  Even mantra recitation will not help him as he will dig himself deeper and deeper into his wrong goal.  The body will be consumed by the heat, which Agatthiyar calls as verdant fire.  The sadhaka will lose his life.  All these will happen due to the mind, the seat of emotions, experiences.  Hence, he advises Pulathiyar to not embark on worshipping Sakthi as a lady but worship her as a little girl. 

This clarifies why Bala is worshipped as the first step in Srividya upasana.  Until the sadhaka has attained sufficient maturity he is not ready to go further.  Bala is considered as little girl of 3, 7 or 9 years old.  These numbers may correspond to the bhija akshara in her mantra that a sadhaka utters.

ஸ்ரீ வித்யா உபாசனையில் ஏற்படக்கூடிய அபாயத்தை அகத்தியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.  ஸ்ரீவித்யா உபாசனையில் தேவி, பாலை அல்லது சிறு குழந்தை, சுந்தரி அல்லது அழகான பெண், அல்லது திரிபுர பைரவி அல்லது வயதான பெண்ணாக வழிபடப்படுகிறாள்.  இவற்றில் பாலை வழிபாடே அபாயமற்றது என்று குறிக்கிறார் அகத்தியர்.  தகுந்த மனவுறுதி இல்லையென்றால் தேவியை அழகான பெண்ணாக வழிபடுபவர் தமது மனதில் மோகம் ஏற்பட்டு அவளை மோகிக்கத் தொடங்கி தனது இலக்கைவிட்டு வழுவிவிடுவார்.  மந்திர உச்சாடனங்கள் அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதில்லை.  அவரது உடலில் அக்னி அதிகரித்து எரிந்து போய்விடும்.  காலன் அவரது உயிரைக் குடித்துவிடுவான்.  இவையனைத்தும் மனதினால் ஏற்படுவதால் ஒரு சாதகர் மனதின் தன்மையை அறிந்து அதைப் பாதுகாக்கவேண்டும் என்று புலத்தியருக்குக் கூறுகிறார் அகத்தியர்.


ஸ்ரீவித்யா உபாசனையில் பாலை வழிபாடு ஏன் முதல் படியாக இருக்கிறது என்பதை இப்பாடல் காட்டுகிறது.

Friday, 10 June 2016

419. Bala

Verse 419
வாலை தீக்ஷை
கருத்தறிந்து கருணையுடன் கருவைக் கொண்டால்
காலசதி மேலசதி காணாது ஓடும்
திருத்தமுடன் பேரானந்தமும் நிலைநின்றாடும்
திருவான வாலையுட செந்தேனாலே
வருத்தமென்ற மாய்கைஎல்லாம் மாண்டு போகும்
மங்கையுட கொங்கையது வலுமை மெத்த
திருத்தியந்த மாதரசைப் பூசைபண்ணி
செம்மையுள்ள மாதாவாய் மகவாய் எண்ணே

Translation:
Vaalai deekshai
Knowing the idea and accept the essence with mercy,
The “kaalasadhi mela sadhi” will run away to oblivion
The great bliss will dance permanently
Due to the verdant honey of the vaalai, the thiru
All the sorrow, the maya will die
The breast of the lady is very strong
If that great lady is worshipped correctly
Consider her as the mother and as the child.

Commentary:
Agatthiyar is talking about Bala worship, the first step in SriVidya upasana, here.  Vaalai in Tamil is Bala in Sanskrit.  Thus, Vaalai Deekshai is Bala deeksha.  Agatthiyar says that when one understands the essence of the Siddha philosophy and accept the essence then time or space will not limit the person.  He calls them as sadhi or evil plot.  These will run away.  The person will experience great bliss. There will be no sorrow as the maya manifests as sorrow will become nonexistent.  The “breast of the lady” means the essence she offers.  Tamil Siddhas and other saints describe Sakthi as the mother who feeds her milk to the devotee.  This means she gives her essence to her child, the devotee, the yogi.  Agatthiysr says that this lady, Vaalai should be worshipped as a mother and as a child.

Bala is considered as a nine year of girl. Sundari is a beautiful maiden and Tripura Bhairavi is an old woman.  Agatthiyar is considered as the proponent of Sri Vidya upasana.  Here he is talking about the first step in this upasana.  One cannot completely describe Bala or the upasana here.  Please refer to the sites given below to learn further.   Suffice to say that Bala is the prana of Sri Lalitha.  She is said to reside at the base of Devi’s peeta. 

இப்பாடலில் அகத்தியர் பாலா திரிபுர சுந்தரி  வழிபாட்டைக் குறிக்கிறார்.  பாலா என்பவளே தமிழில் வாலை எனப்படுகிறாள்.  இவ்வாறு வாலை தீட்சை என்பது பாலா தீட்சை ஆகும்.  ஒருவர் சித்தர் தத்துவத்தின் கருத்தை அறிந்து அதன் கருவை ஏற்றுக்கொண்டு நின்றால் காலமோ இடமோ அவரைக் கட்டுப்படுத்தாது என்கிறார்.  இதுவே காலசதி மேல சதி என்று குறிப்பிடப்படுகிறது.  இந்த யோகி மாயையான துன்பத்தை அனுபவிப்பதில்லை.  “மங்கையின் கொங்கை” வலுவானது என்கிறார் அகத்தியர்.  பொதுவாக ஞானிகளின் பாடல்களின் சக்தியின் கொங்கை குறிப்பிடப்படுவதற்குக் காரணம் சக்தி தனது பாலை, உயிர்ச்சத்தை, சாதகனுக்கு ஊட்டுகிறாள் என்பதை விளக்குவதற்கே.  இந்த மங்கையை ஒரு தாயாகவும் மகவாகவும் வழிபடவேண்டும் என்கிறார் அகத்தியர். 
பாலா என்பவள் ஒன்பது வயதுக் குழந்தையாகக் குறிப்பிடப்படுகிறாள்.  பாலையின் வழிபாடு ஸ்ரீ வித்யா சாதனையின் முதல் படியாகும்.  அகத்தியர் ஸ்ரீவித்யை உபாசனையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.  ஸ்ரீவித்யை உபாசனையையும் பாலையைப் பற்றியும் ஒருவர் குருமுகமாக அறிந்துகொள்ள வேண்டும்.  இதைப் பற்றிப் பொதுவான விவரங்களை அறிய கீழ்காணும் தளங்களைப் பார்க்கவும்.  பாலை என்பவள் ஸ்ரீ லலிதாம்பிகாவின் பிராண சக்தி, அவள் தேவி பீடத்தின் கீழ்ப்பகுதியில் குறிக்கப்படுகிறாள் என்பதை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

410. Akaara, bindhu

Verse 410
பாரப்பா நிருவிகற்ப மார்தான் காண்பார்
புத்தியுள்ள புலத்தியனே பகரக் கேளு
காரப்பா அகாரமென்றால் சிவமதாச்சு
கருணைவளர் சிவமதுதான் விந்து விந்து
நேரப்பா விந்துநிலை அறிந்துகொள்ள
நிசமுனக்கு இல்லையடா நிசத்தைக் கேளு
சாரப்பா சற்குருவின் இடமே சென்று
சங்கையுடன் தானவனாய்த் தன்னைப் பாரே

Translation:
See the nirvikarpam.  Who can see it?
The knowledgeable Pulatthiya!  Listen to me,
Understand, akaara is the sivam.
The sivam that nurtures mercy is vindhu vindhu
To understand the state of vindhu
You do not know the truth, listen to the truth,
Associate yourself with a satguru,
See yourself as him.

Commentary:
Agatthiyar explains that akaara is sivam or consciousness.  It is the bindhu, the seed or the primordial form.  He tells Pulathiyar that it is impossible to know the truth about the bindu unless one hears about it from a guru.  He advises Pulathiyar to go to a satguru and remain with him to understand the truth.


அகாரம் என்றால் சிவம், பரவுணர்வு என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார். இந்த சிவமே விந்து என்றும் இதைப் பற்றிய உண்மையை அறிய ஒருவர் சத்குருவை அடைந்து தான் அவனே என்று பார்க்கவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இந்த உண்மையை குருவின் உதவியில்லாமல் ஒரு தானாக அறியமுடியாது என்றும் அவர் கூறுகிறார். 

418. Nadha continued

Verse 418
ஆச்சப்பா கெவுனரச மிதுதானாச்சு
ஆதியென்ற கற்பமது மிதுதானாச்சு
நீச்சப்பா உபதேச மிதுதானாச்சு
நிசமான சத்திசிவ மிதுதானாச்சு
பேச்சப்பா பேசுவது மிதுதானாச்சு
பேசாத மவுனம் மிதுதானாச்சு
காச்சப்பா தெரிசனமு மிதுதானாச்சு
கருணை வளர்வாலையுட கருத்துத்தானே

Translation:
Yes son, this became the essence of kevunam
It became aadhi the karpam
It became the upadesam
It became the truthful sakthi sivam
It became the speech
It became the speechless silence
It became the dharisana (vision)
It is the focus of the merciful vaalai.

Commentary:
Agatthiyar continues to describe the nadha as the kevunam or travel in the subtle plane, the aadhai karpam, the upadesa, sakthi, sivam, speech, speechless silence, the various visions and the focus of vaalai.

நாதம் என்பது கெவுனம் அல்லது சூட்சுமப் பயணம். அதுவே ஆதி கற்பம், உபதேசம், சிவம், சக்தி, பேச்சு, பேச்சற்ற மௌனம், பல காட்சிகள், வாலையின் கவனம் என்கிறார் அகத்தியர்.