Wednesday, 11 February 2015

22. Sites of action of these preparations and procedures and their result

Verse 22
கோடியென்ற வெகுகோடி தொழில்களெல்லாங்
குறித்தபடி சௌமியமாய்க் காணலாகும்
நாடி மனங் கொண்டு குறி கண்டாயானால்
நந்தி பிரகாசமது நயனந்தன்னில்
ஆடிநின்ற திரு நடனங் காணலாகும்
அப்பனே சக்கரங்கள் தோணும் பாரு
சூடிநின்ற சக்கரத்தின் இனங்கள் தன்னை
சொல்லுகிறேன் வேத முறை சூக்ஷந்தானே

Translation:
The millions of actions
Will be perceived as beneficial.
Seeking it, if you see the sign with the mind
The brilliance of Nandi in the eyes (will become visible)
The sacred dance/ the dance of the sacred will be seen
Son, the cakras will appear, see
The groups that the cakra adorned/the group of cakras adorned
I will tell them, the method of veda, the subtlety.

Commentary:
Herbo metallic preparations play a very important role in Siddha marga.  These preparations are used as aids in attaining higher states of consciousness.  Hence, after describing the procedures and preparations Agatthiyar talks about their site of action the cakras. 

He says that one has to seek the supreme state with the mind.  Mind serves as both a facilitator and a deterrent.  One has to seek the states of higher consciousness with the help of the mind and ultimately lose the mind also.  If one does it, the brilliance of the supreme state that of Nandi will become visible.  The dance of the Divine, the active manifestations will reveal their truth.  The cakra, the points of emergence of these principles and the principles that are present there will become visible.  Agatthiyar says this is supreme subtlety and he will reveal these methods of Veda, knowledge as well as transformation.


மூலிகைத் தயாரிப்புக்கள் சித்த மார்க்கத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.  அவற்றின் உதவியால் உயருணர்வு நிலையைப் பெறலாம்.  அதனால் தயாரிப்புக்களையும் சரக்குகளையும் கூறிய பிறகு அவற்றின் செயல் தளங்களான சக்கரங்களைப் பற்றி அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  இந்த சக்கரங்களின் ஊடே உணர்வுநிலைகளின் எழுச்சி ஏற்படுகிறது.  அதை மனத்தின் உதவியால்தான் செய்ய முடியும்.  அதனால் அகத்தியர் மனத்தினால் குறியைப் பார்க்கவேண்டும், அப்போது நந்தியின் பிரகாசம் கண்ணில் தென்படும் என்று கூறுகிறார்.  இறைவனின் திருநடனமான செயல்பாடுடைய உலகம் தென்படும்.  இவை நடைபெறுவது சக்கரங்களில்.  அதனால் சக்கரங்களும் அவை பூணும் தத்துவங்களும் புலப்படுகின்றன.  இதுதான் சூட்சுமம், வேத வழி என்று அகத்தியர் கூறுகிறார்.  வேதவழி என்பது வேதம் கூறும் வழி என்றும் வேதை அல்லது ரசவாத வழி என்றும் இரு பொருள்களைத் தருகிறது.

21. Magical procedures

Verse 21
கணக்கான சேர்மானஞ் சரக்கு வைப்பு
கருணையுள்ள ரத்தினங்கள் வைப்பு மார்க்கம்
புணக்கான சல்லியங்கள் ஒட்டியங்கள்
புலி ரத்தம் ஏவல் பில்லி சூன்னியங்கள்
தனக்கான அழகிரியிலே அனந்த மார்க்கந்
தன்மையுள்ள தெரிசனங்கள் கோடான கோடி
பிணக்க முள்ள சக்கரங்கள் ஆவேசங்கள்
ஏகாந்த அஞ்சனங்கள் கோடி பாரே

Translation:
The proportional combinations, the preparations
The merciful gemstones, their usage
The obstacles and the magical ways to remove them
The enchantment of self, and several methods
The visions, millions, millions
The negative cakra the enhancements
Special eye ointments, millions millions.

Commentary:
After describing the various preparations and procedures Agatthiyar lists the mystical procedures.  The enchantment he mentions in this verse is an important step that one should be cautious about. It has the tendency to draw one into it and keep him immersed in this state thinking this is the ultimate state.  Agatthiyar warns that this should be avoided.


பலவித தயாரிப்புக்களையும் அவற்றின் சரக்குகளையும் குறிப்பிட்ட பிறகு சில சித்து முறைகளை இங்கே அகத்தியர் குறிப்பிடுகிறார்.  இப்பாடலில் குறிப்பிடப்பட்ட லகிரி என்பது தியானத்தில் முக்கியமான ஒன்று.  சமாதி நிலையை அடையும் யோகி இந்த லகிரி அல்லது ஆனந்த ஆஸ்பதம் என்பதில் மூழ்கிவிடாமல் இருக்க பெரும்முயற்சி செய்யவேண்டும்.  

20. Procedures

Verse 20
போக்கான வைப்புமுறை பாஷாணங்கள்
புகழான உபரசங்கள் காரசாரம்
வாக்கான குளிகையுடன் கெவுனசித்தி
மகத்தான லோகமா ரணங்களோடு
தாக்கான சத்துருமித் துருக்கள் தானுத்
தன்மையுடன் குருமுடிக்கும் பாகந்தானுந்
தூக்கான புடபாகம் எரிப்பான் பாகந்
துடியான கைபாகங் கணக்குந்தானே

Translation:
The method of processing, the paashanam
The uparasa (the solutions) kaara saaram (the essence
The gevana siddhi (power to fly in the sky) with guligai (magical potion)
Along with the worldly maaranam (willing death)
Compounds that act positively and negatively
The part that performs the gurumudi (last step)
The sublimations the burning
The amount for addition.

Commentary:
This verse talks about different types of processing that Siddhas practice.  This is not relevant to the aim of this commentary.  Suffice to say that these methods have philosophical significance also.  However, one has to experience them.


இப்பாடலில் சித்தர்கள் கையாளும் பதன முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  இந்த முறைகள் தத்துவ ரீதியாகவும் முக்கியமானவை.  இவற்றை ஒருவர் அனுபவத்தால் உணரவேண்டும்.

19. Preparations

Verse 19
இன்னங் கேள் சொல்லுகிறேன் ஜெயநீர் போக்கு
இன்பமுள்ள திராவகத்தின் கருவின் மார்க்கஞ்
சொன்னதொரு கட்டினாங்கள் உருக்கினங்கள்
சுகமான பற்பமொடு செந்தூரங்கள்
வர்ணமுள்ள களங்குடனேமெழுகு மார்க்கம்
மகத்தான் தூபமொடு தீப வேதை
என்ன வொண்ணாத் தைலமொடு லேகியங்கள்
ஏகாந்த மானதொரு லகிரி போக்கே

Translation:
Translation:
Here some more, I will tell about the movement of Jayaneer
The path of the essence of tinctures
The types of solidifications, melting
Ashes, reddened preparations
The colorful waxes, compounds
The supreme fragrance, lamp and alchemy
The unthinkable oil extractions and semisolids
The path of the singular bliss and its path.

Commentary:
This verse lists all the medicinal preparations that Agathiyar will describe in this work.  As the aim of this commentary is only to address the philosophical verses we will not elaborate on these.  It is also beyond the capacity of the author.  Several of these preparations are explained at Siddharkal Rajjiyam.  Please check the blog for information. For example, chendooram are reddened preparations where components are fried, roasted, powered and processed so that they become red.  There are four types of chendooram- mruthyunjaya, aya chendooram, ayaveera chendhooram and chanda maarutha chendooram.  Details about the preparations and their uses are given in http://www.siththarkal.com/2012/08/sentoram.html


அகத்தியர் இந்த நூலில் பல மருந்துத் தயாரிப்புகளைக் குறிப்பிட்டுள்ளார்.  இந்த விளக்கவுரையின் நோக்கம் அவரது தட்துவக்கருத்துக்களைப் பார்ப்பது மட்டுமே என்பதால் இந்தப் பாடல்களுக்கு விளக்கங்கள் தரப்படவில்லை.  இவற்றை விளக்குவதற்கு இந்த எழுத்தாளருக்குத் தகுதியில்லை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பல தயாரிப்புக்கள் சித்தர்கள் ராச்சியம் என்ற வலைத்தளத்தில் விளக்கப்பட்டுள்ளன.  விவரங்களை அங்கே காணவும். http://www.siththarkal.com/2012/08/sentoram.html

Tuesday, 10 February 2015

18. topics to be discussed -2

Verse 18
தானான யோகமொடு சமாதி தீக்ஷை
சத்தியொடு சிவ தீக்ஷை வாலை தீக்ஷை
தேனான பூரணமாம் மவுன தீக்ஷை
திருவான பஞ்சகண தீக்ஷையோடு
ஊனான முப்பூவாம் வழலை தீக்ஷை
உண்மையுள்ள வினோத வகை மோடியங்கம்
பூனான மையுடனே திலதவாடை
போக்கான மறைப்புடனே இன்னங் கேளே

Translation:
Along with yoga, Samadhi deeksha
Sakthi, siva and vaalai deeksha
The deeksha of silence, that of fully complete,
Along with the deeksha of five elements
The vazhalai deeksha which is the muppoo, the body,
The truthful strange ways of “modiyangam”
The unction, the thilathavaadai
Listen about concealment and about more.

Commentary:
Agatthiyar is talking about the various topics that he will be talking about in this work.  They involve several types of deeksha or initiations such Siva deeksha, Sakthi deeksha, Vaalai deeksha etc.  Initiations refer to specific procedures that should be followed to attain a certain state.  They are like steps that one goes through before reaching the supreme state. Agattiyar says that he will also discuss herbal preparations in this work.


அகத்தியர் தான் இந்த நூலில் கூறப்போகும் விஷயங்களை இப்பாடலிலும் தொடருகிறார். சௌமிய சாகரம் என்ற இந்த நூலில் அவர் பல வகையான தீட்சைகளையும் மூலிகை தயாரிப்புக்களையும்  கூறப்போகிறேன் என்கிறார். 

17. Topics that will be discussed in Saumya sagaram-1

Verse 17
கருவான சௌமிய சாகரத்தை மைந்தா
கருணையுடன் விளம்புகிறேன் கருவைக் கேளு
திருவான ஆதார மூலசூக்ஷஞ்
செப்பரிது தத்துவத்தின் வழியின் நேர்மை
உருவான தீக்ஷையொடு பூசை மார்க்கம்
உத்தமனே அஷ்ட கன்மஞ் சித்து மூலம்
குருவான கற்பமொடு மந்திரசித்து
கூர்மையென்ன யோகமொடு ஞானந்தானே

Translation:
Son, the essence, the Saumya Saagaram
I will tell you with mercy, listen to the essence
The sacred adhaara mula subtlety
The difficult to explain principle’s path is straight
Along with deeksha, pooja
The good one! The ashta karma, sitthu, the origin
Along with the guru, the karpam, mantra and sitthu
The sharp yoga and jnana along with it.

Commentary:
Agatthiyar is starting to describe the essence of Saumya sagaram.  He will describe the esoteric adhaara moolam or the supporting origin or muladhara and the principles or tattva will go in its path, that of sushumna, is straight and honest.  He will describe the deeksha marga, the pooja, the ashta karma, karpam, mantra, mystical accomplishments or sitthu, yoga and jnana.


அகத்தியர் இப்பாடலிலிருந்து சௌமிய சாகரத்தில் உள்ள விஷயங்களைக் கூறத் தொடங்குகிறார்.  அவர் இந்த நூலில் ஆதாரமூலமான மூலாதாரத்தைப் பற்றியும் அதன் வழியான சுழுமுனையில் செல்லும் தத்துவங்களைப் பற்றியும் தீக்ஷை, பூஜை, அஷ்ட கர்மம், சித்து கற்பம் மந்திரம், யோகம் மற்றும் ஞானத்தைப் பற்றியும் கூறப்போகிறார். 

Friday, 6 February 2015

16. One can get gold and siva yogam from Saumya saagaram

Verse 16
ஆச்சப்பா மேருகிரி தீபம் போலே
அரகரா சௌமிய சாகரந்தான் பாரு
நீச்சப்பா கடினமென்று நீ மலைக்க வேண்டாம்
நேர்மையுள்ள கைபாகம் முறை பாகங்கள்
பாச்சப்பா வெகுதெளிவு இந்நூல் போலே
பகராது முன் சொன்ன சாஸ்திரங்கள்
காச்சப்பா இந்நூலைப் பதனம் பண்ணி
கனகமுடன் சிவயோகங் கருத்தாய்ப் பாரே

Translation:
Like a lamp on the the Merugiri
Araharaa, See the saumya saagaram,
You need not fatigue thinking it is too difficult,
The truthful amounts and procedure (how to do something)
Are very clear in this book
The sastras uttered before will not say it clearly like this
Condense this book after processing it,
You will see gold and sivayogam.

Commentary:
Agathiyar assures the reader that he should not panic or give up thinking that the procedures and the philosophy mentioned in the Saumya sagaram are too difficult.  He tells that this book explains “kai bhaagam murai bhaagam”  well.  These terms are generally used in Siddha medicinal preparations.  It also means the procedure for any process.  Agatthiyar tells that none of the sastras composed before will explain these so clearly and hence one should understand this book and contemplate upon it like preparing the medicine by processing it (padhanam pannu) and concentrating it by boiling.  He concludes this verse with a mystical line saying one can get gold and siva yogam if one follows the procedure described in this book.

Tamil Siddha alchemy serves two purposes, one to turn base metal into gold and the other to turn the human body from its material state to that of supreme golden state, to turn the limited soul into all pervasive supreme existence.  The last line indicates this idea. Hence, the verses that come later describing alchemy will be looked at only from the philosophical angle as the purpose of this commentary is to transform material body into divya deha and not creating gold.

இந்த நூலின் பெருமையைக் கண்டு ஒருவரும் அதைக் கற்பது, செயல்படுத்துவது கடினம் என்று விட்டுவிடவேண்டாம் என்கிறார் அகத்தியர். இந்த நூலில் கைபாகம் முறைபாகம் ஆகியவற்றை நன்றாக விளக்கியுள்ளேன் என்றும் அவர் கூறுகிறார்.  கைபாகம் முறைபாகம் என்ற சொற்கள் பொதுவாக சித்த மருத்துவத்தில் ரசவாதத்தில் பயன்படுத்தப்படுகின்றன.  இது, பொருட்களின் அளவையும் அவற்றை எவ்வாறு மருந்தாக மாற்றுவது என்ற செயல் முறையையும் குறிக்கின்றன.  அதனால் பிற சாத்திரங்களைப் போல இல்லாது சௌமிய சாகரத்தில் அளவுகளும் முறைகளும் நன்றாக விளக்கப்பட்டுள்ளன அதனால் ஒருவர் பயப்படவேண்டாம் என்று இதற்குப் பொருள்.  இந்த நூலை சித்த தயாரிப்பைப் போல நன்றாகப் பதனப்படுத்தி காய்ச்ச வேண்டும் என்கிறார் அகத்தியர்.  அவ்வாறு செய்தால் ஒருவர் கனகத்தையும் சிவயோகத்தையும் பெறலாம் என்று ஒரு வாக்கியத்துடன் அவர் இந்தப்பாடலை முடிக்கிறார்.


சித்தர்களின் ரசவாதம் கீழான உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மற்றும் கீழான பருப்பொருளாலான உடலை தங்கமேனியாக மாற்றுவது, அளவுக்குட்பட்ட உடலை எங்கும் பரவி நிற்கும் இருப்பாய் மாற்றுவது என்ற இரண்டு குறிக்கோள்களையும் கொண்டது.  அதனால்தான் அகத்தியர் இந்த நூலினால் ஒருவர் தங்கத்தையும் சிவயோகத்தையும் பெறலாம் என்கிறார்.  இனி வரும் பாடல்களில் உள்ள ரசவாத முறைகளை நாம் தத்துவ நோக்கிலிருந்து பார்க்கலாம்.  இந்த விளக்கவுரையின் குறிக்கோள் தூல சரீரத்தை திவ்ய சரீரமாக மாற்றுவது எவ்வாறு என்று அறிவது தான்.